Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம்ஸ்ட்ராங்கை வீழ்த்தியிருக்கலாம்.. எங்களை மீறி மெட்ராஸ ஆள முடியாது.. அனல் தெறிக்க பேசிய பா.ரஞ்சித்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு சூழ்ச்சிகள் உள்ளது என்றும் இந்த படுகொலையை எளிதாக கடந்து விடலாம் என நினைக்காதீர்கள் எனவும் இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். மேலும் "இது ஒரு எச்சரிக்கை என்று மெட்ராஸை எங்களை மீறி யாரும் ஆட்சி செய்ய முடியாது" என்றும் எச்சரித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இத வழக்கு தொடர்பாக கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், அருள், சிவசக்தி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

armstrong pa ranjith

இந்த நிலையில் காவலர்களை தாக்கிவிட்டு தம்பிக்க முயன்றதாக கூறி திருவேங்கடம் என்பவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

அதேபோல ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல தாதாவின் மனைவியும் வழக்கறிஞருமான மலர் கொடி மற்றும் ஹரிஹரன் ஆகியோரை செம்பியம் போலீசார் கைது செய்து உள்ளனர். இதுவரை 3 கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதாவது ஏற்கெனவே கொலை நடந்ததும் திமுகவின் அருள், பாஜகவின் செல்வராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 17ம் தேதி அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு பகுதி துணைச் செயலாளர் மலர்க்கொடி கைதான நிலையில், சென்னை பாஜக மகளிர் அணி துணைச் செயலாளர் அஞ்சலையை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே இந்த நிலைமை எனில் சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு இருக்குமா? என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தனர். இது தொடர்பாக விசாரணையில் அரசியல் தலையீடுகள் அதிகம் இருக்கும் என்றும், எனவே விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் பாஜக வலியுறுத்தியிருந்தது.

இப்படி இருக்கையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தலைமையில் எழும்பூர் பகுதியில் இன்று பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் அரசியல் கட்சி தொண்டர்கள், அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய பா.ரஞ்சித், மெட்ராஸை் எங்களை மீறி யாரும் ஆட்சி செய்ய முடியாது என்று எச்சரித்துள்ளார்.

"ஆம்ஸ்ட்ராங்கிற்காக காசு கொடுத்து கூட்டத்தை கூட்ட முடியாது. காசு கொடுத்து இங்கு இருப்பவர்கள் யாரையும் கூட்டி வரவில்லை. திமுக மீது குற்றம் சுமத்துவதற்காக இந்த பேரணி நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் எழுதுகின்றனர். அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்.

ஆம்ஸ்ட்ராங்கை ரவுடி என்று கூறி சமூக வலைதளங்களில் எழுதிய அயோக்கியர்கள் யார்? அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ரவுடி என்று சொல்வீர்களா? அப்படி சொன்னால் நாங்கள் ரவுடிகள் தான். இந்த படுகொலையை எளிதாக கடந்து விடலாம் என நினைக்காதீர்கள். இது ஒரு எச்சரிக்கை. ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை நாங்கள் ஓய மாட்டோம்.

காவல்துறை விசாரணையை நாங்கள் நம்புகிறோம். ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு சூழ்ச்சிகள் உள்ளன. சென்னையை பொருத்தவரை ஆம்ஸ்ட்ராங்கை மீறி எதுவும் நடக்காது. சென்னையில் மட்டும் 40% தலித் மக்கள் உள்ளார்கள். நாங்கள் அரசியலற்று இருக்கலாம். ஆனால் அரசியல் உடைவர்களாக மாறும்பொழுது நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கும் நிலை ஏற்படும்.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அவர் இந்து மதத்திற்கு எதிராக போராடியவர். பௌத்த மதத்தை தனது வாழ்க்கை நெறியாக கொண்டவர். அவர் பௌத்தத்திற்கு மாறிய பிறகு, அவருடன் அதிகமான நபர்களை வைப்பதை தவிர்த்தார். இந்த சூழலில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேயர் பிரியா ராஜன், கயல்விழி செல்வராஜ் எப்படி அமைச்சர்கள் ஆனார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ரிசர்வேஷன் இருந்ததால் தான் பிரியா ராஜன் மேயராகவும், கயல்விழி செல்வராஜ் அமைச்சராகவும் பதவி கிடைத்தது.

மேயர் பிரியா ராஜன் மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இருவரும் ஏன் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு குரல் கொடுக்கவில்லை. நீங்கள் திமுக-வில் இருப்பதால்தான் குரல் கொடுக்கவில்லையா? சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் எப்பொழுது இதற்காக குரல் கொடுப்பீர்கள்? குரல் கொடுக்கவில்லை என்றால் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு செல்லுங்கள். நாங்கள் ஒன்றும் அடிமை இல்லை. எங்களுக்கு பயம் ஏதும் கிடையாது. பயமில்லாமல் நாடாளுவோம். பயம் இல்லாமல் ஒன்றிணைவோம்.

திருமாவளனுக்கு எதிராக நான் ஒருபோதும் இருக்க மாட்டேன். அவரை ஒருபோதும் விட்டு விடமாட்டோம். அவருடன் தான் இருப்போம். பாஜகவிற்கு நேர் எதிரானவர்கள் நாங்கள். எங்கள் பின்னாள் வேறு ஒருவர் இருக்கிறார் என்று பிம்பத்தை உருவாக்காதீர்கள். பல ஆணவக் கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நான் திமுகவிற்கு எதிராக பேசவில்லை. அனைத்துக் கட்சிக்கு எதிராக பேசுகிறேன். அனைத்து கட்சிகளும் எங்களை ஏமாற்றுகிறார்கள்.

அரசியல் கட்சிகள் எங்களுக்கு என்ன செய்தார்கள். எங்கள் தலைவர் இறந்த உடனே அவரை ஊருக்கு வெளியில் அடக்கம் செய்வது தான் திட்டமா? ஆம்ஸ்ட்ராங்கிற்கு சென்னைக்குள் மணிமண்டபம் கட்ட வேண்டும். சமூக நீதியை பின்பற்றும் திமுகவிற்கு ஒரு வேண்டுகோள். ஆம்ஸ்ட்ராங்கிற்கு சென்னையில் மணிமண்டபம் கட்ட திமுக அரசு அனுமதிக்க வேண்டும். திமுக, அதிமுக அனைத்து கட்சிகளுமே எங்களுக்கான பிரதிநிதித்துவத்தை அளிக்கவில்லை.

ரிசர்வேஷன் மூலம் எம்பி, எம்எல்ஏ ஆனவர்கள் எங்கள் பிரச்னையை ஒருபோதும் கேட்கவில்லை. அவர்களை பதவியில் இருந்து நீக்குங்கள். மற்ற ஜாதி பிரச்னைகளும், தலித் ஜாதி பிரச்னைகளும் வேறு வேறு. இரண்டையும் ஒன்றாக அணுகாதீர்கள். உயர்சாதி அடக்கு முறையும் எஸ்சி, எஸ்டி அடக்கு முறையும் வேறு வேறு.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு சூழ்ச்சிகள் உள்ளது. இந்த படுகொலையை எளிதாக கடந்து விடலாம் என நீங்கள் நினைக்காதீர்கள், இது ஒரு எச்சரிக்கை. மெட்ராஸை எங்களை மீறி யாரும் ஆட்சி செய்ய முடியாது" என்று பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+