கிழிச்சு தொங்கவிட்ட பா.ரஞ்சித்! “வெட்டுன 10 பேர் பாவம்..நாங்க காரணமா?” நாங்குநேரி வன்மத்துக்கு பதில்
சென்னை: நாங்குநேரியில் சாதிவெறியால் மாணவன் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு சாதிக்கு எதிராக படம் எடுத்த இயக்குநர்கள் காரணம் என்று ஒரு தரப்பு பேசி வரும் நிலையில், அது பற்றி இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது மனம் திறந்து உள்ளார்.
பிரபாகரன் எழுதிய அடையாற்றுக்கரை புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், "இன்று ஒரு பார்வையை ஏற்படுத்தியுள்ளார்கள். என்னவென்றால் பிரபாகரன் சென்னையில் உள்ள பூர்வக்குடிகள் பற்றி எழுதியுள்ளார். ஒருவேளை நாளை பிரபாகரன் கலவரம் செய்யும் விருப்பத்தின் அடிப்படையில் இந்த புத்தகத்தை எழுதியதாக சொல்வார்கள்.

சென்னையின் அமைதியை கெடுக்கும் வகையில் எழுதப்பட்ட நாவலாக கூட இது பார்க்கப்படலாம். பூர்வக்குடிகள் மீது பெரிய அக்கறை இருக்கலாம். ஆனால், பூர்வக்குடிகளை இங்கிருந்து விரட்டிவிடுங்கள் என்று பிரபாகரன் சொல்வது அயோக்கியத்தனமாக நாளை தெரியப்படலாம். அதுவரை இவர்களுக்கு எந்த பார்வையுமே இதுபற்றி இருந்திருக்காது.
போட் கிளப் பற்றி யாராவது கவலைப்பட்டு இருப்பார்களா? பக்கிங்காம் கால்வாய் ஓரம் உள்ள கட்டிடங்கள் பற்றி யாராவது கவலைப்பட்டு உள்ளார்களா? அதை ஏன் அகற்றவில்லை என்ற கேள்வி யாருக்காவது வந்துள்ளதா? அந்த ஆற்றங்கரையோரம் இருந்த பல குடியிருப்புகள் காணாமல் போயுள்ளது. அதுபற்றி யாராவது யோசித்தார்களா?
ஆனால், பிரபாகரன் தனது எழுத்தின் மூலமாக அந்த யோசனையை சொல்லி கலவரத்தை தூண்ட நினைக்கிறார் என்ற எண்ணம் வந்து சேரும் வாய்ப்பு உள்ளது. அந்த பார்வையைதான் இன்று உருவாக்கி உள்ளார்கள். யார் ஆற்றை ஆக்கிரமித்தார்கள்? ஆறு சுத்தமாக்கப்பட்டு அங்கிருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளார்கள் என்ற பார்வை சரியான இடத்தில்போய் சேரவும் இல்லை. அதை யாரும் கேட்கவும் இல்லை. அதைபற்றி எந்த விவாதமும் வந்ததும் இல்லை.
ஆனால், அடையாற்றுக்கரை என்ற நாவலில் இப்படி ஒரு உண்மையை சொல்வதன் மூலமாக நாளை பல பிரச்சனைகள் ஏற்படலாம். நாளை 10 பேர் வீட்டுக்குள் புகுந்து வெட்டிவிட்டு வந்துவிடுவார்கள். வெட்டியதற்கு பிறகு இங்குள்ள முற்போக்காளர்கள் என்ன சொல்வார்கள் என்றால்,
'இதற்கு முக்கிய காரணம் பிரபாகரன்தான். வேறு யாருமே கிடையாது. ஏனென்றால் அவர் எழுதாமல் இருந்தால் நாங்கள் எல்லாம் அண்ணன் தம்பியாகதானே பழகி இருப்போம். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே.
நாங்கள் இதுவரை வேற்றுமையே பார்த்தது இல்லையே. அப்படி யோசித்ததே இல்லை. இதுவரை எங்கள் இலக்கியங்கள் யாரையும் தவறாக பேசியதே கிடையாதே. எல்லோரையும் நாங்கள் மனிதர்களாகதானே பாவித்து இருக்கிறோம். இதுவரை எங்களுடைய எழுத்துக்களில் யாரையும் வேற்றுமையாக காட்டியதே இல்லையே. இங்குள்ள சென்னை பூர்வக்குடி மக்களை தவறாக சித்தரித்ததே இல்லையே.' என்பார்கள்.
பல ஜாம்பவான்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் பற்றி பேசினால் அது பெரிய விவாதப்பொருள். சென்னையில் சேரிகளில் இருந்து வரும் ஒருவருடைய பின்புலம் என்னவாக உள்ளது? அவர்களை பற்றி இவர்கள் என்ன பார்வையை உருவாக்கி வைத்துள்ளார்கள்? அது இல்லை என்று எழுதுவதே குற்றம். நீ இல்லை என்று எப்படி சொல்லலாம் என்கிறார்கள்.
'சென்னை எங்களுடைய ஊர் என்று நாங்கள் யோசித்ததே இல்லையே.. நீங்கள் எப்படி உரிமைக் கோரலாம். அது தவறு. அரசு உங்களுக்கு நல்ல இடத்தைதானே கொடுத்துள்ளார்கள்' என்கிறார்கள்.
ஒரு படைப்பு எந்த நோக்கத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது? அது அரசியல் சூழல், இங்குள்ள பிரச்சனை, அதன் உண்மைத்தன்மை பற்றி பேசுகிறது? என்று பார்க்க வேண்டும். 'அந்த உண்மையை நீ பேசாதே.. அதை பேசினால் இங்கு கலவரம் வரும். கலவரம் வந்தால் நீ தான் குற்றவாளி. நீதான் சொறிந்துவிட்டாய். அதனால் அவனுக்கு அரிப்பு வரும். அவன் வெட்டிட்டான்.
பாவம் அந்த சின்னப்பய. வெட்டுப்பட்டவன் இல்லை. வெட்டிய 10 பேர் பாவம். ஏனென்றால் அவனுக்கு எதுவுமே தெரியாது. பிரபாகரன்தான் புத்தகம் எழுதி தூண்டிவிட்டார்.' என்பார்கள் அரசாங்கம் வெட்டுப்பட்டவனை படிக்க வைக்கும்." என்றார் நையாண்டியாக.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications