Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடுதலை சிகப்பிக்கு ஆபத்து.. பாஜக தலைவர் மீது இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மலக்குழி மரணங்கள் தொடர்பான கவிதை வாசிப்பில் ராமரை இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட கவிஞர் விடுதலை சிகப்பியையும் அவரது குடும்பத்தாரையும் அச்சுறுத்தும் தொனியில் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதுகாப்பு அளித்திடவும் வலியுறுத்தி இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, "கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த இலக்கிய நிகழ்வில் விடுதலை சிகப்பி என்கிற புனைபெயரில் எழுதிவரும் கவிஞர் விக்னேஸ்வரன் 'மலக்குழி மரணம்' எனும் தலைப்பில் கவிதை ஒன்றை வாசித்திருந்தார்.

Pa.Ranjiths Neelam gave Complaint against BJP leader theatened Viduthalai Sigappi

அக்கவிதை தங்களது மனதைப் புண்படுத்துவதாகக் கூறி பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் விடுதலை சிகப்பி மீது அபிராமபுரம் காவல் நிலையத்தில் IPC Sections 153 (provocation with intent to cause riot), 153A 0d (promoting religious enmity) 295 A (outraging religious sentiments), 505 (1(16) (inciting fear or alam among the public, and 505 (2) (promoting enmity between classes) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வழக்கை நாங்கள் சட்ட ரீதியாகச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், சிவகங்கை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் மேப்பல் ம.சக்தி என்கிற சத்தியநாதன் ஊடகங்களுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியில் விடுதலை சிகப்பி அவர்களுக்குத் தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சொன்னதோடு காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒரு இலட்சம் நபர்களைத் திரட்டி விடுதலை சிகப்பியின் வீட்டை முற்றுகையிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான இவ்வழக்கைச் சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் சந்திக்க விடுதலை சிகப்பி தயாராகிவருகிற இச்சூழலில், அவரது சொந்த கிராமத்தில் அவரது பெற்றோர்கள் வசிக்கும் வீட்டை முற்றுகையிடுவோம் என்கிற பேட்டி விடுதலை சிகப்பி மற்றும் அவரது பெற்றோர்களையும் உறவினர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனவே விடுதலை சிகப்பியும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அவரது குடும்பத்தினரும் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழலில் உள்ளனர். சில இந்துத்துவ அமைப்பினர் பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்திச் சமூக பதற்றத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

Pa.Ranjiths Neelam gave Complaint against BJP leader theatened Viduthalai Sigappi

எனவே, இதை உடனடியாகக் கருத்தில் கொண்டு, விடுதலை சிகப்பி மற்றும் அவரது பெற்றோர்களுக்கும் சுற்றுப்புறத்தாருக்கும் பாதுகாப்பு அளித்திட வேண்டுகிறோம்." என்று தெரிவித்து உள்ளார். முன்னதாக இயக்குநர் பா.ரஞ்சித், விடுதலை சிகப்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+