நாம் பயன்படுத்தும் கேன் வாட்டரும் சுத்தம் கிடையாது? பாக்டீரியா கலப்படம்.. அதிர வைத்த இன்ஸ்டா ரீல்ஸ்
சென்னை: நாம் வீட்டு பயன்பாட்டிற்காக கேன்களில் வாங்கி குடிக்கும் தண்ணீர்களில் கூட பாக்டீரியா கலப்படம் இருப்பதாக புகார்கள் எழுந்து உள்ளன. சமீபத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் வாட்டரை 'அதிக ஆபத்துள்ள உணவு வகையாக' வகைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது, பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் இனிமேல் கட்டாய ஆய்வுகள் மற்றும் மூன்றாம் தரப்பு தணிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்.
இந்த நிலையில்தான் senti.bee என்ற இன்ஸ்டாகிராம் நெட்டிசன் ஒருவர் நாம் வீட்டு பயன்பாட்டிற்காக கேன்களில் வாங்கி குடிக்கும் தண்ணீர்களில் கூட பாக்டீரியா இருந்ததாக புகார் வைத்துள்ளார்

விழிப்புணர்வுக்காகவே இதை இடுகிறேன் நண்பர்களே! கடந்த சில நாட்களாக நான் தினமும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். இதையடுத்து நான் இரண்டு தண்ணீர் மாதிரிகளை பரிசோதித்தேன. ஒன்று எனது வீட்டு தண்ணீர். மற்றொன்று கடையில் வாங்கிய அக்வா தண்ணீர். நான் வழக்கமாக பயன்படுத்தும் வீட்டின் CAN தண்ணீரில் பாக்டீரியா மாசு இருப்பது ஆய்வு முடிவில் தெரிய வந்தது. என் குடும்பம் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் வாட்டர் கேன் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த முடிவுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
பரமா.. நாம் குடிக்கும் தண்ணீர் அசுத்தமானது.. அது குடிப்பதற்கு ஏற்றதல்ல. நீங்கள் இந்த தண்ணீரை குடித்தால், உங்களுக்கு எதுவும் நடக்கவில்லை, அதனால் நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர் என்று அர்த்தமல்ல, உங்களுக்கோ அல்லது உங்கள் பெற்றோருக்கோ அல்லது குழந்தைகளுக்கோ எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படலாம். உங்களின் உடல் பிரச்சனைகளுக்கு இதுவே கூட காரணமாக இருக்கலாம், என்று எச்சரித்து உள்ளார். கடந்த சில நாட்களாக அவருக்கு அடிக்கடி உடல்நலப்பிரச்சனை ஏற்பட்ட நிலையில், தண்ணீரில் செய்த சோதனையில் இதை கண்டுபிடித்துள்ளார்.
எச்சரிக்கை:
சமீபத்தில்தான் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் வாட்டரை 'அதிக ஆபத்துள்ள உணவு வகையாக' வகைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது, பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் இனிமேல் கட்டாய ஆய்வுகள் மற்றும் மூன்றாம் தரப்பு தணிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்.
அதிக ஆபத்துள்ள உணவு வகைகளுக்கு கட்டாய ஆய்வு அவசியம்: புதிய விதியின் கீழ், அனைத்து பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் வாட்டர் உற்பத்தியாளர்களும் இனி வருடாந்திர ஆய்விற்கு உட்படுத்தப்படுவார்கள். புகார்கள் மற்றும் ஆபத்து அடிப்படையிலான ஆய்வுகளை ஆய்விற்கு உட்படுத்தப்படுவார்கள். .
உரிமம் அல்லது பதிவு வழங்கப்படுவதற்கு முன்பு இந்த ஆய்வுகள் நடைபெறும்.இந்த நடவடிக்கையானது அதிக ஆபத்துள்ள வகையின் கீழ் வரும் தயாரிப்புகள் அனைத்திற்கும் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் இனி தண்ணீர் கேன்களுக்கு வருடா வருடம் இந்த சோதனை நடக்கும்.
3ம் பார்ட்டி நிறுவனங்களின் வருடாந்திர தணிக்கைகள்:
FSSAI ஆல் அங்கீகரிக்கப்பட்ட 3ம் பார்ட்டி உணவுப் பாதுகாப்பு நிறுவனங்களால் வருடாந்திர தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தண்ணீர் பாதுகாப்பாக இருக்கிறதா? அதில் தவறு இருக்கிறதா? தண்ணீர் எப்படி பேக்கேஜ் செய்யப்பட்டு உள்ளது என்பதெல்லாம் இந்த சோதனையில் மேற்கொள்ளப்படும். இத்தனை காலம் ஒரு முறை FSSAI சான்று வாங்கினால் அந்த குடிநீர் நிறுவனம் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்டப்படாது. இனி வருடம் ஒருமுறை பாட்டில் நிறுவனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications