பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? ஒரு வாரம் வரை இட்லி மாவு கெடாமல் இருக்க இதுவா காரணமா? உஷார் மக்களே

Subscribe to Oneindia Tamil

அதுவும் மாவு அரைக்கிற வேலை இல்லாமல் இருந்தால் எவ்வளவு வசதி.. இதனால்தான் இப்போது நிறைய வீடுகளில் ஃபிரிட்ஜை திறந்தால் ரெடிமேட் இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகள் கண்ணில் படுகின்றன.. ஆனால், வீட்டில் அரைத்த மாவு 2, 3 நாட்களில் புளித்துவிடும்போது, கடையில் வாங்கும் மாவு மட்டும் ஒரு வாரம் வரை எப்படி தாக்குப்பிடிக்கிறது? இதன் பின்னணியில் நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் இருக்கின்றன.. அவைகளை பற்றி இங்கே நாம் சுருக்கமாக பார்ப்போம்..!!!

பொதுவாக இட்லியே சூப்பரான உணவுதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்ற உணவு.. ஆவியில் வேக வைக்கும் என்பதால் தைரியமாக சாப்பிடலாம்.

Idli Batter Health

தோசை மாவு

அரிசி, உளுந்தை ஊறவைத்து அரைத்து, இயற்கையாகப் புளிக்க வைக்கும்போது நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் உருவாகின்றன.. இந்த நொதித்தல் செயல்முறை செரிமானத்திற்கு உதவுவதுடன், உணவில் இருக்கும் சில சத்துக்களை உடல் பயன்படுத்துவதற்கும் துணைபுரிகிறது.. அதனால்தான் இட்லி எளிதில் செரிமானமாகும் உணவாகப் பார்க்கப்படுகிறது..

ஆனால், இட்லி, தோசை மாவு என்றாலே எல்லாமே ஆரோக்கியமானதுதானா என்றால் அப்படிச் சொல்லிவிட முடியாது.. குறிப்பாக, கடைகளில் விற்கப்படும் பாக்கெட் மாவில் என்னென்ன சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம்..

பாக்கெட் மாவில் உப்பு, ஈஸ்ட் இருக்கா?

மாவு நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க சில தயாரிப்புகளில் பதப்படுத்தும் முறைகள் பயன்படுத்தப்படலாம்.. அதேபோல், அதிக உப்பு சேர்க்கப்பட்டிருந்தால் உடலில் சோடியம் அளவு அதிகரிக்கலாம்.. இது ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கு கவனிக்க வேண்டிய விஷயம்..

சில தயாரிப்புகளில் மாவு விரைவாக உப்புவதற்காக ஈஸ்ட் அல்லது பிற சேர்மங்கள் பயன்படுத்தப்படலாம்.. இவை எல்லா பாக்கெட் மாவுகளிலும் இருக்கின்றன என்று சொல்ல முடியாது.. அதனால் வாங்கும்போது பொருட்களின் லிஸ்ட்டையும், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியையும் சரிபார்ப்பது நல்லது..

பிளாஸ்டிக் கவர்தான் பிரச்சனையே

புளிப்புத் தன்மை கொண்ட மாவு பிளாஸ்டிக் கவரில் நீண்ட நேரம் வைக்கப்படுவதால் நுண் பிளாஸ்டிக் துகள்கள் கலக்க வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.. ஆனால், எல்லா பாக்கெட் மாவுகளிலும் இப்படித்தான் நடக்கிறது என்று உறுதியாக சொல்ல முடியாது.. உணவுக்குப் பாதுகாப்பான பேக்கிங், தயாரிப்பு நிறுவனத்தின் தரம், சேமிக்கும் முறை போன்றவையும் ரொம்பவே முக்கியம்..

வீட்டு மாவு - ஆரோக்கியம்

முடிந்தவரை வீட்டிலேயே மாவு அரைத்துப் பயன்படுத்தலாம்.. அதையும் சுத்தமான பாத்திரத்தில், ஃபிரிட்ஜில் வைத்து, வாசனை அல்லது நிறம் மாறினால் பயன்படுத்தாமல் இருப்பதே பாதுகாப்பானது.. மாவு 3 நாட்களைக் கடந்துவிட்டது என்பதற்காக மட்டும் கெட்டுப்போய்விட்டது என்று முடிவு செய்ய முடியாது; சேமிப்பு வெப்பநிலையும் சுத்தமும் முக்கியம்..

அவசரத்துக்கு பாக்கெட் மாவு வாங்கினால், கவரைத் திறந்ததும் சுத்தமான மூடியுள்ள பாத்திரத்தில் மாற்றலாம்.. ஆனால், மாவில் ஏற்கெனவே பிரச்சினை இருந்தால் கறிவேப்பிலை, சீரகம் சேர்ப்பதால் அதைச் சரிசெய்ய முடியாது..

இட்லி, தோசையைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.. வாங்கும் மாவின் தரம், அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள், சேமிக்கும் முறை ஆகியவற்றைக் கவனித்தாலே போதும்.. வசதிக்காக வாங்கும் உணவு, ஆரோக்கியத்துக்கும் ஏற்றதாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக்கொள்வதுதான் முக்கியம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+