"சினிமாவில் நடிக்க வைப்பேன்".. லீவ் நாட்களில் மாணவிகளிடம் அத்துமீறல்.. சிக்கும் பத்மா சேஷாத்ரி பள்ளி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்மா சேஷாத்ரி பள்ளியில் ஒவ்வொரு நாளும் விசாரணை நடத்த நடத்த பல புதிய தகவல்கள், ஆதாரங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. இந்த பள்ளிக்கு எதிராக பல மாணவிகள் இதுவரை போலீசில் புகார் அளித்துள்ளனர்.

பத்மா சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக ராஜகோபாலன் என்ற ஆசிரியர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். ஆன்லைன் வகுப்பில் அரைநிர்வாணமாக வந்தது, மாணவிகளிடம் தவறாக பேசியது என்றது இவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது.

அதோடு மாணவிகளுக்கு வாட்ஸ் ஆப்பில் தவறாக மெசேஜ் அனுப்பியது, மாணவிகளை சினிமாவிற்கு அழைத்து, உடலை தவறாக தொட்டு பேசியது என்று பல புகார்கள் இவர் மீது வைக்கப்பட்டுள்ளன.

விசாரணை

விசாரணை

ஆசிரியர் ராஜகோபாலனுக்கு பள்ளி நிர்வாகமும் ஆதரவாக செயல்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக புகார் வைக்கப்பட்ட நேரங்களில் பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் அவரை நீக்கவில்லை, அவரை அழைத்து விசாரணை கூட நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும், போலீசாரும் பள்ளி நிர்வாகிகளிடம் கடும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 முதல்வர் கீதா

முதல்வர் கீதா

இது தொடர்பாக பள்ளியின் ஆசிரியர் கீதாவிடம் போலீசார் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தினர். இன்னும் சில ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இது போக மாணவிகள் 50க்கும் அதிகமானோர் போலீசில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். போலீஸ் கொடுத்த உதவி எண்ணுக்கு இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

புகார்

புகார்

இதில் மாணவிகள் அளித்த சிலர் புகாரில் அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களை குறிப்பிட்டுள்ளனர். அதன்படி, பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் சிலர் மாணவிகளை விடுமுறை நாட்களில் ஸ்பெஷல் கிளாஸ் என்று கூப்பிட்டு அவர்களிடம் அத்துமீறும் செயலில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர். அதோடு மாணவிகளிடம் உங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருகிறேன். எங்களுக்கு நிறைய தொடர்பு உள்ளது.

தொடர்பு

தொடர்பு

எங்களின் தொடர்புகளை வைத்து உங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருகிறோம் என்று கூறி மாணவிகளை சில ஆசிரியர்கள் வறுபுறுத்தியதாக போலீசாரிடம் மாணவிகள் தெரிவித்துள்ளனர். இந்த புகாரில் பல ஆசிரியர்களின் பெயர்கள் அடிபடுவதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 3 மாணவிகள் இன்று காலை இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

Recommended Video

    Rajagopalan மீது PSBB நடவடிக்கை எடுக்க வேண்டும்: Tamizharasi Sivakumar Exclusive Interview Part 1
    பலர்

    பலர்

    ஏற்கனவே ராஜகோபாலன் இல்லாமல் மேலும் மூன்று ஆசிரியர்கள் இதில் சிக்கி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை அடையாளம் காண விசாரணை நடந்து வருகிறது. விரைவில் அவர்களும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதனால் பத்மா சேஷாத்ரி பள்ளி பாலியல் புகாரில் வசமாக சிக்க போகிறது என்று கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+