யாருக்கெல்லாம் தொடர்பு.. கேள்விகளால் ராஜகோபாலனை துளைத்து எடுத்த போலீஸ்.. சிக்கியது முக்கிய ஆதாரம்!
சென்னை: பத்மா சேஷாத்ரி பள்ளி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் ஆசிரியர் ராஜகோபாலனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பத்மா சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இந்த பாலியல் குற்றங்கள் தொடர்பாக தமிழக காவல்துறைக்கு பல பெண்கள், மாணவிகள் போலீசில் புகார் அளித்துள்ளார்.
போலீசில் ரகசியமாக இவர்கள் அளித்த புகார்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் மிக தீவிரமாக விசாரணைகள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக இன்னும் பல ஆசிரியர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

கைது
இதில் மாணவிகளை பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கியதாக ராஜகோபாலன் என்ற ஆசிரியர் கடந்த மாதம் 24ம் தேதி கைது செய்யப்பட்டார். ஆன்லைன் வகுப்பில் அரைநிர்வாணமாக வந்தது, மாணவிகளிடம் தவறாக பேசியது என்று இவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளது.

விசாரணை
நீதிமன்ற காவலில் இருந்த ராஜகோபாலன் நேற்று 3 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டார். மே 4ம் தேதி மாலை வரை இவரை விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இவர் கடுமையாக விசாரிக்கப்பட்ட நிலையில், இன்றும் காலையில் இருந்து ராஜகோபாலன் தீவிரமாக விசாரிக்கப்பட்டார்.
Recommended Video

வாட்ஸ் ஆப்
உங்களுக்கும் மற்ற ஆசிரியர்கள் யாருக்கு எல்லாம் தொடர்பு, உங்களுக்கு உதவியாக இருந்த ஆசிரியர்கள் யார்
? உங்களுக்கு உடந்தையாக இருந்த நிர்வாகிகள் யார்? சினிமாவில் நடிக்க வைப்பேன் என்று கூறியதால், சினிமாவில் யாருக்கெல்லாம் உங்களுக்கு தொடர்பு, உங்களை ஏன் பள்ளி நிர்வாகம் காப்பாற்ற பார்க்கிறது என்று போலீசார் குடைந்து குடைந்து விசாரித்துள்ளனர்.

கேள்விகள்
அதோடு ராஜகோபாலனின் வாட்ஸ் ஆப் சாட் , டெலிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த முக்கிய ஆதாரங்கள் எல்லாம் திரட்டப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்களை வைத்து, பள்ளியில் இருக்கும் மற்ற ஆசிரியர்கள் குறித்து போலீசார் துருவி துருவி கேள்வி எழுப்பி உள்ளனர். காலை 7 மணியில் இருந்து இன்று விடாமல் விசாரணை நடந்துள்ளது.

முக்கிய ஆதாரம்
இந்த விசாரணையில் முக்கிய ஆதாரங்களை குறித்து ராஜகோபாலன் தகவல்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது. முக்கிய வாக்குமூலம் ஒன்றை ராஜகோபாலன் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இவரின் போலீஸ் காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று போலீசார் கோரிக்கை வைக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications