தோண்ட தோண்ட கொடூரம்.. பத்மா சேஷாத்ரி பள்ளியின் அந்த 3 ஆசிரியர்கள் யார்? போலீசின் 5 நாள் பிளான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்மா சேஷாத்ரி பள்ளியில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் பல ஆசிரியர்களை விசாரிக்கும் திட்டத்தில் சென்னை மாநகர போலீஸ் உள்ளது.

Recommended Video

    PSBB பள்ளியில் தான் அந்த நடிகரின் மகனும் இறந்து போனார் | Oneindia Tamil

    பத்மா சேஷாத்ரி பள்ளியில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இணையத்தில் பல மாணவிகள் அடுத்தடுத்து புகார்களை அடுக்கியபடி உள்ளனர்.

    கடந்த 2-3 நாட்களில் பலர் இது தொடர்பாக இணையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீஸ் அளித்த உதவி எண்ணுக்கும் 30 மாணவிகள் வரை பத்மா சேஷாத்ரி பள்ளி குறித்து புகார் அளித்துள்ளனர்.

     விசாரிக்க விசாரிக்க

    விசாரிக்க விசாரிக்க

    இந்த பத்மா சேஷாத்ரி பள்ளி குறித்து தோண்ட தோண்ட நிறைய புகார்கள் வெளியே வருகின்றன. கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் மட்டுமின்றி இன்னும் பல ஆசிரியர்கள் இப்படி உள்ளே இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களை கண்டுபிடிக்கும் பணியில்தான் தற்போது போலீஸ் இறங்கி உள்ளது.

    கீதா

    கீதா

    இந்த பள்ளியின் முதல்வர் கீதாவிடம் போலீஸ் இதுவரை இரண்டு நாட்கள் விசாரணை நடத்தி உள்ளனர். கிட்டத்தட்ட 6 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இதில் பல ஆசிரியர்கள் குறித்த தகவல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது.

    ஹார்ட் டிஸ்க்

    ஹார்ட் டிஸ்க்

    போலீஸ் விசாரணையில் ராஜகோபாலனின் ஹார்ட் டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் ஹார்ட் டிஸ்க்கில் பல மாணவிகளின் புகைப்படங்கள் இருந்துள்ளன. அதேபோல் இவரின் வாட்ஸ் ஆப் சாட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதை தோண்ட தோண்ட பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    யார்

    யார்

    இந்த பள்ளியில் இன்னும் 3 ஆசிரியர்களுக்கு பாலியல் தொல்லைகளோடு தொடர்பு இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீஸ் இறங்கி உள்ளது. ஆனால் ராஜகோபாலன் நீதிமன்ற காவலில் இருப்பதால் அவரை விசாரிக்க முடியாது. மாணவிகளின் பாலியல் புகார்களில் கைதான பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    போலீஸ் காவல்

    போலீஸ் காவல்

    5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அசோக்நகர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று காவல்துறையினர் மனு தாக்கல் செய்ய உள்ளனர். நாளையில் இருந்து அடுத்த 5 நாட்கள் விசாரிக்க போலீஸ் முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணையில், பள்ளியில் உள்ள மற்ற கருப்பு ஆடுகள் குறித்த விவரங்களை வெளியே கொண்டு வர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+