அந்த தைரியத்தில்தான் செய்தேன்.. போலீஸிடம் "கக்கிய" ராஜகோபாலன்.. சூடு பிடித்த பத்மா சேஷாத்ரி விசாரணை!
சென்னை: போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வரும் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் முக்கியமான விஷயங்களை விசாரணையின் போது தெரிவித்துள்ளார். தான் தொடர்ந்து பாலியல் தொல்லைகளில் ஈடுபட்டு வந்தது எப்படி என்று ராஜகோபாலன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
பத்மா சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக ராஜகோபாலன் என்ற ஆசிரியர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். ஆன்லைன் வகுப்பில் அரைநிர்வாணமாக வந்தது, மாணவிகளிடம் தவறாக பேசியது என்றது இவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற காவலில் இருந்த ராஜகோபாலன் நேற்று முதல்நாள் 3 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டார். மே 4ம் தேதி மாலை வரை இவரை விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

போலீஸ்
இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் பல முக்கிய விஷயங்களை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கக்கி இருக்கிறார். அதன்படி இவர் 20 வருடங்களுக்கு முன் பள்ளியில் சேர்ந்த போதே பாலியல் புகாருக்கு உள்ளாகி இருக்கிறாராம். அப்போதே பெண் ஆசிரியர்கள் சிலர் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். ஆனால் அப்போது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

விசாரணை
கொஞ்சம் கொஞ்சமாக பள்ளியில் நல்ல ஆசிரியர் என்று பெயர் எடுத்த ராஜகோபாலன், பள்ளி தலைமைக்கும், அறங்காவலர் குழுவிற்கும் நெருக்கம் ஆகியுள்ளார். ராஜகோபாலன் பார்த்துக்கொள்வார் என்று பள்ளி நிர்வாகம் இவரிடம் நிறைய பொறுப்புகளை கொடுக்கும் அளவிற்கு பள்ளி தலைமைக்கு நெருக்கம் ஆகியுள்ளார். விளைவு இவருக்கு எதிராக பேசவே ஆசிரியர்களும், மாணவிகளும் பயந்து உள்ளனர்.

கொடுமை
இதை பயன்படுத்திக்கொண்டுதான் ராஜகோபாலன் பாலியல் கொடுமைகளை செய்துள்ளார். மாணவிகளுக்கு வகுப்பிலும், பணக்கார சில மாணவிகளுக்கு ஸ்பெஷல் வகுப்பிலும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சரியாக படிக்காத மாணவிகளை தனியாக அழைத்து, பள்ளியிலேயே ஸ்பெஷல் டியூஷன் எடுப்பதாக கூறி அத்துமீறல்களை நிகழ்த்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Recommended Video

பலர்
பல மாணவிகள் புகார் கொடுக்காமல் அமைதி காத்த நிலையில், ஒரு சில மாணவிகள் சேர்ந்து சென்று புகார் அளித்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் ராஜகோபாலனுக்கு இருக்கும் தொடர்புகள் காரணமாக நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளி தலைமையுடன் ராஜகோபாலன் நேரடி தொடர்பு கொண்டுள்ளதால் ராஜகோபாலுக்கு எதிரான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

நடவடிக்கை
புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால்.. தைரியமாக பாலியல் அத்துமீறல்களை தொடர்ந்து நிகழ்த்தி வந்ததாக ராஜகோபாலன் போலீஸ் விசாரணையில் குறிப்பிட்டு உள்ளார். தன் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள், விஷயம் வெளியே போகாது என்ற நம்பிக்கையில்தான் இப்படி எல்லாம் செய்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குமூலம்
இந்த வாக்குமூலம் காரணமாக பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகிகளை போலீஸ் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ராஜகோபாலனை மேலும் சில நாட்கள் காவலில் எடுத்து போலீஸ் விசாரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. 6 டூ 12 வரை உடற்கல்வி வகுப்பு கட்டாயம்.. ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன அரசு -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications