அப்பவே அப்படி.. ஆசிரியைகளை கூட விட்டுவைக்காத ராஜகோபாலன்.. "ஷாக்" லெட்டர்.. பத்மா சேஷாத்திரி கொடுமை!
சென்னை: பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகள் மட்டுமின்றி ஆசிரியைகள் சிலரிடமும் தவறாக நடந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடந்த பாலியல் குற்றங்கள் குறித்து தோண்ட தோண்ட பல பூதங்கள் கிளம்பி வருகின்றன. மாணவிகளை பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கியதாக ராஜகோபாலன் என்ற ஆசிரியர் கடந்த மாதம் 24ம் தேதி கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற காவலில் இருந்த ராஜகோபாலன் 3 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். போலீசார் இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணை
இவர் மீது மாணவிகள் பலர் புகார் வைத்துள்ள நிலையில் தற்போது தீவிரமான விசாரணைகள் நடந்து வருகின்றன. போலீசாரிடம் இவர் கொடுத்த வாக்குமூலத்தில் பல முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பத்மா சேஷாத்திரி பள்ளியில் பல ஆசிரியர்கள் இப்படி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். தவறு செய்த மற்ற ஆசிரியர்களையும் கண்டுபிடிக்கும் பணியில் போலீஸ் ஈடுபட்டு வருகிறது,

பள்ளி ஆசிரியர்
இது ஒரு பக்கம் இருக்க பத்மா சேஷாத்திரி பள்ளியில் இருக்கும் சில ஆசிரியைகளிடமும் ராஜகோபாலன் தவறாக நடந்து இருக்கிறார். பள்ளியில் சேர்ந்த புதிதில் சில ஆசிரியர்களிடமும் இவர் தவறாக நடந்து இருக்கிறார். பாலியல் ரீதியாக பேசி உள்ளார். பாலியல் ரீதியாக அவர்களை சீண்டி உள்ளார்.

நிர்வாகம்
ஆசிரியைகள் அப்போதே பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவரிடம் ஒரு மன்னிப்பு கடிதம் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை கைப்பற்றும் முடிவில் தமிழக போலீஸ் உள்ளது. இந்த ஹாக்கிங் கடிதம் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்கிறார்கள்.

ராஜகோபாலன்
அதேபோல் ராஜகோபாலன் மூலம் துன்புறுத்தலுக்கு ஆளான ஆசிரியைகளை தேடும் பணியும் நடந்து வருகின்றது. இவர்களை கண்டுபிடித்தால் போஸ்கோ இல்லாமல் கூடுதல் வழக்குகளையும் பதிய முடியும். அதோடு இவர்களுக்கு பின் இருப்பவர்களையும் கண்டுபிடிக்க முடியும் என்பதால் போலீஸ் விசாரணையில் துரிதம் காட்டி வருகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications