பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் புகார்.. அனைவரையும் தண்டிக்க வேண்டும்.. ஜவாஹிருல்லா கோரிக்கை!
சென்னை: பத்ம சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு நேர்ந்த பாலியல் கொடூரங்களில் தொடர்புடைய அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
Recommended Video
பத்ம சேஷாத்ரி பள்ளியில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தமிழகத்தையே உலுக்கி உள்ளது. தமிழகம் முழுக்க மக்கள் இந்த பாலியல் கொடுமைக்கு எதிராக கொதித்து போய் உள்ளனர்.
முக்கியமாக பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை அளித்துள்ளது. போலீசார் மூலம் விசாரிக்கப்பட்டு வந்த ஆசிரியர் ராஜகோபாலன் கைது சென்னை போலீசாரால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

கைது
முதலில் இந்த விசாரணைக்கு பத்ம சேஷாத்திரி பள்ளி சரியாக ஒத்துழைக்கவில்லை என்று சென்னை மாநகர காவல்துறை புகார் அளித்தது. இந்த நிலையில், போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காத பள்ளி நிர்வாகத்தை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா விமர்சனம் செய்துள்ளார். அதில், பத்ம சேஷாத்திரி பள்ளியில் ஆசிரியர் ஒருவர், மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்கச் சென்ற குழந்தை பாதுகாப்புக் குழுவை அனுமதிக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது

கொடுமை
தங்கள் பள்ளியில் நடைபெற்ற இந்த கொடுமை தொடர்பாகப் பள்ளிக்கூடம் கொடுத்த விளக்க அறிக்கையில் செக்சுவல் என்ற சொல்லை திட்டமிட்டே மறைத்துள்ளார்கள். கல்வித் துறை, குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் இவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மற்றும் பெண் உறுப்பினர்கள் இடம் பெறும் வகையில் தமிழக அரசு உடனடியாக உயர் நிலை விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

நடவடிக்கை
பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடைபெற்ற பாலியல் வன்முறை குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது . பத்மசேஷாத்திரி பள்ளி புகழ்பெற்ற அதிகார தன்மை உடைய பள்ளியாகும்.

தண்டிக்க வேண்டும்
இங்கு நடைபெற்ற பாலியல் வன்முறைக்கு உரியத் தண்டனை அளிக்கத் தமிழக அரசு முழு முயற்சி எடுத்து இது போன்ற குற்றங்கள் இனியும் பள்ளிக்கூடங்களில் நடக்காதவாறு தொடர்புடைய அனைவரையும் தண்டிக்க வேண்டும் .
இதற்குக் காரணம் குழந்தைகள் தொடர்பான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான போக்ஸோ சட்டத்தின் படி பாலியல் வன்முறை நடந்திருந்தால், அந்த பள்ளியோ அல்லது நிறுவனமோ தன்னிச்சையாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இதனைச் செய்யத் தவறிய பள்ளியின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications