அஸ்வினை வாழ்த்தட்டும்.. ஆனால் தனுஷ் சொன்னது பொய்! முதன்முதலில் ‘பத்ம ஸ்ரீ’ பெற்ற கிரிக்கெட்டர் யார்?
சென்னை: நாட்டின் 76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. குறிப்பாக கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அஸ்வினுக்கு நடிகர் தனுஷ், முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் ஆகியோர், தமிழகத்தில் முதன்முதலாக பத்ம ஸ்ரீ விருது பெற்றவர் அஸ்வின் என பாராட்டி வருகின்றனர். ஆனால் அதற்கு முன்னரே தமிழக கிரிக்கெட் வீரர் ஒருவர் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார் எனவும், தனுஷ் சொன்ன வாழ்த்து தவறு என்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.
பிரிட்டிஷ் அரசிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று குடியரசு நாடாக மாறிய நாள் ஜனவரி 26. அந்த நாள் குடியரசு தின விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 26ஆம் தேதி குடியரசு தின விழா நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு மத்திய அரசு ஆண்டுதோறும் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை அறிவிக்கும். கலை, அறிவியல், மருத்துவம், இலக்கியம், வர்த்தகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது,
அந்த வகையில் இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. நல்லி குப்புசாமி செட்டி, நடிகர் அஜித்குமார், நடிகை சோபனா, செஃப் தாமு உள்ளிட்டவருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக விளையாட்டு துறையில் சாதனை புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக ஜொலித்த அஸ்வின் தமிழகத்தில் சென்னையைச் சேர்ந்தவர்.
ஒருநாள், டி 20, டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக விளையாடி இந்திய அணிக்கு பல்வேறு தருணங்களில் வெற்றி தேடி கொடுத்தவர். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அடிலேடு டெஸ்டில் விளையாடிக் கொண்டிருந்து போது தனது ஓய்வை அறிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 537 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ள அவர் அனில் கும்ப்ளேவுக்கு அடுத்ததாக அதிக விக்கெட் கைப்பற்றிய சுழற் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
105 டெஸ்ட், 116 ஒரு நாள், 63 டி20 போட்டியில் விளையாடியுள்ளார். மொத்தமாக 765 விக்கெட் கைப்பற்றி உள்ளதோடு 4,394 ரன்களையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் நடிகர் அஸ்வின் விளையாட்டு துறைக்கு ஆற்றிய பங்களிப்பை போற்றும் வகையில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. இதை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Venkatraghavan is the first TN cricketer to get a Padma Shri in 2003! https://t.co/eRzj2EuRnb
— WV Raman (@wvraman) January 25, 2025
அந்த வகையில் பிரபல நடிகர் தனுஷ் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தனுஷ்," மதிப்புமிக்க பத்மபூஷன் விருது பெற்ற அஜித் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் தமிழக கிரிக்கெட் வீரரான அஸ்வினுக்கும் வாழ்த்துக்கள்" என பதிவிட்டிருந்தார். அவரது பதிவில் அஸ்வினும் நன்றி தெரிவித்திருந்தார்.
இதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத்தும் அஸ்வினுக்கு வாழ்த்து கூறினார். அதில்,"தமிழ்நாட்டிலிருந்து பத்மஸ்ரீ விருதை வென்ற முதல் கிரிக்கெட் வீரர் அஸ்வின். இதைவிட சிறந்த முன்னுதாரணத்தை நாம் கேட்க முடியாது. நீங்கள் இந்த விருதைப் பெற தகுதியான நபர்" என பாராட்டியிருந்தார். ஆனால், தனுசும், பத்ரிநாத்தும் கூறியது தவறு என்றும், அதற்கு முன்னரே தமிழக கிரிக்கெட் வீரர் ஒருவர் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார் என்கினறனர் ரசிகர்கள். அது உண்மையும் கூட.
My hearty congratulations to dear Ajith Sir on being conferred the prestigious Padma Bhushan award.
— Dhanush (@dhanushkraja) January 26, 2025
Also congratulating @ashwinravi99 on being the first Tamil Nadu cricketer to having being conferred a Padma Shri.
My congratulations to all other Padma awardees who have made…
தமிழகத்திலிருந்து முதல் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் வெங்கட்ராமன் என்பது குறிப்பிடத்தக்கது. 2003ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதாக ஸ்ரீனிவாச ராகவன் வெங்கட்ராமனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு இருக்கிறது. கிரிக்கெட் வீரராகவும் பின்னர் அம்பையர் ,மேட்ச் ரெபிரியாக இவர் பணியாற்றினார். இதனை உறுதி செய்து இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரரான டபள்யூ.வி.ராமன்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications