கமல் துண்டு பேப்பர்லாம் வச்சிக்கமாட்டார்.. ஸ்டாலினை விமர்சித்து சூரியனுக்கே டார்ச் அடித்த பத்மப்ரியா
சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் இருந்த போது ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தவர்களில் பத்மப்ரியாவை மறக்க முடியாது.
அரசியலில் யார் வேண்டுமானாலும் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் செல்லலாம். அந்த வகையில் கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டவர் பத்மப்ரியா.
இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர். காட்டுப்பாக்கம் துறைமுக விரிவாக்கம் குறித்து மத்திய அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தவர் பத்மப்ரியா.

டார்ச்லைட்
இந்த நிலையில் மதுரவாயல் தொகுதியில் தனியொரு பெண்ணாக கையில் டார்ச் லைட்டுடன் அனல் பறக்க பிரச்சாரம் செய்தார். தோல்வி அடைந்தாலும் அவருக்கு 33 ஆயிரம் வாக்குகளை மக்கள் பதிவு செய்திருந்தனர். தனது பிரச்சாரத்தின் போது ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தார்.

மக்கள் நீதி மய்யம்
மேலும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் உள்ளதாகவும் மாற்று அரசியலுக்கான நேரம் வந்துவிட்டதாகவும் முழங்கினார். சின்ன வயதில் துடிப்பான பெண்ணின் தேர்தல் பிரச்சாரத்தை பலர் காது கொடுத்து கேட்டனர்.

பிரச்சாரத்திற்கு பலன்
இவரது பிரச்சாரத்திற்கு பிரதிபலனே இவருக்கு கிடைத்த வாக்குகள் என சொல்லலாம். அது போல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு விவகாரத்திலும் பத்மப்ரியா குரல் கொடுத்தது உள்ளிட்ட காரணங்களால் இளைஞர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவரானார்.

ஸ்டாலின்
தேர்தல் பிரச்சாரங்களின் போது ஸ்டாலினை பத்மப்ரியா கடுமையாக விமர்சனம் செய்தார். இதுகுறித்து பத்மப்ரியா தனது பேட்டியில் கூறுகையில் கமல்ஹாசனுக்காக நான் மக்கள் நீதி மய்யம் வந்துள்ளேன். அவர் பன்முகத் திறமை கொண்டவர். அவரிடம் நீங்கள் எந்த கேள்வி கேட்டாலும் டக்டக்னு பதில் சொல்வார்.

50 ஆண்டுகள்
துண்டு பேப்பர் எல்லாம் வச்சிக்கமாட்டார். 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் அரசியல் செய்து வருகிறார்கள். ஆனால் புதிதாக வந்த மக்கள் நீதி மய்யம் மக்களிடம் சென்றடைந்துவிட்டதால் பயம் வந்துவிட்டது என்றார். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் ஜனநாயகம் இல்லை என கூறி அக்கட்சியிலிருந்து விலகி அவர் நேற்று முன் தினம் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications