Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"TV பார்த்து தெரிஞ்சுக்குங்க பழனிச்சாமி அய்யா".. ராஜீவ் காந்தி ஒரே போடு.. திரண்ட அதிமுக.. என்னவாம்

எடப்பாடி பழனிசாமியை கண்டித்து திமுக ராஜீவ் காந்தி ட்வீட் பதிவிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பழனிச்சாமி அய்யா TV பாத்து தெரிஞ்சுக்குங்க, உங்க கடந்த கால ஆட்சியின் லட்சணத்தினை" என்று திமுக தரப்பு, தூத்துக்கு துப்பாக்கி சூடு சம்பவ அறிக்கை குறித்து சுட்டிக்காட்டி உள்ளது.

Recommended Video

    DMK உடன் இணைந்து OPS செயல்படுகிறார் - Anbazhagan

    தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தில், கடந்த 2018-ம் ஆண்டு ஜுன் 4-ந் தேதி தனது விசாரணையை தொடங்கியது அருணா ஜெகதீசன் குழு.

    கடந்த 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணை, சில மாதங்களுக்கு முன்புதான் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணை அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் குழு வழங்கியது.

     வெங்கடேசன்

    வெங்கடேசன்

    அந்த அறிக்கையில் உள்ள விஷயங்கள்தான், கடந்த 2 நாட்களாகவே பரபரப்பை கிளப்பி வருகின்றன.. அந்த அறிக்கையில், "போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது கொடூரமான செயல் என்று கூறப்பட்டுள்ளது. தப்பியோடிய போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் போராட்டக்கார்களை கலைக்க வேண்டும் என்ற நோக்கமின்றி, மறைவிடங்களிலிருந்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடந்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

    குருவிகள்

    குருவிகள்

    அதுமட்டுமல்ல, பூங்காவுக்குள் மறைந்திருந்த போலீசார் போராட்டக்காரர்களை சுட்டு வீழ்த்தினர், எங்கிருந்து துப்பாக்கி குண்டு வருகிறது என்பதை அறியாத மக்கள் தலைதெறிக்க அங்குமிங்குமாக ஓடினார்கள்... போராட்டடக்காரர்களை போலீசார் மறைந்திருந்து சுட்டுள்ளனர்.. ஆட்சியர் வெங்கடேசன் தன்னுடய பொறுப்புகளை தட்டிக்கழித்துவிட்டு, கோவில்பட்டியில் இருந்திருக்கிறார்.. காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்வி இது, குருவிகளை போல மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்" என்பது உட்பட அந்த அறிக்கையில் விலாவரியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

     அணுகுமுறை + செயல்பாடு

    அணுகுமுறை + செயல்பாடு

    இந்த அறிக்கை தொடர்பாக, திமுக தரப்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பி உள்ளது.. காரணம், இப்படி ஒரு சம்பவத்தினால், தமிழகமே கொந்தளிப்பின் உச்சத்தில் தகித்தபோது, எடப்பாடி பழனியின் அணுகுமுறையும், செயல்பாடும் மக்களை அதிர செய்தது.. இந்த சம்பவம் நடந்து 2 நாட்கள் ஆகியும், எடப்பாடி எந்தவிதமான விளக்கத்தையும் அப்போது தரவில்லை.. சம்பவ இடத்திற்கும் நேரில் சென்றும் பார்க்கவில்லை... யாருக்கும் ஆறுதல் சொல்லவில்லை..

     டிராமா ஸ்டாலின்

    டிராமா ஸ்டாலின்

    சிகிச்சையில் இருந்தவர்களையும் சென்று சந்திக்கவில்லை.. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனையை கையில் எடுத்தும், அதிலும் கனிமொழி, ஸ்பாட்டுக்கே சென்று போராட்டத்தை முன்னெடுத்தபோதிலும், எடப்பாடி அமைதியாகவே இருந்தார்.. 2 நாள் கழித்துதான் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போதுகூட, ஸ்டாலின் டிராமா செய்கிறார் என்று திமுகவின் போராட்டத்தைதான் விமர்சித்தாரே தவிர, சுருண்டு விழுந்து இறந்த அப்பாவிகள் உயிரை பற்றி அல்ல.

     பழனிச்சாமி

    பழனிச்சாமி

    செய்தியாளர்களே இதை பற்றி கேட்டபிறகுதான் விஷயத்துக்கு வந்தார். "அதாவது, தற்காப்புக்காகத்தான் போலீசார் சுட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.. வன்முறை அதிகரித்துவிட்டதற்கு காரணம் சமூக விரோதிகள் இதில் ஊடுருவியதுதான்.. இப்படி ஒரு துப்பாக்கி சூடு நடந்ததையே, டிவியில் பார்த்துதான் நான் தெரிந்து கொண்டேன், நான் அப்போது சென்னையில்தான் இருந்தேன்" என்று அசால்ட்டான பதில்களை எடப்பாடி பழனிசாமி அடுக்கிக் கொண்டே போனார்.. ஒரு மாநில முதல்வர், அதிலும், உளவுத்துறை, போலீஸை தன் பிடியில் வைத்திருப்பவரின் பதிலை கேட்டு தமிழகமே உறைந்து போனது.

     TV பாருங்க அய்யா

    TV பாருங்க அய்யா

    இன்றைய தினம், அருணா ஜெகதீசன் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், அதிமுக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு திறனின்மை வெளிப்பட்டு உள்ளது.. இந்நிலையில்தான், திமுகவின் தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. "பழனிச்சாமி அய்யா TV பார்த்து தெரிஞ்சுக்குங்க...உங்க கடந்த கால ஆட்சியின் லட்சணத்தினை" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். அத்துடன் எடப்பாடியையும் தன்னுடைய ட்வீட்டில் இணைத்துள்ளார்.

     ராஜீவ் காந்தி

    ராஜீவ் காந்தி

    இந்த ட்வீட்டுக்கு ஆதரவும் எதிர்ப்புமாக கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.. "இது மிகப்பெரிய அளவில் தமிழ‌கத்திலும், இந்தியாவிலும் பேசு பொருளாக ஆக்கப்பட வேண்டும்... பாஜகவுன் பொய்யையே இந்திய அளவில் டிரண்ட் செய்யும் பொழுது, இந்த உண்மையை உரக்க சொல்ல வேண்டும்..,. இதற்கு பின்னால் உள்ள அதிகாரி, அமைச்சர் மற்றும் பெருமுதலாளிகள் அனைவரையும் வெளிப்படுத்த வேண்டும்" என்று ஆதரவாக பதிவுகள் விழுகின்றன..

     படுபிஸி

    படுபிஸி

    மேலும் சிலரோ, "அவங்களை விடுங்க, உண்மை என்னன்னா, அவங்க ஆட்சியை விட உங்க திமுக ஆட்சி தான் கேவலமா இருக்கு.. மதுகடைகள் தொடங்கி மூணு சீட்டு லாட்டரி, கொலை கொள்ளைனு மக்களே எரிச்சலில் இருக்காங்க.. மீடியா உதவியோட எத்தனை நாள் உங்க வண்டி ஓடுதுனு பாப்போம்" என்று பதிவிட்டு வருகின்றனர்.. இப்படி ராஜீவ் காந்தி ட்விட்டரே படுபிஸியாக காணப்படுகிறது..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+