பாருங்க.. எடப்பாடியே ஏத்துகிட்டாரு.. வார்த்தையை பிடுங்கி.. டிடிவி தினகரன் பஞ்ச்
சென்னை: அதிமுகவில் தனிமனித ஆதிக்கம் கிடையாது. அதிமுகவில் என்னைப்போல 1 லட்சம் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்கள். எவராலும் அதிமுகவை அழிக்க முடியாது. எடப்பாடிபழனிசாமி இல்லையென்றால் யாராவது வந்து இந்த கட்சியை ஆள்வார். அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். இந்தகட்சியை யாராலும் தொட்டு பார்க்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி நேற்று பேசியிருந்தார். எடப்பாடியின் இந்த பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளர்.
அதிமுக துரோகிகள் கைகளில் தற்போது இருப்பதாகவும் விரைவில் ஜனநாயக முறையில் அதிமுகவை துரோகிகளிடம் இருந்து மீட்போம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொடர்ந்து பேசி வருகிறார்.
தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர் செல்வம் இடையே பிளவு ஏற்பட்டுள்ள சூழலில் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக தாக்கி பேசி வருகிறார் டிடிவி தினகரன்.

தஞ்சையில் எடப்பாடி பழனிசாமி
இந்த சூழலில், தஞ்சையில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் தன்னைப்போல 1 லட்சம் பழனிசாமி இருக்கிறார்கள் என்று பேசினார். இதற்கு டிடிவி தினகரன் சூடாக பதிலடி கொடுத்துள்ளார். தஞ்சையில் எடப்பாடி பழனிசாமி பேசிய விவரங்களை முதலில் பார்ப்போம்.. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜ் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: -

மின்தட்டுப்பாடு இல்லை என்றால்
டெல்டா பாசன விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 24 மணிநேரம் மும்முனை மின்சாரம் எனது ஆட்சியில் வழங்கப்பட்டது. ஆனால் தற்போதைய திமுக அரசு நேர கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது. காலை முதல் மாலை வரை 5 மணி நேரம் மும்முனை மின்சாரம், இரவில் மும்முனை மின்சாரம் கொடுத்துவிட்டு மின் தட்டுப்பாடு இல்லை என்கிறார்கள். மின்தட்டுப்பாடு இல்லை என்றால் எதற்காக நேர கட்டுப்பாடு கொண்டு வரவேண்டும்.

எவராலும் அதிமுகவை அழிக்கமுடியாது
திமுக ஆட்சி வந்தாலே மின்தடை வந்துவிடும். அதிமுக எப்போதும் விவசாயிகளுக்காக பாடுபடுகின்ற ஒரு இயக்கம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்திலும் சரி எப்போதும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கும் உற்ற துணையாக இருக்கக்கூடியது அதிமுகதான். அதிமுகவில் தனிமனித ஆதிக்கம் கிடையாது. அதிமுகவில் என்னைப்போல 1 லட்சம் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்கள். எவராலும் அதிமுகவை அழிக்கமுடியாது.

அவரே ஒத்துக்கொண்டார்
எடப்பாடிபழனிசாமி இல்லையென்றால் யாராவது வந்து இந்த கட்சியை ஆள்வார். அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். இந்தகட்சியை யாராலும் தொட்டு பார்க்க முடியாது" என்றார். எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்து டிடிவி தினகரன், "அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள் இருக்கிறார்கள் என்று அவரே ஒத்துக்கொண்டார். அது சரிதான்" என்று பதில் கொடுத்துள்ளார்.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
ஹார்ட் டிஸ்க் திருட்டு: தூரசக்தியை காப்பாற்ற நினைக்கும் பேரசக்தி? சிபிஐ விசாரணை தேவை! எடப்பாடி -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி












Click it and Unblock the Notifications