நடமாட முடியாது.. சீறிய மன்னார்குடி ஜீயர்.. மடாதிபதியின் அதிகாரமே மகாபெரியது.. விட்டு விளாசிய திருமா!
சென்னை: தமிழ்நாடு அமைச்சர்கள் யாரும் சாலையில் நடமாட முடியாது என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்த மன்னார்குடி ஜீயருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
Recommended Video
தருமபுரம் ஆதீனத்திற்கு பல்லக்கு தூக்கும் விழாவை விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. தருமபுர ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் பதவி வகித்து வருகிறார்.
பட்டின பிரவேசம் என்ற பெயரில் இவரை பல்லாக்கில் தூக்கி செல்லும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எப்போது நடக்கிறது
வரும் மே 22ம் தேதி இந்த நிகழ்வு நடக்க உள்ளது. இதை விசிக, திக எதிர்த்த நிலையில் கோட்டாச்சியார் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இது தேவையில்லாத சம்பிரதாயம். மனிதர்கள் எல்ல்லோரும் சமம். ஒருவர் இன்னொருவரை தூக்குவது ஏற்றத்தாழ்வை குறிக்கும். அதனால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று விசிகவினர் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் ஆதீனம் மாசிலாமணி கண்டிப்பாக பல்லக்கில் ஏறுவார்.. முடிந்ததை பாருங்கள் என்று பாஜக, இந்து முன்னணி போன்ற வலதுசாரி அமைப்புகள் தெரிவித்துள்ளன.

என்ன சொன்னார்?
இந்த நிலையில் மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பகாமன்னார் இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். அதில், பட்டினப் பிரவேசம் என்பது இந்து சம்பிரதாயத்தில் இருக்கக்கூடிய ஒன்று. இதை யாராலும் தடுக்க முடியாது. எந்த அமைப்பிற்கும் அந்த அருகத்தையும் கிடையாது. அரசுக்கும் அந்த அருகதை கிடையாது.

தடுத்து பாருங்கள்
முடிந்தால் இந்த பட்டினப் பிரவேசத்தை தடுத்து பாருங்கள். யாராலும் முடியாது. இந்து மதத்திற்கு விரோதமாக செயல்படும் எந்த அமைச்சரும்.. எம்எல்ஏவும் சாலையில் நடமாட முடியாது. இந்து மதத்திற்கு எதிரான துரோகிகளுக்கு எச்சரிக்கை விடுகிறேன்.. கடுமையான எச்சரிக்கை விடுகிறேன், என்று கூறி இருந்தார். ஜீயர் ஒருவர்.. ஆளும் கட்சி அமைச்சர்கள் பற்றி இப்படி பேசியது பெரிய அளவில் சர்ச்சையானது. அரசு இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டனர்.

ஜீயர் கருத்து திருமா
தமிழ்நாடு அமைச்சர்கள் யாரும் சாலையில் நடமாட முடியாது என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்த மன்னார்குடி ஜீயருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் பதில் அளித்துள்ளார். அதில், ஆட்சியதிகாரத்தையும் எச்சரிக்கக் கூடிய ஆற்றல்மிக்க அதிகாரம் கோவில், மடம் ஆகியவற்றின் கருவறைக்கே உள்ளது என்பதை திருமிகு ஜீயரின் கர்ச்சனை உணர்த்துகிறது. ஜனாதிபதியின் அதிகாரத்தைவிடவும் மடாதிபதியின் அதிகாரமே இங்கு மகாபெரியது.

வல்லமை
இதுதான் சனாதனத்தின் வல்லமை, என்று திருமா காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். திமுகவினர் இடையே ஜீயரின் கருத்து கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜீயரால் இப்படி வேறு ஆட்சியில் பேச முடியுமா? திமுக என்றதும்தான் இப்படி மோசமாக விமர்சனம் வைக்கிறார். ஆனால் அவரை அரசு கண்டுகொள்ளவே இல்லை. அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications