Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐடி காரிடர் இருக்குற ஏரியா! இனிமே இந்த பக்கம் போறீங்கன்னா நல்லா யோசிச்சுக்கோங்க.. சென்னையில் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக செல்லும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் பிற பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இந்த பகுதியில் பயணிப்பது உயிரை பணயம் வைப்பது போல மாறி உள்ளது.

குறிப்பாக கோவிலம்பாக்கம் மற்றும் ஈச்சங்காடு இடையே உள்ள 3 கிமீ தூரம் வழியாக பயணிக்கும் போது கடுமையான நெருக்கடியை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அதற்குக் காரணம் இங்கே தெரு விளக்கு இல்லை. இரண்டு பக்கமும் லாரிகள் வரிசையாக நிற்கும். இரவில் இங்கே செல்கையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

Pallavaram- Thoraipakkam radial road in Chennai facing issues due to bad road lights

முக்கியமாக கோவிலம்பாக்கம் மற்றும் ஈச்சங்காடு இடையே உள்ள 3 கிமீ தூரம் வழியாக பயணிக்கும் போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

தெரு விளக்கு; 54 கோடி செலவில் தாம்பரம் கார்ப்பரேஷன் அதன் அதிகார வரம்பு முழுவதும் எல்இடி விளக்குகளை நிறுவத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் அழகு மீனா கூறுகையில், ஜிஎஸ்டி சாலை மற்றும் குரோம்பேட்டையில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது.

40000க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எல்இடி விளக்குகளால் மாற்றப்பட்டு வருவது குறித்து அவர் பேசினார். சென்னையில் உள்ள இந்த முக்கியமான ரேடியல் சாலையில் பல ஐடி அலுவலகங்கள் மற்றும் பிற அலுவலகங்கள் உள்ளன. இந்த சாலை விமான நிலையத்தையும் ஜிஎஸ்டி சாலையையும் சென்னையில் OMR உடன் இணைக்கிறது என்பது தெரிந்ததே. இருப்பினும் சென்னை பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக செல்லும் சாலையில் மட்டும் இன்னும் விளக்குகள் பொருத்தப்படவில்லை.

இதனால் இந்த சாலையில் செல்லும் மக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

சாலை இணைப்பு: சென்னை ஓஎம்ஆர் சாலையை 6 வழி சாலையாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அங்கே இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ( ecr) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (omr) ஆகிய சாலைகளை இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் பல காலமாக நிலுவையில் இருந்த நிலையில் ஒருவழியாக இதற்கு தற்போது டெண்டர் விடப்பட்டு உள்ளது.

மொத்தமாக 1000 கோடி செலவில் உருவாக உள்ள இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மொத்தமாக சென்னையே அடியோடு மாறும். ஓஎம்ஆர், ஈசிஆரில் தற்போது உள்ள ஒன்றரை மணி நேர பயணம் அதிகபட்சம் 20 நிமிடமாக குறையும் என்கிறார்கள்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கிழக்கு கடற்கரை சாலையை (ECR) சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டுடன் (CPRR) இணைக்கும் பூஞ்சேரியில் ட்ரம்பெட் இன்டர்சேஞ்ச் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். 1.8 கிமீ நீளம், ₹40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட இணைப்பு வசதி, ECR இல் போக்குவரத்தை குறைக்கவும், நகரத்திற்குள் செல்லாமல் எண்ணூருக்கு வசதியாக பயணிக்கவும் அனுமதிக்கும்.

இந்த சாலைக்கு CPRR என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த CPRR முடிந்ததும், பல இடங்களுக்கு இணைப்பு அதிகரிக்கும். எண்ணூரில் இருந்து ஒருவர் புதுச்சேரிக்கு சாலை மார்க்கமாக ஐந்தரை மணி நேரத்திற்குப் பதிலாக மூன்றரை மணி நேரத்தில் செல்ல முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள். இது நேரத்தையும், எரிபொருளையும் மிச்சப்படுத்தவும், வாகனங்களின் தேய்மானத்தைக் குறைக்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள ஓஆர்ஆர் சாலை அதாவது அவுட்டர் ரிங் ரோடு சாலையும் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதன்படி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) டெல்லியைச் சேர்ந்த ருத்ராபிஷேக் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 62 கிமீ வெளிவட்டச் சாலையின் (ஓஆர்ஆர்) இருபுறமும் மேம்படுத்துவதற்கான வரைபடத்தைத் தயாரிக்க ரூ.2.9 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.

அரசு ஆதாரங்களின்படி, ஓஆர்ஆர் எனப்படும் வெளிவட்டச் சாலையானது நிலையான வேகமான உயர் வளர்ச்சி பாதையாக அரசாங்கத்தால் பார்க்கப்படுகிறதாம். அதனால் இங்கே வேகமாக முன்னேற்ற பணிகளை மேற்கொள்ள உள்ளனர். சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் உயர்ந்த கட்டிடங்கள் மூலம் இந்த பகுதிகள் வணிக மற்றும் தொழில்துறை சார்ந்த முதலீடுகளை ஈர்க்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+