டைட்டானிக் ஹீரோ டிகாப்ரியோ பதிவிட்டிருந்த பல்லாவரம் கிணறு நிறைஞ்சிடுச்சு.. மக்கள் ஹேப்பி
Recommended Video
சென்னை: பிரபல ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ பதிவிட்டிருந்த பல்லாவரம் கிணறு தற்போது நீர் நிறைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை நகரம் கடந்த ஏப்ரல் மாதம் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பல்லாரவரம் கிணறு புகைப்படத்தை பதிவிட்டு, "மழையால் மட்டுமே சென்னையைக் காப்பாற்ற முடியும்" என பதிவிட்டு இருந்தார்.
"மழையால் மட்டுமே சென்னையைக் காப்பாற்ற முடியும். நீர் அளித்து வந்த கிணறுகள் முற்றிலுமாக வறண்டிகிடக்கிறது. ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டுவிட்டன. இந்தியாவின் தெற்குகோடி நகரமான சென்னை கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டில் உள்ளது. மக்கள் காலி குடங்களுடன் அரசு தரும் தண்ணீருக்காக வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டால் அங்கு பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. சென்னை வாழ் மக்கள் மழைக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.

பல்லாவரம் ஈஸ்வரி நகர்
அவர் பதிவிட்டு இருந்த கிணறு பல்லாவரம் 6-வது வார்டு ஈஸ்வரி நகர் புதுகுடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ளது இந்தக் கிணறு. 1975 - ம் ஆண்டு ரயில்வே துறையினரால் தோண்டப்பட்டது.

தண்ணீர் தாகம் தீர்த்தது
ரயில்வே காலத்தில் தோண்டப்பட்டதால் இதை ரயில்வே கிணறு என்று அந்த பகுதி மக்கள் அழைக்கிறார்கள். இந்த கிணறை ரயில்வே எப்போதோ அந்த பகுதி மககளுக்கே கொடுத்துவிட்டது. தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்ட ஏப்ரல் மே மாத காலக்கட்டத்தில் காலை 1 மணிநேரமும், மாலை 1 மணிநேரமும் வீட்டுக்கு 4 குடங்கள் தண்ணீர் வழங்கப்பட்டது. இந்த தண்ணீர் தூய்மையாக இருக்கும் என்பதால் இதை பிடிக்க நீண்ட வரிசையில் காலிக்குடங்களுடன் மக்கள் காத்திருந்து பிடித்து சென்றார்கள். இதைத்தான் டைட்டானிக் ஹீரோ நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ ஒரு செய்தி தளத்தில் வெளியான பதிவை வைத்து பதிவிட்டு இருந்தார்.

சென்னையில் தென்மேற்கு பருவகாற்று
‘இந்நிலையில் தென்மேற்கு பருவக்காற்று சென்னை பக்கம் கொஞ்சம் நன்றாகவே வீசியதாலும், வெப்பச்சலனத்தாலும் நல்ல மழை பெய்தது இயல்பை விட கடந்த இரண்டு மாதங்களில் சென்னையில் மழையின் அளவு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சென்னையில் அனைத்து பகுதியிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பல்லாவரம் கிணற்றில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. அங்குள்ள மக்களுக்கு போதும் என்ற அளவுக்கு தண்ணீரை வழங்கி வருகிறது அந்த கிணறு.
|
பல்லாவரம் மக்கள் நெகிழ்ச்சி
ஹாலிவுட் நடிகர் டிகார்பியோவின் பதிவும், அதனை தொடர்ந்த மக்களின் வேண்டுதல்களும் பலித்து கிணற்றில் தண்ணீர் நிறைந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் நெகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications