"துவரம் பருப்பு, பாமாயில்" வாங்கலயா? இந்த மாதம் ரேஷனில் வாங்கிக் கொள்ளலாம்.. தமிழக அரசு!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஜூலை மாதம் பல ரேஷன் கடைகளில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பொதுமக்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் ஜூலையில் வாங்காத ரேஷன் அட்டைதாரர்கள் இந்த மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில்களை ரேஷன் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 2.23 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வெளிசந்தையை விட குறைந்த விலையில் ரேஷன் கார்டு தாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பொருட்களை அரசு மொத்தமாக டெண்டர் மூலம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் வாரியாக அனுப்பி வைக்கிறது. சில நேரங்களில் ரேஷன் பொருட்கள் டெண்டர் மற்றும் கொள்முதலில் தாமதம் ஏற்படும்.
அத்தகைய நேரத்தில் ரேஷனில் குறிப்பிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்காமல் போகிறது. அந்த வகையில்தான், கடந்த மாதம் அதாவது ஜூலையில் தமிழகத்தின் பல்வேறு ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயிலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. சில இடங்களில் பொதுமக்கள் ரேஷன் பொருள் விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர்கள் தமிழக அரசை விமர்சனம் செய்ய தொடங்கினர்.
இத்தகைய சூழலில் தான் ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்தில் தட்டுப்பாடு இன்றி ரேஷன் கடைகள் மூலம் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கிடைக்குமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்நிலையில் தான் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஜூலை 2024 ஆம் மாதத்தில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.
ஜூன் 2024 ஆம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள், ஜூன் 2024ஆம் மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஜூலை 2024 ஆம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என சட்டமன்றத்தில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் ஜூன் 2021ஆம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜுலை 2024ஆம் மாதத்தில் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், ஜூலை 2024ஆம் மாதத்தில் சிறப்பு பொது விநியோகத்திட்டப் பொருட்கள் முழுமையாக நகர்வு செய்யப்படாத காரணத்தினால் குடும்ப அட்டைதாரர்களால் ஜூலை 2024ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முழுமையாக பெற இயலவில்லை.
ஆதலால், குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு ஜூலை 2024ஆம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் அவர்களுக்கான ஜுலை 2024 ஆம் மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஆகஸ்ட் அறிவிக்கப்படுகிறது. 2024 ஆம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications