பிஎப் + பான் கார்டு.. ஒரே நாளில் தங்கம் மாதிரி 2 அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய அரசு! ரொம்ப முக்கியம்
சென்னை: மத்திய அரசு இன்று இரண்டு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. ஊழியர்கள், பொதுமக்கள் இடையே இந்த அறிவிப்புகள் கவனத்தை பெற்றுள்ளன.
ஆதார் கார்டு தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்டு முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.
மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியம் ஆகி உள்ளது.

பான் கார்டு
அந்த வகையில் நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. பான் கார்டு என்பது நம்முடைய நிரந்தர கணக்கு எண் ஆகும். நமது அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று அனைத்துடனும் இந்த எண் இணைக்கப்பட்டு இருக்கும். லோன் எடுக்க, வருமான வரி தாக்கல் செய்வது, வங்கியில் அதிக அளவு பண பரிவர்த்தனை செய்வது போன்ற செயல்களுக்கு பான்கார்டு அவசியம். நம் வரவு செலவு அனைத்தும் இதன் மூலமே கண்காணிக்கப்படுகிறது.

கால அவகாசம்
இதற்காக கால அவகாசம் ஏற்கனவே பல முறை நீட்டிக்கப்பட்டுவிட்டது. பல முறை இந்த அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மார்ச் 31ம் தேதி வரை இதற்கான அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதற்குள் உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் பான் செயலற்றதாகி விடும். அதாவது அந்த எண் டீ ஆக்டிவேட் ஆகிவிடும். அப்படி ஆகும் பட்சத்தில் நீங்கள் பணம் அனுப்புவது தொடங்கி லோன் எடுப்பது, வருமான வரி தாக்கல் செய்வது வரை எல்லாம் சிக்கலாகும். சிக்கலாகும் என்பதை விட மொத்தமாக இந்த பணிகளை செய்வது இயலாத காரியம்.

நீட்டிப்பு
தற்போது இதற்கான அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மக்கள் பலரும் பான் கார்டை இணைக்காமல் இருந்த நிலையில் ஜூன் 30 வரை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் கட்டணம் இன்றி பான் அட்டையை இணைக்க ஜூன் 30ம் தேதியுடன் நேரம் முடிந்துவிட்டது. அதன்பின் வரும் ஜூன் 31ம் தேதி வரை கட்டணத்துடன் 1000 ரூபாய் செலுத்தி பான் அட்டையை இணைக்க முடியும். அதற்குள் உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் பான் செயலற்றதாகி விடும்.

பிஃஎப்
இன்னொரு பக்கம் மாத ஊழியர்களை குஷிப்படுத்தும் விதமாக மாத சம்பளக்காரர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த EPFO வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த அமைப்பின் 2 நாள் கூட்டத்தின் முடிவில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி 2022-23 ஆம் நிதியாண்டுக்கு பிஎப் டெபாசிட் தொகைக்கு 8.15 சதவீதம் அடிப்படையில் வட்டி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இதன் சதவிகிதம் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. மார்ச் 2022 இல் 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான EPF கணக்கு வட்டி விகிதம் 8.10% என்று அதிகரித்து இருந்தது. தற்போது 2022-23 ஆம் நிதியாண்டுக்கு இதில் 0.5 சதவிகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இப்படி ஒரே நாளில் மத்திய அரசு இரண்டு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. ஊழியர்கள், பொதுமக்கள் இடையே இந்த அறிவிப்புகள் கவனத்தை பெற்றுள்ளன.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications