பான் கார்டு விதிகள் கடுமையாகுது.. ஏப்ரல் 1-க்கு முன்பே இதை பண்னிடுங்க! புதிதாக அப்ளை பண்ண போறீங்களா?
சென்னை: பான் கார்டு விண்ணப்ப நடைமுறைகளில் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மிக முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. தற்போது வரை ஆதார் கார்டு விவரங்களை மட்டுமே வைத்து பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால், இந்த விதிமுறை வரும் 31 ஆம் தேதியோடு முடிவுக்கு வர உள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பான் கார்டு என்பது நிதி பரிவர்த்தனைக்கான முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. 10 இலக்கம் கொண்ட பான் கார்டு, வங்கிகளில் பெரிய அளவிலான பண பரிமாற்றம், சொத்து பதிவு உள்ளிட்டைவைகளுக்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. பான் கார்டு விண்ணப்ப நடைமுறைகளில் மிக முக்கிய மாற்றத்தை வருமான வரித்துறை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்
இந்த புதிய முறை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. அதாவது, தற்போது வரை பான் கார்டு விண்ணப்பிக்க ஆதார் கார்டு மட்டும் போதுமானது. ஆதார் விவரங்களை கொடுத்து பான் கார்டுக்கு விண்ணப்பித்தால் பான் எண் ஒதுக்கப்பட்டு விடும். ஓரிரு நாட்களில் வீட்டிற்கு பான் அடையாள அட்டையும் கூரியர் ஆகிவிடும்.
ஆனால் வரும் 1 ஆம் தேதி முதல் ஆதார் கார்டு மட்டுமே வைத்து விண்ணப்பிக்க முடியாது. புதிதாக பான் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆதார் கார்டுடன் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். குறிப்பாக பிறந்த தேதிக்கு ஆதார் கார்டுடன் கூடுதல் சான்றுகள் சமர்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
புதிய படிவங்கள் அறிமுகம்
பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பத்தாம் வகுப்பு கல்வி சான்றிதழ், பிரமாணப்பத்திரம் மற்றும் பிற அரசு ஆவணங்கள் ஆகிய ஏதேனும் ஒன்றை பிறந்த தேதிக்கு சான்றாக சமர்பிக்க வேண்டும். அதேபோல, பான் கார்டு விண்ணப்பம் செய்வதற்கு பழைய விண்ணப்ப படிவங்களும் மார்ச் 31 ஆம் தேதி வரையே செல்லுபடியாகும்.
ஏப்ரல் 1, 2026 க்கு பிறகு புதிய படிவங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மற்றொரு முக்கியமான அப்டேட் என்னவென்றால், வரும் ஏப்ரல் முதல் பான் கார்டில் உள்ள பெயர் ஆதாரில் உள்ள விவரங்களுடன் அப்படியே பொருந்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் கார்டு விண்ணப்பத்தில் வரவிருக்கும் இந்த நடைமுறை பற்றி மத்திய அரசின் 'பொதுச் சேவை மையங்கள்' (Common Services Centres) தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.
ஆன்லைன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இந்த பொதுச்சேவை மையம் செயல்படுகிறது. எனவே பான் கார்டு விண்ணப்பிக்க திட்டமிட்டு இருப்பவர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்தால் கூடுதல் ஆவணங்கள் இன்றி ஆதார் கார்டு மட்டுமே வைத்து விண்ணப்பித்துக்கொள்ள முடியும்.
புதிய பான் கார்டுக்கு ஆன்லைன் வழியாகவும் எளிதாக விண்ணப்பிக்க முடியும். வருமான வரித்துறையின் NSDL இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியும். NSDL வெப்சைட்டில் உள்ள 'Apply Online' என்பதில் 'New PAN - Indian Citizen (Form 49A)' என்பதை தேர்வு செய்து, தனிப்பட்ட விவரங்களை (பெயர், பிறந்த தேதி, மொபைல் எண்) உள்ளிட்டவற்றை வழங்கி விண்ணப்பிக்க முடியும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications