கேஸ் சிலிண்டர் புக் செய்ய போறீங்களா.. முதல்ல இதை பாருங்க.. மொத்த நாட்டுக்கும் இனி ஒரே நம்பர்தான்
சென்னை: நவம்பர் 1 முதல், இண்டேன் காஸ் சிலிண்டர் உபயோகிப்பாளர்கள் சிலிண்டர்களை புக் செய்ய புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுமைக்கும் எங்கிருந்தாலும், இந்த ஒரே நம்பரில் இனி புக் செய்யலாம்.
இந்தியன் ஆயில் நிறுவனம், வாடிக்கையாளர்கள் வசதிக்காக நாடு முழுவதும் இண்டேன் எல்பிஜி ரீஃபில் முன்பதிவு செய்வதற்கான பொதுவான எண்ணை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
இதுவரை நீங்கள் போனில் பதிவு செய்து வைத்த தொலைபேசி எண்ணை இனி மறந்துவிடலாம்.

புதிய முன்பதிவு எண்
எல்பிஜி ரீ ஃபில்லிங்கிற்கான பொதுவான முன்பதிவு எண் 7718955555. இதை வாடிக்கையாளர்கள் 24x7 எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். "இண்டேன் எல்பிஜி ரீ ஃபில்லிங்கிற்காக தற்போது தொலைத் தொடர்பு வட்டம் அடிப்படையில் குறிப்பிட்ட தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டது. 31.10.2020 நள்ளிரவுக்குப் பிறகு இந்த எண்ணின் சேவை நிறுத்தப்படும், மேலும் எல்பிஜி ரீ பில்லிங்கிற்கு பொதுவான முன்பதிவு எண் 7718955555 நடைமுறையில் இருக்கும்" என்று பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வேறு மாநிலம் சென்றாலும்
அகில இந்திய எல்பிஜி ரீ ஃபில்லிங்கிற்கான இந்த பொதுவான எண் - எஸ்எம்எஸ் மற்றும் ஐவிஆர்எஸ் மூலம் - வாடிக்கையாளர் வசதியை அதிகரிப்பதற்கும், இண்டேன் எல்பிஜி ரீ ஃபில்லிங், முன்பதிவு செய்வதற்கும் ஒரு முக்கியமான திட்டமாகும். வாடிக்கையாளர்கள் ஒரு தொலைதொடர்பு வட்டத்திலிருந்து மற்றொரு மாநிலம் சென்றாலும், அவர்களின் இண்டேன் ரீஃபில்லிங் எண் அப்படியே இருக்கும்.

வாடிக்கையாளர் செல்போன் எண் முக்கியம்
வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி மட்டுமே இண்டேன் எல்பிஜி முன்பதிவு செய்ய முடியும். எல்பிஜி ரீ ஃபில்லிங் புக்கிங் மற்றும் மற்றும் மொபைல் எண் பதிவின் திருத்தப்பட்ட செயல்முறை பின்வருமாறு: ஏற்கனவே உங்கள் செல்போன் எண் இண்டேனுடன் பதிவு செய்யப்பட்டு இருந்தால், -ஐவிஆர்எஸ் 16 இலக்க நுகர்வோர் ஐடியைக் கேட்கும். - இந்த 16 இலக்க கஸ்டமர் ஐடி உங்களின் இண்டேன் எல்பிசி இன்வாய்ஸ் /பண ரசீது/சந்தாதாரர் வவுச்சர்களில் இடம் பெற்றிருக்கும். -இந்த எண் உறுதி செய்யப்பட்டதும், ரீஃபில் புக்கிங் ஏற்கப்படும்

பதிவு செய்திருக்காவிட்டால்
வாடிக்கையாளர் செல்போன் நம்பர் இண்டேன் பதிவுகளில் இல்லாவிட்டால்: -7ல் துவங்கும் 16 இலக்க வாடிக்கையாளர் ஐடியை பதிவு செய்து, மொபைல் நம்பரை பதிவு செய்ய வேண்டும். - ஐவிஆர்எஸ் அழைப்பு மூலமாக இது உறுதி செய்யப்படும் - பதிவு செய்த பிறகு அந்த செல்போன் எண்ணிலிருந்து ரீஃபில் புக்கிங் செய்யலாம் - இந்த 16 இலக்க கஸ்டமர் ஐடி உங்களின் இண்டேன் எல்பிசி இன்வாய்ஸ் /பண ரசீது/சந்தாதாரர் வவுச்சர்களில் இடம் பெற்றிருக்கும்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications