'பட ரிலீசுக்கு கை கட்டி நின்ற பனையூர் பண்ணையாரே!' விஜய்யை ரவுண்டு கட்டும் அதிமுக! வெரி ராங்க் ப்ரோ
சென்னை: மாமல்லபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், அதிமுகவை ஒரு காட்டு காட்டியிருந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அக்கட்சி, தற்போது விஜய்யை 'பனையூர் பண்ணையார்' என குறிப்பிட்டு விமர்சித்திருக்கிறது.
வழக்கமாக அதிமுக பக்கம் விஜய் வண்டியையும் சரி, தனது வாயையும் சரி திருப்பியது கிடையாது. ஆனால், தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில், இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

என்ன பேசினார் விஜய்?
மாமல்லபுரத்தில் பேசிய விஜய், "தீய சக்தியாக இருக்கட்டும்.. ஊழல் சத்தியாகட்டும்.. இரண்டுமே தமிழ்நாட்டை ஆளக்கூடாது. அப்படிப்பட்ட கட்சிகளை உண்மையாகவே எதிர்க்கிற தைரியம், நம்மிடம் மட்டும் தான் இருக்கிறது. அதனால் எந்த சூழ்ச்சி செய்தாலும், எந்த அழுத்தம் கொடுத்தாலும்.. பணிந்து போக, அடிமையாய் இருக்க நான் அரசியலுக்கு வரவில்லை.
அதிமுகவை விமர்சித்த விஜய்
என் மண்ணுக்கும், மக்களுக்கும் யார் தீமை செய்தாலும்.. அதை எதிர்த்து அவர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க தான் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். மக்களிடம் செல் என, அறிஞர் அண்ணா சொன்னதை நாம் சரியாகப் புரிந்து கொண்டு.. நம்முடைய அரசியலை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஏனெனில் இப்போது அரசியலில் இருக்கிறவர்கள், அண்ணாவை மறந்து விட்டார்கள்.
அண்ணா தொடக்கி வைத்த கட்சியும், அண்ணாவையும் மறந்து சுயநலமாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. அண்ணா பெயரில் இருக்கும் கட்சியும் அவரை மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், நாம் அவரை மறந்து விடக்கூடாது" என்று பேசியிருந்தார்.
விஜய் இப்படி பேசுவார் என்று கொஞ்சமும் யோசிக்காத அதிமுக, தற்போது விஜய் குறித்து சரமாரியான விமர்சனங்களை அடுக்கியிருக்கிறது.
பனையூர் பண்ணையார்
"பனையூர் பண்ணையார் அவர்களே, ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நீங்கள்தான் ஆகப்பெரும் ஊழல்வாதி.
அஇஅதிமுக என்னும் பேரியக்கம்
'மத்திய அரசிற்கு அடிமை' என்பது அண்ணாதிமுகவின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. எப்போதெல்லாம் மாநில நலனுக்கும், உரிமைகளுக்கும் சோதனை வருகிறதோ , அப்போதெல்லாம் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெற்று , மக்களின் நலன்களை வாதாடி பெற்ற இயக்கம், எங்கள் அஇஅதிமுக என்னும் பேரியக்கம் என்பதுதான் வரலாறு...!
கைகட்டி காத்திருந்த விஜய்
தன் திரைப்படம் வெளியாக வேண்டுமென அன்றைய முதல்வர் வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி காத்திருந்து, வெளியிட்ட படத்தின் பெயரை நாங்கள் சொல்லவா..? இல்லை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய முதலமைச்சர் பெயரை நீங்கள் சொல்லுகீறீர்களா..? ஊழல் என்பது வெறுமனே அரசியலில் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. Undue influence மூலம் தனக்கான வருமானத்தைப் பெருக்க அதிகார மையத்திடம் மண்டியிடுவதும் அதே வகை தான் பனையூர்காரரே..!
பக்கத்தில் செங்கோட்டையன்
அண்ணாதிமுகவின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குறைசொல்லிவிட்டு, அந்தாட்சியில் கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனை ஒருங்கிணைப்பாளர் என்று பக்கத்திலேயே உட்கார வைத்து கொள்வதுதான், நீங்கள் சொல்லுகின்ற தூயசக்திக்கான விளக்கவுரையா?
வேற லெவல் பண்ணையார்தனம்
நீங்கள் செய்தீர்களோ? இல்லையோ? ஆனால் கருரில் 41 பேரின் மரணத்திற்கு நீங்களும் ஒரு காரணம்தானே! அதற்கான பிராயசித்தங்களை செய்யாமல், என்ன வழக்கு வரபோகிறதோ என்ற பயத்தில் 72 நாட்களுக்கும் மேல் பனையூரில் பதுங்கி , 15 நாட்கள் கட்சியின் அலுவலகத்தையே மூடிவைத்தீர்களை? அதுதான் நீங்கள் எவ்வளவு பெரிய வீரர் என்பதற்கான விடை...!
உலக வரலாற்றிலேயே முதன்முறையாக இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லாமல் , பனையூரில் வந்து ஆறுதல் வாங்கி செல்ல வைத்தது எல்லாம் வேற லெவல் பண்ணையார்தனம்...! இதற்காக உங்களுக்கு Doctor பட்டமே கொடுக்கலாம்...!
ஆபத்தான அரசியலின் அடையாளம்
கரூர் சென்று கண்ணீரைத் துடைக்காமல் , Glycerin கண்ணீரோடு , Photo-க்களை வைத்து பேருக்கு ஒரு அஞ்சலி நிகழ்ச்சி நடத்திவிட்டு குற்ற உணர்வு சிறிது கூட இல்லாமல், அந்த நிகழ்ச்சியிலும் தன்னை Self Promotion செய்து கொண்ட Narcissistic Behaviour மிகவும் ஆபத்தான அரசியலின் அடையாளம். அரசியலில் நல்லவர்களாக இருக்கலாம் , வல்லவர்களாக இருக்கலாம் ஆனால் ஒன்றுமே தெரியாத-புரியாத , தனது Fan'sஐ கூட ஏமாற்றும் , இன்னும் டைரக்டர் நடிகரவாகவே இருக்கும் தவெக தலைவர் போன்றவராக மட்டும் இருந்துவிட கூடாது ....!
நீங்கள் எங்கள் கழகம் குறித்து, மனனம் செய்து ஒப்புவிக்கும் ஒட்டுமொத்தக் கருத்துருவும் ஒன்னா நம்பர் குப்பையே..! அறிவாலய குப்பையோடு, பனையூர் குப்பையையும் கூட்டியெறிந்திடுவோமாக. DOT" என்று விமர்சித்திருக்கிறது.
இதை சற்றும் எதிர்பார்க்காத தவெகவினர், இட்ஸ் வெரி ராங் ப்ரோ என்று, அதிமுகவுக்கு பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளனர்.
-
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
அடுத்த 3 நாட்களில் ரூ.3,000 வரும்.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்! விஜய்யின் மெகா திட்டம்! -
திருமணத்தை மீறி நடிகையுடன் தொடர்பு! முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை! -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்! -
"கரண்ட் போனால் என்ன? விஜய்யை கேட்டா வந்துருமா?" என் வீட்டுல இருக்கு! வினோதமாக பேசிய மாஸ்டர் மகேந்திரன் -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
அந்த குழந்தையே நீங்க தான் சார்.. தவெக கூட்டணி.. துரை வைகோ கொடுத்த ஹின்ட் -
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் அடுத்த நாள் பணியில் இருக்க முடியாது.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது!











Click it and Unblock the Notifications