ஒற்றை வண்டியில் ரெட்டை மாடு.. ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை மீது பரபர புகார்! நாளைக்கு ரொம்ப முக்கியம்!
சென்னை: திருமணம் செய்ததை மறைத்து தன்னிடம் நகை பணத்தை மோசடி செய்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த நடிகை ரிஹானா பேகம் மீது ராஜ் கண்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் சின்னத்திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ரிஹானாவும், ராஜ் கண்ணனும் வரும் 18ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்தவர் ரிஹானா பேகம். ஏற்கனவே மீனாட்சி பொண்ணுங்க, ஆனந்த ராகம் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தான் அவர் மீது மோசடி புகார் எழுந்திருக்கிறது.
சென்னை போரூர் அருகே கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் ராஜ் கண்ணன் என்பவர் தான் ரிகானா பேகம் மீது புகார் சொல்லியிருக்கிறார். இது தொடர்பாக பூந்தமல்லி காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்திருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள ரிஹானா பேகம் ஒரு நண்பர் மூலம் ராஜ் கண்ணனிடம் அறிமுகமானார். தொடர்ந்து இருவரும் நட்பாக பழகி வந்துள்ளார்கள். ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்த நிலையில் இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும். கணவருக்கும் தனக்கும் விவாகரத்து நடந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். ராஜ் கண்ணனுக்கு திருமணம் ஆகாத நிலையில் ரிஹானா பேகத்தை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவரது தாய் சொன்னதாக சொல்லப்படுகிறது.
அதன் பிறகு இருவரும் காதலித்த நிலையில் பூந்தமல்லி அருகே இருக்கும் ரிஹானா பேகத்தின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார். தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில் ரிஹானா பேகம் நகை பணம் உள்ளிட்டவற்றைக் கேட்டுள்ளார். இதை அடுத்து சுமார் 20 லட்சம் ரூபாய் வரை ரிஹானா பேகத்திற்கு ராஜ் கண்ணன் செலவழித்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது.
இதற்கிடையே திருமணம் நடந்ததும் சில நாட்களில் சீரியல் பிடிப்புக்கு செல்வதாக கூறிய அடிக்கடி வெளியூர் சென்றிருக்கிறார். இது தொடர்பாக விசாரித்த போது தான் அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் தொடர்ந்து அவரிடம் தொடர்பில் இருந்ததோடு ராஜ் கண்ணனிடம் நகை பணத்தை வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ரிஹானா பேகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜ் கண்ணன் பூந்தமல்லி காவல் நிலையில் புகார் அளித்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ள பூந்தமல்லி போலீசார் ரிஹானாவுக்கும், புகார் கொடுத்த ராஜ் கண்ணனுக்கும் சம்மன் அனுப்பி இருக்கின்றனர். பதினெட்டாம் தேதி (நாளை) பூந்தமல்லி போலீஸ் முன்பு அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மனில் தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், நாளை விசாரணைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து போலீசார் முடிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications