Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ் அணியுடன் பாஜக கூட்டணி? "தொடர்பில் தான் இருக்காங்க.." போட்டு உடைத்த பண்ருட்டி ராமச்சந்திரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில், ஓபிஎஸ் அணியுடன் பாஜக கூட்டணி அமைக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், இது தொடர்பாக ஓபிஎஸ் அணியின் பண்ருட்டி ராமச்சந்திரன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணி கடந்த சில ஆண்டுகளாகவே ஒன்றாகவே பயணித்து வந்தது. கடந்த 2019 லோக்சபா தேர்தல், அதைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், சட்டசபைத் தேர்தல் எனத் தொடர்ச்சியாகப் பல தேர்தல்களை இணைந்தே சந்தித்தனர்.

இருப்பினும், இரு கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து அவ்வப்போது மோதல் போக்கே நிலவி வந்தது. குறிப்பாக அதிமுக தலைவர்கள் விமர்சிக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசி வந்தார். இதற்கு அதிமுக தலைவர்களும் பதிலடி கொடுத்து வந்தனர்.

Panruti Ramachandran says BJP contacting O Panneerselvam regarding alliance after AIADMK-BJP broke

அதிமுக- பாஜக: இந்தச் சூழலில் தான் அண்ணா குறித்து அண்ணாமலை ஒரு சர்ச்சை கருத்தைத் தெரிவித்தார். அதற்கு அதிமுகவில் இருந்து கடும் எதிர்வினை வந்தது. ஜெயக்குமார், சிவி சண்முகம், செல்லூர் ராஜு எனப் பலரும் அண்ணாமலையை மிகக் கடுமையாகச் சாடினர். அதைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் தான் கூட்டணி முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே ஓபிஎஸ் அணியுடன் பாஜக கூட்டணி அமைக்கலாம் எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக ஓபிஎஸ் அணியில் உள்ள மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தலைநகர் சென்னையில் கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தீவிர ஆலோசனை: இந்தக் கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற நிலையில், இதில் பல முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், "இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தோம்.

ஓபிஎஸ் தலைமையில் வரும் அக். 11ஆம் தேதி கழக நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும். அடுத்த கட்டமாக உறுப்பினர் சேர்க்கை பணிகளையும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். லோக்சபா தேர்தல் பணியைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.

பாஜக உடன் கூட்டணி? தொடர்ந்து கூட்டணி குறித்த கேள்விக்குப் பதிலளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், "இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு இன்னும் நடந்து வருகிறது. அந்த வழக்கில் எப்படித் தீர்ப்பு வருகிறது என்பதைப் பொறுத்தே முடிவு எடுக்கப்படும். கூட்டணி விவகாரத்தைப் பொறுத்த வரை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஏற்கனவே இது தொடர்பாகக் கருத்து கூறியிருக்கிறார்.

பாஜக தலைமை அவரை தொடர்பு கொண்டுள்ளனர். அதேநேரம் எத்தகைய கூட்டணி, எப்படி இது அமையும் என்பதை நாம் இப்போது தீர்மானிக்க முடியாது. கூட்டணிக்கு யார் தலைமை என்பது குறித்து எல்லாம் தேர்தல் வரும் போது முடிவு செய்யப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

மேலும், மூன்றாவது அணி குறித்த கேள்விக்கு, "தமிழகத்தில் மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளதாகவே பத்திரிக்கைகள் கூறுகின்றன. அதை நாம் பொறுத்து இருந்து பார்க்கலாம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+