திருமாவளவன் போன்றே தோற்றம் கொண்ட விசிக நிர்வாகி பண்ருட்டி ரமேஷ் மாரடைப்பால் காலமானார்!
சென்னை: விசிக தலைவர் திருமாவளவனைப் போன்ற தோற்றம் கொண்ட விசிக நிர்வாகி பண்ருட்டி ரமேஷ் காலமானார். தோற்றத்தில் அச்சு அசலாக திருமாவளவன் போன்றே இருக்கும் பண்ருட்டி ரமேஷ், மாரடைப்பால் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பண்ருட்டி ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் இணைந்தார். தோற்றத்தில் பார்ப்பதற்கு திருமாவளவன் போலவே இருக்கும் பண்ருட்டி ரமேஷ், அவரைப் போல் பேசி தொடர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். மேலும், டிக்டாக் செயலி மூலமாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் ஆனார்.

பண்ருட்டி ரமேஷை முதன்முறையாக பார்ப்பவர்கள் அவரை திருமாவளவன் என்றே நினைத்து விடும் அளவுக்கு தோற்றத்தில் ஒற்றுமை கொண்டவர். விசிகவில் இணைந்த பண்ருட்டி ரமேஷை, மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில துணை செயலாளராக நியமித்தார் திருமாவளவன்.
இந்நிலையில், இன்று மாரடைப்பு ஏற்பட்டு கடலூர் கல்யாண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார் பண்ருட்டி ரமேஷ். கடலூர் மாவட்டம் பண்ருட்டி டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பண்ருட்டி ரமேஷ். அவரது மறைவுக்கு விசிக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பண்ருட்டி ரமேஷ் மறைவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தம்பி பண்ருட்டி ரமேஷ் அவர்களின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இருதய நோயினால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையிலிருந்தார். இன்று திடுமென நெஞ்சுவலி ஏற்பட்டு கடலூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவரது மகனைத் தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்தேன். ஆறுதல் கூறினேன்.
தம்பி ரமேஷூக்கு வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications