இனி அப்படி பார்சல் வராது! தபால் நிலையத்தின் புதிய கெடுபிடி! இந்த 1 விஷயம் தெரிந்தால் மட்டுமே டெலிவரி
சென்னை: அஞ்சல் துறை என்றாலே வெறும் கடிதம் போடுவது மட்டும்தான் என்கிற காலம் இப்போது மலையேறிவிட்டது.. தனியார் கூரியர் நிறுவனங்களுக்குப் போட்டியாகப் பல அதிரடி மாற்றங்களைத் தூத்துக்குடி அஞ்சல் கோட்டம் இப்போது கையில் எடுத்துள்ளது.. குறிப்பாக, பொதுமக்களும் வியாபாரிகளும் குறைந்த செலவில் பாதுகாப்பாகப் பார்சல்களை அனுப்ப வேண்டும் என்பதற்காகப் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.. இது குறித்து தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் அவர்கள் ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுத்துள்ளார்..
இப்போதுள்ள சூழலில் பார்சல் அனுப்புவதில் பெரிய சிக்கலே அது சரியான ஆளிடம் போய்ச் சேருமா என்பதுதான்.. இதற்காகவே அஞ்சல் துறை இப்போது ஓடிபி முறையைக் கொண்டு வந்துள்ளது.

பார்சல்கள், ஸ்பீடு போஸ்ட்
அதாவது பார்சல் உங்கள் கைக்கு வரும்போது, உங்கள் போனுக்கு வரும் சீக்ரெட் நம்பரை சொன்னால் தான் டெலிவரி செய்வார்கள்.. இதனால் பார்சல் மாறி போகவோ அல்லது காணாமல் போகவோ வாய்ப்பே இல்லை..
அதேபோல், பெரிய பெரிய பார்சல்களை தூக்கிக் கொண்டு அஞ்சலகத்திற்கு வரவேண்டிய அவசியம் இனி இல்லை.. நீங்கள் இருக்கும் இடத்திற்கே ஊழியர்கள் வந்து பார்சலை வாங்கிக் கொள்வார்கள்.. இந்த வசதியை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிறு வியாபாரிகள் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
கட்டணத்தை பொறுத்தவரை தனியார் நிறுவனங்களோடு ஒப்பிடும்போது அஞ்சல் துறையில் செலவு மிகக் குறைவுதான்.. அதேசமயம் பார்சல் எங்கே வந்து கொண்டிருக்கிறது என்பதைத் தபால்துறையின் வெப்சைட்டிலயே துல்லியமாகப் பார்த்துக் கொள்ளலாம்.
தனியார் நிறுவனங்களுக்கு இணையாக அஞ்சல் துறை
வெளிநாடுகளுக்குப் பொருட்கள் அனுப்ப வேண்டும் என்பவர்களுக்காகத் தலைமை அஞ்சலகத்திலேயே பாதுகாப்பாகப் பேக்கிங் செய்து தரும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.. ஸ்பீடு போஸ்ட் மற்றும் பார்சல் சர்வீஸ் மூலம் வழங்கப்படும் இந்தச் சேவைகளைத் தூத்துக்குடி மக்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்..
இந்த திட்டங்கள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு 9841875710 அல்லது 9791655030 என்கிற எண்களில் தொடர்பு கொண்டு மக்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.
தனியார் நிறுவனங்களுக்கு இணையாக அஞ்சல் துறை மாறி வருவது சாதாரண மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் பெரிய உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. எனவே, நம்பகமான இந்தச் சேவையைத் தூத்துக்குடி மக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு அஞ்சல் துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.. அஞ்சல் துறையின் இந்த அதிரடி மாற்றங்கள் மக்கள் மத்தியில் இப்போது பேசப்படும் ஒரு விஷயமாக மாறியுள்ளது.
அஞ்சல் துறை அதிரடி மாற்றம்
அஞ்சல் துறையின் இந்த அதிரடி மாற்றங்கள் குறித்து அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, தற்போதுள்ள டிஜிட்டல் யுகத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதே தங்களின் முதல் இலக்கு என்று தெரிவித்துள்ளனர்..
குறிப்பாக, தனியார் நிறுவனங்களுக்கு இணையான வேகமும், அதேசமயம் கூடுதல் பாதுகாப்பும் கொண்ட ஒரு சேவையை எளிய மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதே இந்த நவீனமயமாக்கல் திட்டத்தின் நோக்கம் என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.. அதனால் பொதுமக்கள் இனி தங்கள் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் முக்கியமான ஆவணங்களை அஞ்சல் துறை வழியாக அனுப்பும்போது எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும், இந்த புதிய ஓடிபி முறையைப் பின்பற்றி பாதுகாப்பான விநியோகத்தை உறுதி செய்துகொள்ளலாம் என்றும் தூத்துக்குடி அஞ்சல் கோட்டம் சார்பில் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications