Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதய நோயால் அவதிப்படும் 2 வயது சிறுவன்.. உதவுங்கள் ப்ளீஸ்! உங்களது சிறு உதவி கூட உயிரை காப்பாற்றும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பத்தூரை சேர்ந்த வெங்கட்ராமன் என்ற 2 வயது சிறுவன் இருதய பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளான். சிறுவனுக்கு இருதய அறுவை சிகிச்சை அளித்தால் தான் காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். வெங்கடராமன் தந்தை ஜோதி சாதாரண கூலி வேலை செய்து வருவதால் மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் தவித்து வருகிறார். சிறுவனின் மருத்துவ செலவுக்கு ஆகும் தொகையை ஈடுகட்ட உங்களின் உதவியை எதிர்பார்க்கிறார்கள். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.

திருப்பூத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோதி என்பவரின் 2 வயது மகன் வெங்கடராமன். குறும்புத்தனத்துடன் சிரித்து விளையாடுவதை கண்டு ரசிக்க வேண்டிய ஜோதி தம்பதிக்கு தாங்க முடியாத சோகம் ஏற்பட்டுள்ளது.

Tiruppathur Heart Surgery Hospital

தங்களது செல்ல மகன் வெங்கடராமன் 6 மாத குழந்தையாக இருந்த போது, நெஞ்சை உறைய வைக்கும் ஒரு தகவல் கிடைத்தது. அதாவது, வெங்கடராமனுக்கு இருதயத்தில் கோளாறு இருப்பதை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கண்டறிந்தனர். தங்கள் மகனுக்கு இருதய பாதிப்பு இருந்ததை கேட்டு தலையில் இடியே விழுந்ததை போல அதிர்ச்சியில் உறைந்தார் ஜோதி.

அன்றைய நாள் முதல் தினம் தினம் அச்சத்துடனும் நம்பிக்கையுடனும் நாட்களை கழித்து வருகிறார்கள். தங்கள் மகனின் இருதய பிரச்சினை சரியாகும், மற்ற குழந்தைகளை போல வெங்கடராமனும் ஓடியாடி சிரித்து மகிழ்வான் என்ற நம்பிக்கையுடன் பெற்றோர்கள் உள்ளனர்.

சமீபத்தில் மியாட் மருத்துவமனை நடத்திய இலவச மருத்துவ முகாமில் ஜோதி தனது மகனை அழைத்து சென்றார். அப்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் இருதயத்தில் மிகவும் தீவிர பிரச்சினை இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக Elective ASD Surgical Closure சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்த சிகிச்சைக்கு ரூ.2,60,000 ஆகும் என்றும் தெரிவித்தனர்.

வெங்கடராமன் தந்தை ஜோதி சாதாரண கூலி வேலை செய்து வருகிறார். தினமும் ரூ.500 சம்பளம் வாங்கும் அவருக்கு இந்த தொகை குடும்ப செலவுகளை சமாளிக்கவே போதுமானதாக இல்லை. சில நாட்கள் வேலை இல்லாமலும் போகும் என்பதால் அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்பட்டு வருகிறார்கள் வெங்கடராமன் பெற்றோர்கள்.

ஏற்கனவே அடிப்படை சிகிச்சைகளுக்காக தங்களுக்கு இருந்த சிறிய வீட்டையும் ஜோதி விற்றுள்ளார். மேலும், தனக்கு தெரிந்தவர்களிடமும் கடன் வாங்கி செலவு செய்து வருகிறார். எனவே, இவ்வளவு பெரிய தொகையை திரட்டுவது என்பது வெங்கடராமன் பெற்றோருக்கு அவ்வளவு எளிதானது அல்ல.

எனவே, தங்கள் மகனின் மருத்துவ செலவுக்கு ஆகும் தொகையை ஈடுகட்ட உங்களின் உதவியை எதிர்பார்க்கிறார்கள். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். நீங்கள் அளிக்கும் தொகை சிறியது, பெரியது என்றெல்லாம் அல்ல. எவ்வளவு தொகை கொடுத்தாலும் வெங்கடராமன் உயிரை காப்பாற்ற உதவும். ஆகவே, உடனே உங்களால் முடிந்த தொகையை அளித்து 2 வயதே ஆன வெங்கடராமன் உயிரை காப்பாற்ற உதவுங்கள். ப்ளீஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+