Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் கார்களுக்கு இருமடங்கு, இருசக்கர வாகனங்களுக்கு மூன்று மடங்கு உயரும் பார்க்கிங் கட்டணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சாலையோரம் வாகனங்களை நிறுத்த ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. அண்ணாநகரில் சாலையோர வாகன நிறுத்துமிடக் கட்டணம் அதிரடியாக உயர போகிறது. இதற்காகவே புதிய ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. அதன்படி, இருசக்கர வாகனங்களுக்கான கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.5-லிருந்து ரூ.15 ஆக மூன்று மடங்கு உயருகிறது. அதேபோல் கார்களுக்கு ரூ.20-லிருந்து ரூ.40 ஆக இருமடங்கு அதிகரிக்க போகிறது.

சென்னையில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் அதிக மக்கள் கூட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில் மட்டும் தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், அண்ணா நகரில் அமலில் உள்ளது. (நியூ ஆவடி சாலை, ஈ.வி.ஆர். சாலை மற்றும் வெளிவட்டச் சாலை ஆகியவற்றால் சூழப்பட்ட 6 சதுர கி.மீ. பகுதி). அடுத்ததாக மெரினா கடற்கரையில் அமலில் இருக்கிறது. இதேபோர் திநகரில் பனகல் பூங்கா, ஜி.என். செட்டி சாலை, பாண்டி பஜார், வெங்கட்நாராயணா சாலை மற்றும் பிற சாலைகளில் அமலில் உள்ளது. அதேபோல் நுங்கம்பாக்கம், பெசன்ட்நகரிலும் அமலுக்கு வருகிறது.

Parking fees in Chennai to double for cars triple for two-wheelers

இதில் சென்னை மாநகராட்சிக்காக சி.யூ.எம்.டி.ஏ தயாரித்த ஏரியா லெவல் பார்க்கிங் மேலாண்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாக , அண்ணா நகரில் நியூ ஆவடி சாலை, ஈ.வி.ஆர். சாலை மற்றும் வெளிவட்டச் சாலை ஆகியவற்றால் சூழப்பட்ட 6 சதுர கி.மீ. பரப்பளவில் இருசக்கர வாகனங்களுக்கு மூன்று மடங்கும், கார்களுக்கு இருமடங்கும் உயருகிறது. அதன்படி இருசக்கர வாகனங்களுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டது. கார்களுக்கு கார்களுக்கு ரூ.20-லிருந்து ரூ.40 ஆக இருமடங்கு உயர்ந்துள்ளது.

உயர்த்தப்பட்ட கட்டணத்தைத் தவிர, இந்தத் திட்டத்தின் கீழ், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி வாகனங்களை நிறுத்தும் வாகனங்கள் கிளாம்பிங் செய்யப்படும். மேலும், தினசரி அபராதக் கட்டணங்கள் விதிக்கப்படும், மற்றும் ஆறு மணி நேரத்திற்கு மேல் நிறுத்தப்படும் எந்தவொரு வாகனமும் கட்டாயமாக இழுத்துச் செல்லப்படும். கட்டண உயர்வு திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு தனியாரிடம் டெண்டர் விட்டு, செயல்படுத்தப்படும். இதற்காக 2,100 ஈக்குவலன்ட் கார் ஸ்பேசஸ் சி.யூ.எம்.டி.ஏ-வின் பார்க்கிங் மென்பொருள் மூலம் டிஜிட்டல் முறையில் நிர்வகிக்கப்படும் . இதற்காக பிரத்யேக உள்ளூர் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

கண்காணிப்பைக் கடுமையாக்கும் விதமாக, 11 நிமிடங்கள் முதல் மூன்று மணி நேரம் வரை அதிக நேரம் நிறுத்தும் வாகனங்கள் கிளாம்பிங் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு ரூ.100 மற்றும் கார்களுக்கு ரூ.300 செலுத்திய பின்னரே அவை விடுவிக்கப்படும். மூன்று மணி நேரத்திற்கு மேலும் ஆறு மணி நேரம் வரையிலும், வழக்கமான பார்க்கிங் கட்டணங்களுடன் கிளாம்பிங் கட்டணங்களும் சேர்க்கப்படும்.

அதேபோல் ஆறு மணி நேரத்திற்கு மேல் நிறுத்தப்படும் எந்தவொரு வாகனமும் இழுத்துச் செல்லப்படும். இதற்கான கட்டணங்கள் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.225, கார்களுக்கு ரூ.450 மற்றும் வணிக வாகனங்களுக்கு ரூ.800 வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தினசரி அபராதக் கட்டணங்கள் வாகன வகையைப் பொறுத்து ஒரு நாளைக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

வாகனம் நிறுத்தக்கூடாத இடங்களில் நிறுத்துவதற்கான அபராதம் ரூ.500 ஆக இருக்கும். இந்த கடுமையான அபராதங்கள் அங்கீகரிக்கப்படாத வாகன நிறுத்தத்தைத் தடுப்பதற்கும், பரபரப்பான சாலைகளில் போக்குவரத்து சீராகச் செல்வதற்கும் உதவும் என்று சென்னை மாநகராசி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். போக்குவரத்து மற்றும் பார்க்கிங் தேவை அதிகமாக உள்ள 26 கி.மீ. பரப்பளவிலான சாலைகள் முதல் கட்டத்தில் சேர்க்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.

சென்னையில் முக்கிய சாலைகளில் சராசரியாக 11,500 வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் தேவையாகும். ஆனால் ஆரம்பத்தில் சுமார் 2,100 வாகனங்களை நிறுத்த மட்டுமே இடமளிக்க முடியும். பல அடுக்கு கட்டமைப்புகள் உட்பட கூடுதல் சாலையோரமற்ற பார்க்கிங் வசதிகள் அரசால் உருவாக்கப்பட்டு, பின்னர் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+