நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்! நாளை முதல் நிர்வாகிகளுடன் சந்திப்பு.. திமுகவில் மாவட்ட வாரியாக லிஸ்ட்
சென்னை: விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் நாளை முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை மாவட்ட வாரியாக திமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. அதன்படி எந்தெந்த தேதிகளில் எந்த மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெற உள்ளது என்பது பற்றிய விபரத்தை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மே மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே தான் இந்திய தேர்தல் ஆணையமும் மாநிலம் வாரியாக அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இதனால் அனைத்து மாநிலங்களிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் என்பது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற திமுக கூட்டணி, அதிமுக மற்றும் பாஜக, நாம் தமிழர் கட்சிகள் துடித்து வருகின்றன. ஆளும் கட்சியான திமுக கூட்டணிக்கு தற்போது தமிழகத்தில் 38 எம்பிக்கள் உள்ள நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தல் என்பது முக்கியமானதாகும்.
இந்த தேர்தலிலும் அதேபோன்ற வெற்றியை பெற திமுக வியூகம் வகுத்து வருகிறது. இதற்கிடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு உள்பட பல்வேறு விவகாரங்களுக்கு திமுக குழு அமைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தான் தற்போது திமுக தலைமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னையில் வரும் 24ம் தேதி முதல் திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த அறிவிப்பு என்பது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட வாரியாக குறிப்பிட்ட தேதிகளில் நிர்வாகிகளுடன் கட்சி தலைமை ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. சென்னையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொகுதி வாரியாக ஜனவரி 24ம் தேதி (நாளை) முதல் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதன்படி வரும் 24ம் தேதி கிருஷ்ணகிரி, திருவள்ளூர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமும், 27ம் தேதி பொள்ளாச்சி, கோவை, நீலகிரி, திருப்பூர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறும்.
பிப்ரவரி 28ம் தேதி நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி திமுக நிர்வாகிகளுடனும், 29ம் தேதி சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி திமுக நிர்வாகிகளுடனும், வரும் 30ம் தேதி தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமும் நடைபெற உள்ளது.
அதன்பிறகு வரும் 31ம் தேதி ராமநாதபுரம், கடலூர் திமுக நிர்வாகிகள் கூட்டமும், பிப்ரவரி 1ம் தேதி சிதம்பரம், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமும், பிப்ரவரி 2ம் தேதி வேலூர், அரக்கோணம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 3ம் தேதி வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஸ்ரீ பெரும்புதூர் திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடக்கிறது.
மேலும் பிப்ரவரி 4ம் தேதி திருவண்ணாமலை, ஆரணி, பெரம்பலூர், திருச்சி திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமும் , பிப்ரவரி 5ல் கரூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், புதுச்சேரி திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு?












Click it and Unblock the Notifications