விறு விறு.. நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கிய தேர்தல் ஆணையம்.. கணக்கெடுப்பு தீவிரம்
சென்னை: வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளது. வாக்குச்சாவடி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த கணக்கெடுப்பு பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாத கால கட்டத்தில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு கூட இல்லாத நிலையில், அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை துவங்க ஆரம்பித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரணியில் திரள்வது குறித்த ஆலோசனைகளும் கூட்டங்களும் எதிர்க்கட்சி தலைவர்களின் சந்திப்பும் என அரசியல்கட்சிகள் பரபரக்க தொடங்கியிருக்கிறது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையமும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்க ஆரம்பித்துள்ளது. அதாவது, நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளதாகவும், வாக்குச்சாவடி, வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்த கணக்கெடுப்பு தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தலைமை செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி கூறியதாவது:- நாடாளுமன்ற பொதுத்தேர்தல அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி இருக்கிறது. முதல் கட்டமாக மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையில் 135 % இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்படும். அதாவது ஒரு தொகுதியில் 200 வாக்குச்சாவடி உள்ளது என்றால் 270 வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்போம். இதற்கான கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. இந்த பணி ஜூலை மாதத்திற்குள் நிறைவடையும். அதன்பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்யப்படும்.

கூடுதலாக தேவைப்படும் இயந்திரங்கள், பழுதான இயந்திரங்களுக்கு மாற்று இயந்திரங்கள் வழங்குவது பற்றி தலைமை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் அடுத்தடுத்த கட்டங்களாக நடக்கும்" என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications