விஜயகாந்த் கல்யாண மண்டபத்தை இடிக்காமலேயே பாலம் கட்டியிருக்கலாம்! பழிவாங்கல்! பார்த்தசாரதி ஆதங்கம்!
சென்னை: விஜயகாந்த் கல்யாண மண்டபத்தை இடிக்காமலேயே பாலம் கட்டியிருக்கலம் என்றும் கல்யாண மண்டபத்தை இடிக்கக் கூடாது என்பதற்காக விஜயகாந்த் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அது பலனளிக்கவில்லை எனவும் தேமுதிக துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டியளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்ணாநகர் போவதற்கு யாராவது இப்படி சுற்றிப் போவார்களா எனக் கேள்வி எழுப்பிய அவர், எல்லாம் பழிவாங்கல் நடவடிக்கை தான் என ஆதங்கம் குறையாமல் பேசியிருக்கிறார். விஜயகாந்துடன் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றாக பயணித்து வருபவர்களில் பார்த்தசாரதியும் ஒருவர்.

கடந்த 2011-2016 அதிமுக ஆட்சிக்காலத்தில் பார்த்தசாரதியை அதிமுக பக்கம் இழுப்பதற்கு எவ்வளவோ முயற்சிகள் நடந்தும் அவர் விஜயகாந்தை விட்டு விலகமாட்டேன் என கடைசி வரை பின் தொடர்ந்தவர். ஏனெனில் பார்த்தசாரதியின் இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைத்தவர் விஜயகாந்த். 1ஆம் வகுப்பு தொடங்கி 12ஆம் வகுப்பு வரை பார்த்தசாரதியின் பிள்ளைகளுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்தியவர் விஜயகாந்த். இந்த நன்றிக்கடனை தானும் தனது குடும்பத்தினரும் எந்தக் காலத்திலும் மறக்க மாட்டோம் என அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மாநகரத்தில் திமுக, அதிமுகவுக்கு கூட விஜயகாந்த் கல்யாண மண்டபத்தை போன்ற பெரிய அரங்கங்கள் எதுவும் இல்லை என்றும் அந்தளவுக்கு விஜயகாந்தின் கல்யாண மண்டபம் சிட்டியிலேயே பெரிய மண்டபம் என்ற பெயருடன் திகழ்ந்தது எனவும் கூறியுள்ளார். கல்யாண மண்டபத்தை இடித்துவிட்டு அதையொட்டி அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் ஒரு மணி நேரத்துக்கு ஐந்தாறு வாகனங்கள் தான் செல்கிறது என்றும் இதற்கு எதற்கு மண்டபத்தை இடித்திருக்க வேண்டும் எனவும் ஆதங்கம் குறையாமலேயே பேசியிருக்கிறார்.
விஜயகாந்த் கல்யாண மண்டபம் இடிக்கப்பட்ட போது மத்தியில் தேசிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக இருந்தவர் டி.ஆர்.பாலு என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் மறைந்து இன்றுடன் 8 நாட்கள் ஆகும் நிலையில், இன்னும் அவர் மறைந்த தாக்கம் மக்கள் மனங்களில் இருந்து நீங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
-
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications