விஜய் அரசியல் பற்றிய பேச்சு... "எந்த அஜெண்டாவும் எனக்கு இல்லை”.. பார்த்திபன் விளக்கம்!
சென்னை: தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், தனது ஸ்டைலில் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் பார்த்திபன். "யாரையும் தாக்கியோ தூக்கியோ பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை. அப்படி செய்வதானால் நெஞ்சை நிமிர்த்தியபடி நேரடியாகவே அரசியலுக்கு வந்து விடுவேன்." என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கி உள்ளார். திமுக மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி தொடர்ந்து விஜய் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருவதும், அதற்கு திமுகவினர் பதில் கொடுப்பதுமாக அரசியல் வட்டாரம் பரபரத்து வருகிறது.

இந்நிலையில் தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசினார். "விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஜெயம் உங்கள் கையில் தான் இருக்கு" என பார்த்திபன் கூற, அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் விஜய் கட்சி பெயரை கத்தி அரங்கத்தை அதிர வைத்தனர். பார்த்திபனின் பேச்சு இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், தனது பேச்சு குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் பார்த்திபன். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் பார்த்திபன். பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில், "சாதனை புரிவதை விட, சாதாரண வார்த்தைகளை புரிய வைப்பது சிரமமாக உள்ளது. 'மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டிக்கு விஜயம் புரிகிறார்' என்றால் வருகை புரிகிறார் என்று பொருள். அந்த யூனிவர்சிட்டிக்கு யார் வேண்டுமானாலும் புரியலாம் வருகை ஆனால் பெரியார் படத்தை திறப்பதே உவகை!
அரசியலுக்குள் யார் வேண்டுமானாலும் புரியலாம் வருகை (விஜயம்) ஆனால் வெற்றி (ஜெயம்) பெறுவது என்பது மக்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது.
இதைவிட நடுநிலையான,பொதுவான, actually மொக்கையான கருத்து வேறிருக்க முடியாது என்பதனை வேரறுத்து என்னால் சொல்ல முடியும்.
யாரையும் தாக்கியோ தூக்கியோ பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை. அப்படி செய்வதானால் நெஞ்சை நிமிர்த்தியபடி நேரடியாகவே அரசியலுக்கு வந்து விடுவேன். எனக்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக திமுக எனக்கு நெருக்கம் காரணம் கலைஞர் அவர்கள். அவர்கள் காலத்தில் தான் நான் ஒரு கலைஞனாக கௌரவிக்கப்பட்டேன்.
நண்பர் ஒருவர் "என்னங்க தொடர்ந்து அவரையே சப்போர்ட் பண்றீங்க போல" என்றார். "ஏனப்படி கேட்கிறீர்கள்?" என்றேன். "விஜயம் என்றால் வெற்றி தானே?" என்றார். கடுப்பாகி "போய் டிக்ஷனரியை பாருங்கள்"என்றேன். தமிழுக்கே தமிழ் subtitle தேவைபடுகிறது. வீரனுக்கு அழகு போட்டியில் வெல்வது. ஒத்தையா ஓடி ஒன்னாம் பரிசு வாங்குவதல்ல. மல்யுத்த போட்டியில் கூட இரு போட்டியாளர்களையும் மக்கள் வரவேற்பார்கள்.
வெற்றி திறமையில் உள்ளது. இப்போதைக்கு நான் இட்லி பானை சின்னத்தில் நிற்கும் நண்பர் தனுஷ் அவர்களுக்கு பெருகும் ஆதரவில் பங்கு பெற்று மகிழ்கிறேன்.விரைவில் என் படம் துவங்க ஆயத்தமாகிறேன். வேறு எந்த agenda-வும் urgent-ஆ இல்லை என்வசம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
Election Exclusive: பரபர பனையூர்..சைலண்டாய் லிஸ்டை ரெடி செய்த விஜய்! பாதித் தொகுதி வேட்பாளர்கள் ரெடி? யார் யருக்கு சீட்? -
வேலூரில் பெண் போஸ்ட் மாஸ்டருக்கு ஆபாச செய்கை காட்டிய தவெக புள்ளி.. இந்த நபரா? அதிர்ச்சி பின்னணி என்ன -
விஜய் பிரண்ட் சஞ்சீவ்வை சுற்றும் பிரச்சனை.. உண்மை தெரியாமல் பேசாதீங்க! ஓபனாக உடைத்து பேசிய ப்ரீத்தி சஞ்சீவ் -
தனி விமானத்தில் மும்பை புறப்பட்டார் விஜய்.. தேர்தல் பணிகளுக்கு இடையே திடீர் பயணம் -
நக்கீரன் கோபால் அப்பவே சொன்னாரே.. கரூரில் நடந்தது உண்மையில் என்ன? ட்ரோன் காட்சிகள் உண்மையா? -
பெரம்பூரில் விஜய் போட்டியிட விரும்புவதன் பின்னணி? திமுகவை அசரடிக்கும் செல்வாக்கு உள்ளதா? -
கரூரில் 'ஜனநாயகன்' ஷூட்டிங்?.. சிபிஐ அடுத்த ஆக்சன் என்ன? மாரிதாஸ் வைத்த பாயிண்ட்.. கவனிச்சீங்களா? -
அந்த கூட்டணி, இந்த கூட்டணிலாம் கிடையாது! ஆல் ஏரியாவுலயும் நாம்தான் கில்லி! இஃப்தார் நோன்பில் விஜய்! -
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
பெரம்பூரில் விஜய்க்கு எதிராக விஐபி வேட்பாளர்.. திமுக பெரிய பிளான்.. லிஸ்டிலேயே இல்லையே! -
கோலாட்டம் ஆடிய மாணவியின் வாயில் ’விசில்’.. அத்தனை பேர் முன்னிலையில் தேர்தல் அதிகாரி செய்த செயல்! -
விஜய் குடுமி சங்கீதா கையில்.. தேர்தலிலேயே நிற்க முடியாது? எலக்சன் நேரத்தில் எதிர்பாரா ட்விஸ்ட்! பரபர












Click it and Unblock the Notifications