“சிறுத்தைகள் இல்லை பெருத்தைகள்.." திருமா முன்னிலையில் நடிகர் பார்த்திபன் சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமாவளவனின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பல்வேறு கருத்துகளை குறிப்பிட்டார். நத்தைகள் மட்டுமே ஊர்ந்து கொண்டு போகும் என்ற அவர், சிறுத்தைகள் சீறி பாயவே செய்யும் என தெரிவித்தார். மேலும், பல கோடி பேர் இருப்பதால் இந்த இயக்கத்தை சிறுத்தைகள் என குறிப்பிடக் கூடாது பெருத்தைகள் என்றே குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

விசிக சார்பில் சென்னையில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் விழா நடைபெற்றது. அதில் விசிக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் கலந்து கொண்டார்.

Parthiban Thirumavalavan VCK

பார்த்திபன்

அங்கு பேசிய பார்த்திபன், "மேடையில் உள்ள தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய இரண்டாவது வணக்கம். அப்படியென்றால் முதல் வணக்கம் யாருக்குன்னு உங்களுக்கு தோன்றலாம். சிறுத்தைகளுக்கு தான் எனது முதல் வணக்கம். சிறுத்தைகள் சீறவே செய்யும். ஆனால் அவர்களுக்கு சிறப்பை ஏற்படுத்தியவர் திருமாவளவன்.

பெருத்தைகள்

முதல்லசிறு சிறு கூட்டமாக இருக்கும்போது நம்ம சிறுத்தைகள்னு சொன்னோம். இப்போது அந்த சிறு கூட்டம் பெருங்கூட்டமாகி, லட்சமாக அல்லாமல் கோடி கோடியாகப் பெருகி இருக்கிறது. எனவே, இந்த பெருமை மிகுந்த கூட்டத்தை நம்ம சிறுத்தைகள்னு சொல்வதற்கு பதிலாக பெருத்தைகள்னு சொல்லலாம்னு எனக்குத் தோணுது. இன்னமும் சிறுத்தைகள் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெருமை மிகுந்த பெருத்தைகளுக்கு என்னுடைய முதல் வணக்கம்.

ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்தது வந்து இந்தியாவின் சுதந்திரத்துக்காக..! ஆனால் ஆகஸ்ட் 17 பிறந்தது பிற்படுத்தப்பட்டவர்களுடைய உணர்வுகளுக்குக் கிடைக்கக்கூடிய சுதந்திரத்திற்காக..! உளுந்தூர்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் அனைவரும் தலைவர் மீது கூட விழுந்தார்கள் என்ற விமர்சனம் வந்தது. இதனால் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. சிறுத்தைகள் அப்படித்தான் இருக்கும். நத்தைகள் மட்டும்தான் அப்படியே ஊர்ந்து கொண்டே இருக்கும். சிறுத்தைகள் கொஞ்சம் சீறிப்பாயும். அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு இருப்பார்கள். அவர்களை அடக்குவது கஷ்டமான விஷயம். அவங்களை தாயன்போடு தான் திருமாவளவன் பார்த்தார்!

பவர் கிளாஸ்

நம்ம சன் கிளாஸ் போட்டோல் ஸ்டைலாக இருக்கும்.. ஆனால் பவர் கிளாஸ் போட்டால் தான் நாம் பேச வருவதை சிறப்பாக வெளிப்படுத்த முடியும். அதாவது கொஞ்சம் பவர் இருந்தால் தான் நம்மளுடைய செயல்களும், பேச்சுகளும் சபை ஏறும். அப்படி முதல்முறையாக தமிழக சட்டசபையில் பவருக்கு வந்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

நான் ஒரு மலையாள படத்துக்காக நேற்றிரவே ஜார்ஜியா போக வேண்டி இருந்தது. ஆனால், அமைச்சர் வன்னியரசு அன்பு கட்டளைக்கு உட்பட்டு, அதை தள்ளி போட்டு இருக்கிறேன். இது எனக்கு தான் ரொம்ப பெருமை. யாராக இருந்தாலும் அமைச்சர் ஆயிட்டாவே கொஞ்சம் பந்தா வந்துவிடும். ஆனால், அமைச்சரான பிறகும் அமைதியாக இருப்பவர் வன்னியரசு. என்னுடைய தலைவர் சொன்னார் உட்கார் என்றால் நான் அமைச்சராக இருப்பேன்.. வேண்டாம் எந்திரின்னா நான் பதவியை ராஜினாமா செய்துவிட்டு களத்திற்கு போய்விடுவேன்.. எனக்கு வந்து இந்த பதவி முக்கியம் கிடையாது. இது எனக்கு 2ம் பட்சம் தான் என்றவர் வன்னியரசு.

திருமாவுக்கு பாராட்டு

ஒடுக்கப்பட்ட மக்களை சிந்திக்க வைப்பதே அவர்களுக்கு கிடைக்கும் முதல் சுதந்திரம். நான் முன்பே சொல்லி இருக்கிறேன்.. சிறுத்தைகளும் புலிகளும் எழுத படிக்க கற்று கொண்டு, தன்னுடைய சரித்திரத்தைத் தானே எழுதும் காலம் வரும் வரை, இங்கே வேட்டைக்காரர்களுடைய புகழ் மட்டும்தான் பேசப்படும். நமக்கு எழுத்து அறிவு ரொம்ப அவசியமான ஒரு விஷயம். அப்படி விடுதலை சிறுத்தைகளுக்கு ஒரு புத்தகமாக விளங்குபவர் தொல் திருமாவளவன்!" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+