Parthiban: கோபப்பட்ட திரிஷா.. இதில் வருந்துவதை தவிர வேறு வழியில்லை.. உடனே ரியாக்ட் செய்த பார்த்திபன்
சென்னை: நடிகர் பார்த்திபன் திரிஷா குறித்து கருத்து கூறியிருந்தது சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் திரிஷா மறைமுகமாக கண்டனம் தெரிவித்து ட்வீட் பதிவிட்டிருந்தார். திரிஷா கண்டனம் தெரிவித்த உடனே நடிகர் பார்த்திபன் பதில் தெரிவித்துள்ளார். அதில் அவர் இதில் வருந்துவதை தவிர வேறு வழியில்லை என்று கூறி ஆடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் குறித்து கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல சர்ச்சைகள் பேசப்படுகின்றன. அவரது குடும்ப வாழ்க்கை விவகாரம், அரசியல் நடவடிக்கைகள், திரிஷா உடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது, விவாகரத்து தொடர்பாக வொர்த்தே இல்லை என கூறியது என அவரை சார்ந்த விஷயங்கள் இணையத்தில் பெரிய விவாதமாக மாறி இருக்கின்றன.

பார்த்திபனுக்கு கண்டனம் தெரிவித்த திரிஷா
இந்த நிலையில் தான், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் நிகழ்ச்சியில் பேசியபோது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷாவைப் பற்றி கேட்கப்பட்டது. இதற்கு பார்த்திபன் "குந்தவை இப்போ வீட்டுக்குள்ளே குந்தவைக்கப்பட்டால் நல்லது. எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேச முடியாது.
எல்லா கவிதைகளையும் ரசிக்க முடியும். சில கவிதைகளை வெளிப்படையாக வாசிக்க முடியாது" என்று கூறினார். இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. தற்போதைய வதந்திகளுக்கு மறைமுக பதிலாக இருக்கலாம் என்று சிலர் கருதினர். இந்த நிலையில் தான் இதற்கு மறைமுகமாக கண்டனம் தெரிவித்து திரிஷா பதிவிட்டு இருந்தார்.
உடனே பார்த்திபன் போட்ட ட்வீட்
அவரது கருத்து முட்டாள்தனமானது.. அறிவற்ற கருத்து, பேசுபவரின் நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகிறது .. மைக் இருப்பதால் ஒரு கருத்து அறிவு சார்ந்ததாகவோ, நகைச்சுவையாகவோ மாறிவிடாது" என்று விமர்சித்து திரிஷா பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் தான் நடிகர் பார்த்திபன் தனது கருத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பார்த்திபன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த ட்விட் பதிவில் பார்த்திபன்,
"எது நடந்ததோ
அது தவறாகவே
நடந்துள்ளது இதில்.
வருந்துவதைத் தவிர
வேறு வழியில்லை !" என்று பதிவிட்டு இருந்தார். மேலும் ஆடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கிறேன்
சில நேரங்களில் சில தவறுகள் நோக்கமின்றி நடந்துவிடுகின்றன.. கலாட்டா விருது விழாவில் கேட்கப்பட்ட 20 கேள்விகளுக்கும் சற்றும் யோசிக்காமல் டான் டான் என பதில் சொல்லிக்கொண்டு இருக்கையில், திரிஷா அவர்கள் திரையில் வந்ததும் என்ன சொல்வது என யோசிக்கும் போது குந்தவை, குந்தவை என கோஷம் வந்தது.
வார்த்தை ஜாலமாக மட்டுமே குந்தவை வீட்டிலே குந்த வைக்கவும்.. பிரச்சினை வராமல் இருக்க.. என கூற அரங்கமே கை தட்டியது.. பெரும்பாலும் விஜய் ரசிகர்கள்.. இறங்கி வந்த பிறகு ரங்கராஜ் பாண்டே குந்தவையை தவிர்த்து இருக்கலாம் என்றார். உடனே அதை போடவேண்டாம் என கூறினேன். ஆனால் யாரோ எடுத்த வீயோ மூலம் அது சமூக வலைத்தளத்தில் வெளியாகி சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதை உணர்ந்து நான் என் வருத்தத்தை மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன். பிரச்சினைகள் பெரிதாவதை நான் எப்போதும் விரும்புவதில்லை. என்று கூறியுள்ளார்.
-
மாஸ்டர் மகேந்திரன் திடீரென்று மன்னிப்பு கேட்ட காரணம் இதுதானா? பின்னணியில் விழுந்த "டோஸ்”! -
ஒரு மாதத்தில் சிதைந்த விஜய்யின் 'ஒற்றை அதிகார மையம்' உறுதி? ஐஏஎஸ் அதிகாரிகளே புதிய பவர் சென்டர்? -
திமுகவில் ரூ.25 லட்சம் வரை லஞ்சம்.. விஜய் ஒரு பைசா வாங்கவில்லை! பூரித்த தனியார் பள்ளி கூட்டமைப்பு -
விஜய் உடன் அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு.. கூட யாருன்னு பாருங்க..! -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
தமிழ்நாட்டின் வருவாயில் 64.4% இந்த 3 விஷயத்திற்கு மட்டுமே செலவாகிறது.. அப்படி என்ன அது? -
போக்குவரத்து துறைக்குள் ஒளிந்திருக்கும் பூதம்.. வெள்ளை அறிக்கையில் வெளிவந்த உண்மை! -
தமிழ்நாடுக்கு எச்சரிக்கை மணி! கடனை விட மோசமானது இது.. ஒவ்வொரு வருடமும் ரூ.78,324 கோடி! -
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்! -
அரசுப் பேருந்து 1 km ஓடினால் ரூ.53 நட்டம்.. தனியார்மயமாகிறதா போக்குவரத்து துறை? மரிய வில்சன் சிக்னல் -
திமுக ஆட்சியில் தேவையில்லாத திட்டங்கள் எதுவுமில்லை.. அமைச்சர் மரிய வில்சன் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications