பருத்திவீரனில் வரும் "ஊரோரம் புளியமரம்" பாடலை பாடிய கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்!
சென்னை: அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த பருத்திவீரன் படத்தில் "ஊரோரம் புளியமரம்" பாடல் பாடிய கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார். 75 வயதாகும் லட்சுமி அம்மாள், ஏராளமான கிராமிய பாடல்களை பாடி புகழ்பெற்றவர். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தென் மாவட்டங்களில் அதிக புகழுடன் கிராமிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடல்களை பாடி வந்தார். இவரின் மறைவு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்று அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான பருத்திவீரன் திரைப்படம். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி சினிமாக்களிலும் பருத்திவீரன் படத்தின் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருந்தது. அந்த அளவிற்கு ஒரு டிரெண்ட் செட்டிங் படமாக பருத்திவீரன் அமைந்தது.

பருத்திவீரன் படத்தில் இடம்பெற்ற "ஊரோரம் புளியமரம்" படம் மிகவும் பிரசித்தி பெற்றது. தென் மாவட்டங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் எந்தவொரு திருவிழாவும் இந்த பாடல் இல்லாமல் அரங்கேறியதே இல்லை. அந்த அளவிற்கு கிராமங்கள் கொண்டாடப்பட்டது. இந்தப் பாடலை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் பாடி இருந்தார்.
கிராமிய பாடகரான லட்சுமி அம்மாள் இந்தப் படத்திற்கு பின் தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலம் அடைந்தார். திருவிழாக்களிலும், கச்சேரிகளும் லட்சுமி அம்மாள் அதிகளவில் பாடல்களை பாடி வந்தார். ஆனால் பருத்திவீரன் படத்திற்கு பின் பெரியளவில் சினிமா பக்கம் வரவில்லை. இந்த நிலையில் 75 வயதான லட்சுமி அம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் மறைவால் அவரின் ரசிகர்கள், கிராமிய கலைஞர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications