வீக்கெண்ட்ல டிக்கெட் ரேட் எகிறுது.. இந்த திட்டத்தை விடாம தொடரணும்.. அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை!
சென்னை: தமிழ்நாட்டில் இந்த வாரஇறுதி நாட்களில் பயணிகளின் வசதிக்காக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வீக்கெண்ட் நாட்களில் எப்போதுமே அதிகளவிலான பயணிகள் வெளியூர்களுக்குச் செல்வதால் போதிய பேருந்துகள் இல்லாத நிலையில், தனியார் பேருந்துகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. எனவே, வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்து சேவையை அரசு இனி எல்லா வாரமும் தொடர வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இன்றும் நாளையும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் இருந்து 300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வீக்கெண்டில் நிரம்பி வழியும் கூட்டம்: சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் வார இறுதி வந்துவிட்டாலே பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வாடிக்கை. சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் விடுமுறையை கழிக்க சொந்த ஊர் அல்லது வெளியூர்களுக்கு அதிகமானோர் பயணம் செய்வதால், பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும்.
சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் இரவு நேரத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். அரசுப் பேருந்துகளில் டிக்கெட் நிரம்பிவிடுவதால், தனியார் பேருந்துகள் கட்டணத்தை மிக அதிகமாக உயர்த்தி விடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. வழக்கமான கட்டணத்தை விட இரு மடங்கு, மும்மடங்கு கட்டணம் வசூலிப்பது வீக்கெண்ட் நாட்களில் வாடிக்கையாக இருந்து வருகிறது.
சிறப்பு ஏற்பாடு: இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் புதிய ஏற்பாட்டை செய்துள்ளது. இந்த வார இறுதி நாட்களில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கூடுதலாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இவை வழக்கமான வழித்தடங்களில் கூடுதல் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு 300 பேருந்துகள் இயக்கப்படும். மேலும், மதுரை, கோவை, சேலம், திருச்சி, பெங்களூர் ஆகிய நகரங்களில் இருந்து சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு 300 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர வேண்டும்: வார இறுதிகளில் கூடுதல் பேருந்துகளை இயக்கும் இந்த ஏற்பாட்டை இந்த வாரம் மட்டுமின்றி, எல்லா வார இறுதி நாட்களிலும் செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். வார இறுதி நாட்களில் விடப்படும் அரசு கூடுதல் பேருந்துகளுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்துகளை இயக்குவதன் மூலம், தனியார் ஆம்னி பஸ் நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை தடுக்கலாம். வழக்கமான வார நாட்களில் சென்னை - மதுரை பேருந்து கட்டணம் ரூ.600 என்றால், வார இறுதிகளில் சராசரியாக ரூ.1000ஐ எட்டி விடுகிறது. அரசின் வீக்கெண்ட் சிறப்பு ஏற்பாட்டால் இந்தச் சிக்கல் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications