ஒரு ஹார்ன் அடிச்சது குத்தமாயா? ஸ்ரீபெரும்புதூர் சுங்கசாவடியில் வாக்குவாதம்.. டிராபிக் ஜாம்!
ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்க சாவடியில் அரசு பேருந்து ஓட்டுனருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால், 30 நிமிடத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெருமந்தூர் என்ற பகுதியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. 6 வழி கொண்ட சுங்கச்சாவடியில் இன்று மதியம் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு வரிசையில் அரசு பேருந்திற்கு முன் லாரி ஓட்டுநர்கள் வரிசையாக நின்று கட்டணம் செலுத்தி கொண்டிருந்தனர்.

இதனையடுத்து, அரசு பேருந்து ஓட்டுனர் ஒலிப்பான் மூலம் ஒலி எழுப்பி கொண்டிருந்தார். இதனால், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், ஓட்டுனருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது.
அப்போது, அவ்வழியாக வந்த அனைத்து அரசு பேருந்துகளின் ஓட்டுனர்களும் வாகனத்தை ஆங்காங்கே நிறுத்தி விட்டு, சுங்கச்சாவடியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த, காவல்துறையினர், விசாரணை நடத்தி இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். பின்னர், 30 நிமிடங்களுக்கு பிறகு போக்குவரத்து சரிசெய்யபட்டது. இதனால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications