சென்னையில் இருந்து டெல்லி கிளம்ப இருந்த விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு.. பயணிகள் தவிப்பு!
சென்னை: சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால், புறப்பட தாமதமாகியுள்ளது. 164 பயணிகள் 2 மணி நேரத்திற்கு மேலாக சென்னை விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து டெல்லிக்கு இன்று காலையில் புறப்பட இருந்தது ஏர் இந்தியா விமானம். 164 பயணிகள் இந்த விமானத்தில் பயணிக்க இருந்தனர். இந்நிலையில், திடீரென இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் புறப்படத் தாமதமாகியுள்ளது.

இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக 164 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். விமானம் தாமதம் குறித்து விமான நிறுவனம் உரிய காரணத்தைக் கூறாததால், பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஏற்படும் அசௌகரியத்தை குறைக்க எங்கள் குழு முயற்சி செய்து வருகிறது. இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்ட பின்பு விமானம் புறப்படும், என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் டெல்லியில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற்றபோது தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்கள் குழுவினர் சென்னையிலிருந்து டெல்லி செல்ல இருந்த நிலையில், ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக மாற்று விமானத்தில் சென்றது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications