Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை-மைசூரூ வந்தே பாரத் ரயில்.. அதிக கட்டணம் - குறைந்த வேகம்.. அப்செட்டில் பயணிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை- மைசூரு இடையேயான வந்தே பாரத் ரயில் குறைவான வேகத்தில் இயக்கப்படுவது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. சதாப்தி விரைவு ரயிலுடன் ஒப்பிடுகையில் வந்தே பாரத் ரயில் வெறும் 20 நிமிடம் மட்டுமே விரைவாக செல்கிறது.

இந்தியாவின் அதி நவீன சொகுசு வசதிகள் கொண்ட ரயிலாக வந்தே பாரத் ரயில் அறியப்படுகிறது.

நாடு முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

 வந்தே பாரத் ரயில்கள்

வந்தே பாரத் ரயில்கள்

முதலாவதாக டெல்லி - வாரணாசி இடையே 'வந்தே பாரத்' ரயில் இயக்கப்பட்டது. அதன்பிறகு டெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையே 2வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. இதையடுத்து குஜராத் மாநிலம் காந்திநகர்-மும்பை இடையே 3வது வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. 4-வதாக இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது.

சென்னை- மைசூரு இடையே

சென்னை- மைசூரு இடையே

இதையடுத்து சென்னை- மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டதுபிரதமர் மோடி கடந்த 12-ஆம் தேதி பெங்களூருவில் வைத்து இந்த வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை அதிவேக ரயில் என்று அறியப்படுகிறது. சென்னை - மைசூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தென் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் என்பதால் முதல் நாளில் கூட பயணிகள் கூட்டம் கூட்டமாக சென்று ரயிலில் செல்பி எடுத்துக்கொண்டனர்.

75 கி.மீட்டர் வேகத்தில் மட்டுமே

75 கி.மீட்டர் வேகத்தில் மட்டுமே

சில ரயில் பயணிகளும் ரயிலின் வசதியை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் பயணம் செய்து பார்த்தனர். சில யூடியூபர்கள் கூட வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்து அதன் சிறப்பம்சங்களை பகிர்ந்து இருந்தனர். அந்த அளவுக்கு பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த ரயில் மெதுவான வேகத்தில் இயக்கப்படுவது பயணிகள் மத்தியில் அதிருப்தியை அளித்துள்ளது. இந்த ரயில் மணிக்கு 150 கி.மீட்டர் வேகத்தை எளிதாக கடக்கும் திறன் கொண்டதாக உள்ளது. ஆனால், சென்னை- மைசூரு வழித்தடத்தில் 75 கி.மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்படுகிறது.

பயணிகள் அதிருப்தி

பயணிகள் அதிருப்தி

வந்தே பரத் ரயிலின் சிறப்பம்சமே அதன் வேகமும் சொகுசு வசதிகளும்தான். சொகுசு வசதிகளுக்கு எந்தக் குறையும் இல்லை என்றாலும் ரயில் வேகம் குறைவாக இயக்கப்படுவது பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதுவும் இவ்வளவு கட்டணம் வசூலித்தும் ரயில் அதிவேகத்தில் இயக்கப்படாதது பயணிகள் மத்தியில் அதிருப்தி எழ காரணமாக சொல்லப்படுகிறது. வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு, பெங்களூரு நகரை காலை 10.25 மணிக்கு சென்றடையும்.

வேகத்தை அதிகரிக்க முடியாமல்

வேகத்தை அதிகரிக்க முடியாமல்

பிற்பகல் 12.30 மணிக்கு மைசூரை சென்றடையும். மைசூருவிலிருந்து பிற்பகல் 1.05 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் பெங்களூருவிற்கு பிற்பகல் 2.55 மணிக்கும், சென்னைக்கு இரவு 7.35 மணிக்கும் வந்தடையும். சென்னை-மைசூரு இடையே உள்ள 504 கி.மீட்டர் தொலைவை, 6 மணி நேரம் 40 நிமிடத்தில் வந்தே பாரத் ரயில் கடக்கிறது. மணிக்கு 75 கி.மீட்டர் வேகத்தில் செல்கிறது. மணிக்கு 180 கி.மீட்டர் வேகம் வரை வந்தே பாரத் ரயிலை இயக்க முடியும் என்றாலும் சென்னை- மைசூரு வழித்தடத்தில் அதிகமாக உள்ள லெவல் கிராசிங்குகள் தடுப்புச்சுவர்கள் இல்லாமல் இருப்பது, அதிக நகரப்பகுதிகள் போன்ற காரணத்தால் ரயிலின் வேகத்தை அதிகரிக்க முடியாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ரயிலின் வேகம் அதிகரிக்கப்படுமா?

ரயிலின் வேகம் அதிகரிக்கப்படுமா?

இதையடுத்து தண்டவாள சீரமைப்பு பணிகளும் ஒருபக்கம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை வரை ரயிலை 130 கி.மீட்டர் வேகத்தில் இயக்கி தெற்கு ரயில்வே சோதனை ஓட்டம் நடத்தியிருக்கிறது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இருந்ததாக தெற்கு ரயில்வே ட்விட்டர் பக்கத்திலும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் இந்தப்பணிகள் முடிந்த பிறகாவது ரயிலின் வேகம் அதிகரிக்கப்படுமா? என்பது பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது. சதாப்தி விரைவு ரயிலுடன் ஒப்பிடுகையில் வந்தே பாரத் ரயில் வெறும் 20 நிமிடம் மட்டுமே விரைவாக செல்கிறது.

கட்டணம் எவ்வளவு?

கட்டணம் எவ்வளவு?


சென்னையில் இருந்து மைசுரூ செல்ல சேர் கார் டிக்கெட் விலை ரூ.1,200ம் எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் ரூ.2,.200ம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து காட்பாடி செல்ல சேர் கார் வகுப்பில் ரூ.495ம் எக்ஸியூட்டிவ் வகுப்பில் ரூ.950 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல சேர் கார் வகுப்பில் ரூ.995ம், எக்ஸ்கியூட்டிவ் வகுப்பில் ரூ.1885-ம் வசூலிக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+