இனி ஈசியா லோயர் பெர்த் கிடைக்கும்.. நாமலே சீட்டை செலக்ட் பண்ணிக்கலாம்! ரயில்களில் வரும் சூப்பர் வசதி
சென்னை: பயணிகளின் நீண்ட நாள் ஆசையான, நமது சீட்டை நாமே புக் செய்யும் புதிய வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளதாம். பஸ்களில் எப்படி காலியாக இருக்கும் இருக்கைகள் நமக்கு காட்டுகிறதோ? அதேப்போலவே ரயில்களிலும் இனி காட்டும் என்று எந்த சீட் வேண்டுமோ அதனை நாமே செலக்ட் செய்து புக் செய்துகொள்ளலாம்.
இந்தியாவில் பயணிகளின் பயண தேவையை பூர்த்தி செய்வதில் ரயில்களுக்கு பெரும் பங்கு உண்டு. சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் கூட தொலை தூரங்களுக்கு செல்வது என்றால் ரயிலில் செல்லத்தான் விரும்புவாரக்ள். ரயிலில் டிக்கெட் இல்லை என்றால் மட்டுமே கார்களிலோ பஸ்சிலோ பயணிப்பதை பற்றி நினைப்பார்கள்.

மலிவான கட்டணம்.. பாதுகாப்பான மற்றும் சொகுசான பயணம் என்பதால் பயணிகள் பலரும் ரயில்களையே அதிகம் விரும்புகிறார்கள். அதிலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் பயணிக்க ரயில்தான் சிறந்த தேர்வாக இருக்கும். எனவே ரயில்களில் டிக்கெட் கிடைப்பது என்பது பெரும் சவாலான ஒன்றாகவே பயணிகளுக்கு உள்ளது.
ரயில் பயணம்: அதிலும் சென்னையில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, நெல்லை போன்ற நகரங்களுக்கு செல்ல ரயிலில் டிக்கெட் கிடைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். வார விடுமுறை, பண்டிகை நாட்களை பற்றி சொல்லவே தேவையில்லை... 4 மாதங்களுக்கு முன்பே புக் செய்யும் வசதி இருப்பதால் டிக்கெட் புக்கிங் ஓபன் ஆனவுடன் புக் செய்து விடுவார்கள்.
பயணிகளின் நீண்ட நாள் ஆசை: இதனால் பண்டிகை நாட்களில் டிக்கெட் அவ்வளவு எளிதாக கிடைக்காது. தட்கல் டிக்கெட் புக் செய்தாலும் இதுதான் நிலைமை.. அப்படியே டிக்கெட் கிடைத்தாலும் கூட நமக்கு லோயர் பெர்த் கிடைக்குமா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.. முதியவர்கள், பெண்கள் என பலரும் லோயர் பெர்த்தையே எதிர்பார்ப்பார்கள்.. டிக்கெட் புக் செய்யும் போது தேவைப்படும் பெர்த் முன்னுரிமை கோரலாம் என்றாலும் நாம் கேட்டது லோயர் பெர்த் அவ்வளவு எளிதாக கிடைக்காது.
இதனால், பஸ்களில் இருப்பது போல காலியாக இருக்கும் படுக்கை, சீட்களை நாமே தேர்வு செய்யும் படியான ஆப்ஷன்களை ரயில்வே கொண்டு வந்தால்தான் என்ன? என ரயில் பயணிகள் பலரும் முனு முனுப்பதை பார்க்கமுடியும். இந்த நிலையில், அப்படியான ஒரு வசதியைதான் ரயில்வே விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாம்.
செயலி வாயிலாக புக் செய்யலாம்: இதன்படி, ரயில்களில் எந்தெந்த படுக்கைகள் காலியாக உள்ளது என்பதை டிக்கெட் புக் செய்யும் போதே பார்க்கலாம்.. பிறகு நமக்கு லோயர் பெர்த் வேண்டுமா அல்லது அப்பர் பெர்த் வேண்டுமா ? என செலக்ட் செய்து புக் பண்ணிவிட முடியும். அதாவது செயலி வாயிலாக புக் செய்யும் போதே காலியாக உள்ள படுக்கைகள் நமக்கு திரையில் காட்டப்படும்.
செயலி ரெடியாகி கொண்டு இருக்கிறது: நமக்கு தேவையான ஸ்லீப்பர் சீட்களை அதைப் பார்த்து புக் செய்துகொள்ளலாம். இந்த வசதியை அமலுக்கு கொண்டு வருவதற்கு தேவையான டெக்னிக்கல் விஷயங்களை ரயில்வே தற்போது மேற்கொண்டு வருகிறதாம்.
ரயில்வே டிக்கெட் புக்கிங் முதல் ரயில் எங்கு வருகிறது என்ற விவரங்கள் என ரயில்வே சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஒரே பிளாட்பார்மில் கொண்டு வர ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சூப்பர் ஆப் என்ற செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சூப்பர் அப்பில் மேற்கூறிய வசதிகள் எல்லாம் வந்துவிடக்கூடும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல்












Click it and Unblock the Notifications