பசும்பொன் பாண்டியனுக்கு குக்கரா.. எங்கேயோ இடிக்குது.. எங்கன்னு தெரியலை.. என்னன்னும் புரியலை!
சுயேச்சை வேட்பாளர் பசும்பொன் பாண்டியனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: அமமுக தரப்பு மட்டுமில்லை.. தமிழக வாக்காள பெருமக்களே ஒன்றும் புரியாமல் விழிக்கிறார்கள்.. புதிதாக கட்சி ஆரம்பித்தவருக்கு புகழ்வாய்ந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி தந்துள்ளது!
ஆரம்பத்தில் நிர்மலாதேவி விவகாரம் பெரிய அளவில் வெடித்து கிளம்பியது. அப்போது நிர்மலாதேவிக்காக 2 வக்கீல்கள் ஆஜராகி இருந்தாலும், பசும்பொன் பாண்டியன் இந்த வழக்கை கையில் எடுத்த பிறகுதான் விஷயம் மேலும் சூடு பிடித்தது.
நிர்மலாதேவி ஒரு வார்த்தைகூட பேச முடியாத நிலையில், அவர் சார்பாக செய்தியாளர்களிடம் பேசிவந்தது பசும்பொன் பாண்டியன்தான்! ஒருகட்டத்தில் நிர்மலாதேவிக்கு ஜாமீனும் தரப்பட்டுவிட்டது. ஆனால் ஜாமீன் கிடைத்த கையோடு, ஒரு கட்சியை ஆரம்பித்துள்ளதாக பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறினார். அது மட்டும் இல்லை.. வரும் தேர்தலில் மதுரை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட போவதாகவும் அறிவித்தார்.

ஆர் கே நகர்
இந்த நிலையில் இன்று அவருக்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தையும் ஒதுக்கி தந்துள்ளது. ஆனால் குக்கர் சின்னத்தை தந்தது ஏன் என்றுதான் புரியவில்லை. இந்த குக்கர் சின்னத்தில்தான் தினகரன் ஆர்கே நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே சென்டிமென்ட்டுக்காக திரும்பவும் குக்கர்தான் வேண்டும் என்று அடம்பிடித்தார். அந்த சின்னத்தை பெற சுப்ரீம் கோர்ட் வரைகூட சென்று வந்துவிட்டார். எல்லா கட்சிகளுக்கும் சின்னம் கிடைத்துவிட்ட நிலையில், தினகரன் மட்டும் சின்னம் இல்லாமல் தவித்த அவலம் இன்று காலை வரை தொடர்ந்தது.

வக்கீல் பசும்பொன் பாண்டியன்
ஆனால் அமமுகவுக்கு குக்கரை கொடுக்க மறுத்த தேர்தல் ஆணையம் நிர்மலா தேவி வக்கீலுக்கு கொடுத்துள்ளது ஏன் என்று யாருக்குமே புரியவில்லை. வரிசைப்படுத்தி சொல்லக்கூடிய கட்சியில் பிரதான இடத்தில் அமமுக உள்ளது. அன்று திமுக, அதிமுகவையோ புறம்தள்ளி மேலே வந்த கட்சி.

புகழ்பெற்ற கட்சி
ஆனால் அந்த கட்சிக்கு ஒதுக்காமல், புதிதாக வந்த ஒரு கட்சி, அதுவும் சுயேச்சையாக நிற்கும் ஒரு வேட்பாளருக்கு புகழ்பெற்ற குக்கர் சின்னத்தை ஒதுக்கியது பல கேள்விகளை எழுப்பி உள்ளது. தேர்தல் ஆணையத்தை இது சம்பந்தமாக நாம் கேள்வி கேட்க முடியாதுதான். ஆனால் மதுரை பகுதியில் பட்டிதொட்டி எங்கும் பரவிவிட்ட சின்னம் குக்கர்.. இதற்கு காரணம் தினகரனின் தீவிரமான களப்பணிதான்!

சுவர்களில் குக்கர்
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடத்த ஆயத்தமான சமயத்திலேயே அதாவது கருணாநிதி மறைந்த நேரத்தில் மதுரையிலேயே தங்கி பொதுமக்களை சந்தித்து பேசிவந்தவர் தினகரன். அந்த நேரத்தில் குக்கர்கள் வீட்டுக்கு வீடு விநியோகமானதாக கூட சொல்லப்பட்டது. மேலும் தமிழகத்தின் முக்கிய வீதிகளின் சுவர்களில் குக்கர்களே பிரதான இடத்தை ஆக்கிரமித்திருந்தன. ஆக.. மக்கள் மனதில் குக்கர் என்றாலே அது தினகரன்தான் என்று பதிந்து போயிற்று.

ஓட்டுகள் பிரியாதா?
இந்த நேரத்தில்புது வேட்பாளருக்கு இந்த சின்னத்தை தந்தால், அதன் மூலம் அமமுக ஓட்டுக்கள் பிரியாதா? வாக்காளர்களுக்கு இது குழப்பத்தை ஏற்படுத்தாதா? இதன் மூலம் தினகரனுக்கு சரிவு ஏற்பட்டு விடாதா? என்ற சந்தேகம் எல்லாம் எழுந்து செல்கிறது.

எதுவுமே புரியல
எப்படியோ, ஒரு வழக்கை எடுத்து நடத்தி அதில், சம்பந்தப்பட்டவருக்கு நல்லது நடந்ததோ இல்லையோ.. அதை பயன்படுத்தி தனக்காக ஒரு கட்சியை ஆரம்பித்துவிட்டது ஆச்சரியம்தான்.. அதிலும் குக்கரை பெற்றுவிட்டது அதைவிட வியப்புதான்.. ஆனால் எங்கேயோ இடிக்குது.. எங்கன்னுதான் நமக்கு தெரியல!












Click it and Unblock the Notifications