பட்டா, சிட்டா அவசியம்.. நிலத்தின் வகையில் கிராம நத்தம், 2சி பட்டா என்றால் என்ன? ஆன்லைனில் வசதி
சென்னை: பத்திரங்களை பதிவு செய்யும்போது, சில சொற்கள் தவிர்க்க முடியாதவை.. அதில் பட்டா, சிட்டா இரண்டுமே மிக மிக முக்கியமான சொற்கள்.. ஆனால், இந்த பட்டா சிட்டா குறித்த விஷயங்களில் அதிக ஏமாற்று வேலைகளும் நடப்பதனால் இவைகளை பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது.
வீடுகள், மனைகள், நிலங்கள் வாங்குபவர்கள் அதற்கான ஆவணங்களை வழங்கி, அவைகளை பெற வேண்டும். ஆனால், அத்தகைய ஆவணங்களில் சில சொற்கள் அல்லது வாசகங்கள் இடம்பெற்றிருக்கும். அதில் பிரத்யேகமாக இடம்பெறுவது பட்டா, சிட்டா என்ற சொற்களாகும்.

ஆவணம்: பட்டா என்பது ஒருவர் தன்னுடைய சொத்து மீதான உரிமையை சட்டரீதியாக நிரூபிக்கும் ஆவணமாகும்.. அரசு தரப்பில் வழங்கப்படும் இந்த ஆவணத்தில், பட்டா எண், மாவட்டம், வட்டம், கிராமம், மற்றும் நில உரிமைதாரரின் பெயர், சர்வே எண், உட்பிரிவு, நன்செய் நிலம்/புன்செய் நிலம், நிலம் அமைந்துள்ள பகுதி, தீர்வை விவரங்கள் என அனைத்துமே முழுமையாக பதிவாகியிருக்கும்.
இந்த பட்டாவில், தனி பட்டா, கூட்டு பட்டா, தூசி பட்டா, நத்தம் பட்டா, ஏடி கண்டிசன் பட்டா, தோராய பட்டா, தூய பட்டா, நில ஒப்படைப்பு பட்டா, DKT பட்டா, ஊரகம் பட்டா என்று பல வகைகள் உள்ளன.
ஒரு தனி நபர் பெயரில் இருக்கும் பட்டாவின் பெயர் தனி பட்டா என்பார்கள்.. இதில் நிலத்தின் சர்வே எண், சர்வே உட்பிரிவு செய்யப்பட்டிருக்கும்.
கிராம நத்தம்: அதேபோல, கிராமத்தில் இருக்கும் குடியிருப்பிற்கு என ஒதுக்கப்பட்ட நிலம், நத்தம் பட்டா என்பார்கள்.. வருவாய் கிராமத்தில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வழங்கப்படுகிறது. அரசால் நத்தம் என வகைப்படுத்தப்பட்டிருக்கும் இடங்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் பட்டா இதுவாகும்
அரசின் புறம்போக்கு நிலத்தில் மரங்களை வளர்க்க வழங்கப்படும் பட்டாவின் பெயர் 2சி பட்டா என்பார்கள்.. அரசு, தனிநபர் அல்லது சமூக ரீதியான குழுக்களுக்கு இலவச பட்டா வழங்கும்பொழுது குறிப்பிட்ட கால வரையறை வைத்து பட்டாவில் நிபந்தனை விதித்து கொடுக்கப்படுவதற்கு கண்டிஷன் பட்டா அதாவது நிபந்தனை பட்டா என்பார்கள்.. அதன்படி குறிப்பிட்ட கால வரையறை முடியும் வரை உங்களின் பட்டா இடத்தை அல்லது வீட்டை விற்க முடியாது.
தற்காலிக குத்தகை: முன்னாள் ராணுவத்தினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஏழைகள் போன்றோருக்கு அரசு இலவச நிலம் ஒதுக்கீடு செய்வதற்கு நில ஒப்படைப்பு பட்டா என்பார்கள். குளம் கட்டுவதற்கும், காடு வளர்ப்பதற்கும் மக்களுக்கு வழங்கப்படும் இந்த பட்டா குத்தகைக்கு குறுகிய காலத்திற்கு வழங்கப்படுவதற்கு தற்காலிக குத்தகைக்கு பட்டா என்று பெயர்.
ஒரு இடத்தில் அதிகமான வருடங்கள் இருந்தாலும், தவிர்க்க முடியாத காரணத்தினால், அந்த இடத்தினை கட்டாயம் காலி செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் வழங்கப்படும் நோட்டிஸ் பெயரே B Memo.. இதுதான் பின்னாளில் "பீமா பட்டா" என்றே வழக்கத்தில் வந்துவிட்டது.
சிட்டா: அதேபோல, சிட்டா என்பது பட்டாவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுடன் சேர்த்துக் கூடுதல் தகவல்களைக் கொண்டிருக்கும். அதாவது, பட்டாவின் ஒரு பகுதிதான் சிட்டா என்பதாகும்.. ஒருவருடைய சொத்து எந்த பகுதியில் அமைந்துள்ளது? அதன் அளவு என்ன? அந்த நிலத்தின் உரிமையாளர், நஞ்சை நிலமா, புஞ்சை நிலமா, வறண்ட நிலமா, ஈர நிலமா, போன்ற விவரங்கள் அடங்கிய ஆவணத்தின் பெயர்தான் சிட்டா.. வருவாய்த்துறை வழங்கும் இந்த ஆவணத்தை, கிராம நிர்வாக அலுவலர் நிர்வகிப்பார்..
உங்களது நிலம் குறித்த பட்டா சிட்டா விவரங்களைத் தெரிந்து கொள்ள தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.. பட்டா சிட்டாவுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி?
இதுதான் வழிமுறை:
- https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று, View Patta & FMB/Chitta/TSLR Extract என்ற லிங்கினை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் மாவட்டம் மற்றும் கிராமப்புறமா ஊரகப்பகுதியா என்ற விவரங்களையும், தாலுக்கா, கிராமம் ,வார்டு, சர்வே எண் உள்ளிட்ட விவரங்களையும் வழங்கினால், பட்டா , சிட்டா ஆவணம் காட்டிவிடும்... அதேபோல, அது என்ன வகையான நிலம், அதன் சர்வே எண், என்பன உள்ளிட்ட விவரங்களை சரிபார்க்க முடியும்.
- வில்லங்க சான்றிதழையும் நாம் எளிதாக ஆன்லைனிலேயே பெற்று கொள்ள, https://tnreginet.gov.in/portal/ என்ற வெப்சைட்டிற்கு சென்று வில்லங்க சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். இதிலும், சர்வே எண், கிராமத்தின் பெயர் போன்றவற்றை உள்ளீடு செய்தால், சொத்து யார் பெயரில் உள்ளது? இதற்கு முந்தைய உரிமையாளர் யார்? உள்ளிட்ட விவரங்களை பெறலாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications