நொடிக்கு நொடி சரவெடி.. "எங்கிருந்தும், எந்நேரத்திலும்" பட்டா, சிட்டா நிலஆவணங்களை பெறலாம்: தமிழக அரசு
சென்னை: பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, நில அளவை மற்றும் நில ஆவணங்கள் தொடர்பான, 'ஆன்லைன்' சேவை விபரங்களை, தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது..
எங்கிருந்தும், எந்த நேரத்திலும் பட்டா, சிட்டா ஆவணங்களை பதிவிறக்கும் செய்யும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் நில அளவை மற்றும் நிலவரித்திட்டத்தின் இயக்குனர் செய்திக்குறிப்பு வெளியிட்டிருக்கிறார்.. அதில் உள்ளதாவது:
"கடந்த சில ஆண்டுகளில், பல்வகையான நில ஆவணங்கள் கணினிப்படுத்தப்பட்டு இணையவழியில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நில உரிமைதாரர்கள் பயனடையும் வகையில் கீழ்க்காகாணும் இணையவழிச்சேவைகள் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டத் துறையால் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.
1. கிராமப்புறம், நகர்ப்புறம் மற்றும் நத்தம் ஆகிய பகுதிகளுக்கான பட்டா மாற்றம் மேற்கொள்ள https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
2. நில உரிமைதாரர்கள் புல எல்லைகளை அளந்து அத்து காட்டக்கோருவதற்கு https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
3. எங்கிருந்தும் எந்நேரத்திலும் என்ற இணையவழிச் சேவையை (https://eservices.tn.gov.in) பயன்படுத்தி, கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா / சிட்டா, 'அ' பதிசிட்டா, 'அ' பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றையும், நகர்ப்புற நிலஅளவைப் பதிவேட்டின் நகல், நகர நிலஅளவை வரைபடம் மற்றும் புல எல்லை வரைபடம் / அறிக்கை ஆகியவற்றையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பட்டா மாற்றத்திற்கு அளித்த விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
4. கிராம வரைபடங்கள் மற்றும் பழைய நிலஅளவை எண்களுக்கான புதிய நிலஅளவை எண்களின் ஒப்புமை விளக்கப்பட்டியல் போன்றவற்றை https://tnlandsurvey.tn.gov.in எனும் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் 1 மற்றும் 2-ல் உள்ள சேவைகளை தங்கள் அருகிலுள்ள பொதுச்சேவை மையங்கள் மூலமாகவும் பயன்படுத்திக் கொள்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications