Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டா ஆவணமும் முக்கியம்.. கிரயம் முடிக்கும்போது இதை கவனியுங்க.. கிரையம் பத்திரத்தில் ஆவண எழுத்தர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிரைய பத்திரம் என்றால் என்ன? கிரையம் செய்ய தயாராகும்முன்பு, கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? கிரையப் பத்திரத்தில் கட்டாயம் இடம்பெற வேண்டிய அம்சங்கள் என்னென்ன? வில்லங்கம் எதிலும் சிக்காமல், கிரையம் தயார் செய்வது எப்படி? கிரைய பத்திரம் தயாரிப்பில் ஆவண எழுத்தர்களை தேர்வு செய்வது எப்படி? இவைகள் குறித்து சார் பதிவாளர்கள் அறிவுறுத்துவது என்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

குறிப்பிட்ட ஒரு நிலத்தை, ஒருவரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி, அதை உங்கள் பெயருக்கு மாற்றி கொள்ள தயார் செய்யப்படும் ஆவணம் தான் கிரைய பத்திரம் என்பார்கள்.. சம்பந்தப்பட்ட நிலம் குறித்த விவரங்களை, முத்திரை தாள்களில் விரிவாக எழுதி, சார் பதிவாளர் அலுவலகத்தில், சாட்சிகள் முன்னிலையில் ரிஜிஸ்டர் செய்து கொள்வது கிரையப்பத்திரம்.

kiraya pathiram land documentation Purchase deed

கிரையப் பத்திரம் அவசியம்

ஆனால், கிரையப்பத்திரம் எழுதுவது எளிதானது இல்லை. சில முக்கியமான அம்சங்களை கருத்தில் கொண்டு எழுதவேண்டும்.. குறிப்பாக, கிரயம் எழுதி தருபவர்களுக்கு யார் மூலம் சொத்து வந்தது? அவருக்கு முன்பு கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து கிடைத்தது? போன்ற விவரங்களை பத்திரத்தில் எழுத வேண்டும்.

நிலத்தை எழுதி கொடுப்பவரின் பெயர், இன்ஷியல் இரண்டையும் சரியாக பதிவிட வேண்டும்.. அத்துடன் அவரின் அடையாள அட்டை, பட்டா, மின் இணைப்பு, முன் பத்திரம் போன்றவைகளில் இருப்பதை போலவே, பத்திரத்திலும் எழுதப்பட்டுள்ளதா? என்பதையும் ஒப்பிட வேண்டும்..

கிரையம் எழுதும்போது முக்கியம்

நிலத்தை எழுதி தருபவர் மட்டுமல்லாமல், கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர், இன்ஷியல், முகவரி, சான்றுகளை சரியாக எழுத வேண்டும்.. ஒவ்வொன்றும், தங்களின் அடையாள அட்டையுடன் ஒத்துப்போகும்படி இருக்கிறதா? என்பதை ஒப்பிட்டு, பிழையில்லாமல் எழுத வேண்டும்.

அதேபோல இரு தரப்பிலுமே, வருவாய் மாவட்டம், பதிவு மாவட்டம் என்று தனித்தனியாக எழுதுவது நல்லது.. ஒருவேளை ஒரே மாவட்டத்தின் பெயராக இருந்தாலும் , வருவாய் மாவட்டம், பதிவு மாவட்டம் என்பதை தனித்தனியாக பிரித்து எழுதலாம்.

பட்டா எண், பட்டா படி உட்பிரிவு

முத்திரை வரியை செலுத்தியிருப்பதுடன், முத்திரைத் தாள், வரைவோலை அல்லது இ-ஸ்டாம்பிங் முறை மூலம் முத்திரை வரி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்..

பட்டா எண், பட்டா படி உட்பிரிவு புதிய சர்வே எண்ணை எழுதவேண்டும். கூட்டுப்பட்டாவில் சொத்து இருக்கும்பட்சத்தில், அதன் சர்வே நம்பரையும் நீளம், அகம் வாரியாக குறிப்பிடலாம்.. தெரு, கதவு எண், கட்டிடம், கிணறு, பொது வழி, பொதுச் சுவர், பொது தண்ணீர் உரிமை போன்றவற்றை மறக்காமல் எழுத வேண்டும்... மெட்ரிக் அளவுகோளில் எழுதியிருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் ..

முத்திரைத்தாள்கள்

பத்திரத்தின் அனைத்து பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர், எழுதி தருபவர் என 2 தரப்புகளின் கையொப்பமும் இருக்க வேண்டும். அத்துடன் 2 தரப்பு சாட்சிகளின் கையெழுத்தும் , அவர்களது முகவரியுடன் இருக்கிறதா? முத்திரைத்தாள்கள் சரியாக உள்ளதா? வங்கியிலிருந்து டிடி சரியாக எடுக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கடைசியாக, பட்டா நகல், அதன் நில வரைபடம் இணைப்பதுடன், நகல் ஆவணம் அசல் ஆவணத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். கையால் எழுதப்பட நேர்ந்தால், நிலத்தை விற்பவர், வாங்குபவரின் பெயர், கிரயத்தொகை, சொத்து விபரங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.

எழுத்தர்கள் தேர்வு கட்டாயம்

எப்போதுமே பத்திரத்தில் அதிக தகவல்களை சேர்த்தால், பதிவின்போது தேவையில்லாத கேள்விகள் எழலாம்.. இதனால் பத்திரப்பதிவு பணிகள் தாமதமாகவும் வாய்ப்புள்ளது. எனவே, பத்திரம் தயாரிப்பில் ஆவண எழுத்தர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானதாக உள்ளது.

வழக்கறிஞர் பத்திரத்தை படித்து அதில் வில்லங்கம் இருக்கிறதா என்பதை சரி பார்த்து ஆலோசனை வழங்கலாம்... ஆனால், அவரே ஆவண எழுத்தராகவும் செயல்படும்போது நடைமுறையில் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதாகவும், எனவே, ரய பத்திரம் தயாரிக்க அனுபவம் வாய்ந்த, உரிமத்துடன் செயல்படும் ஆவண எழுத்தர்களை பயன்படுத்த வேண்டும் என்றும் சார்-பதிவாளர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+