பட்டா பத்திரம் அளவு.. மனைகள் வரன்முறையில் அதிரடி! நிலம் வைத்திருப்போருக்கு பத்திரப்பதிவு குட் நியூஸ்
சென்னை: நிலம், மனை விவகாரங்களில், பொதுமக்கள் விரைந்து வசதிகளை பெறுவதற்காக வெப்சைட்களை பதிவுத்துறை உருவாக்கி வருகிறது. அந்தவகையில், சில முக்கிய வெப்சைட்கள் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், மேலும் ஒரு வெப்சைட் பயன்பாட்டுக்கு வரப்போகிறது.. அந்தவகையில், மனைகள் வரன்முறைக்கு விண்ணப்பிக்க விரைவில் புது இணையதளம் துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. இதற்கு என்ன காரணம் தெரியுமா?
பல்வேறு மோசடிகளை தடுத்து நிறுத்துவதற்காக பதிவுத்துறை பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. குறிப்பாக பத்திரப்பதிவு ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. இதனால் இடைத்தரகர்களுக்கு பணம் தருவது குறைக்கப்பட்டுள்ளது. விரைவாகவும், எளிதாகவும் பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை மக்களால் பெற முடிகிறது.

மாறுபடும் நில அளவு வேறுபாடு
ஆனாலும் நில அளவு வேறுபாடு பிரச்சனைகளால், பத்திரப்பதிவுகளில் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது. இதனால் பத்திரம் செய்யப்படாமல் திருப்பியனுப்பும் நிலைமையும் ஏற்படுகிறது... நிலத்தின் அளவு குறிப்பிடப்படும். சிலநேரங்களில் பத்திரத்திலுள்ள நில அளவில் மாறுபாடு தென்படலாம். இதனால், பட்டா, நில அளவை வரைபடத்தில் அளவுகளும் மாறுபடும்.
எனவேதான், தமிழ்நிலம்: ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவுக்கான, ஸ்டார் 2.0 என்ற சாப்ட்வேருடன், "தமிழ்நிலம்" தகவல் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் நில அளவை தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
விளக்க பட்டியல்கள்
ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்க பட்டியல்கள் விபரங்கள் போன்றவைகளை டவுன்லோடு செய்யவும், இந்த செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பட்டாவில் உள்ள நிலத்தின் அளவு பத்திரத்தில் இருந்தால் மட்டுமே, பத்திரப்பதிவுக்கான டோக்கன் பெற முடியும் என்பதால், பதிவுக்கு வரும் பத்திரங்களிலுள்ள நில அளவுகளை, ஆன்லைன் முறையில் பட்டா மற்றும் நில அளவை வரைபடத்துடன், சார் பதிவாளர்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று சார் பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம். இதனால், பத்திரப்பதிவு தடைப்படும் நிலைமையையும் தவிர்க்க முடியும்.
மனைகள் வரன்முறை
இந்நிலையில், மனைகள் வரன்முறைக்கு விண்ணப்பிக்க விரைவில் புது இணையதளம் துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. கடந்த , 2017ம் ஆண்டு, அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், http://www.tnlayoutreg.in/ என்ற வெப்சைட்டில் மட்டும்தான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது.
சமீபத்தில், அங்கீகாரமில்லாத தனிமனைகள் வரன்முறைக்கு நிர்ணயித்திருந்த காலக்கெடுவை நீக்கி, தமிழக அரசு அறிவித்திருந்ததால், விண்ணப்பங்களை பதிவு செய்ய, பொதுமக்கள் வெப்சைட்டை அணுகினர். ஆனால், அந்த வெப்சைட்டில் சில குறைபாடுகள் காரணமாக விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியவில்லையாம்.
வருகிறது புதிய வெப்சைட்
எனவே, அதற்கு மாற்றாக, புதிய வெப்சைட்டை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தங்களது மனை குறித்த விபரங்களை எளிதாகவும், விரைவாகவும் பதிவு செய்யும் வகையில், அதில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
அதேபோல, அதிகாரிகளும் மனை குறித்த விபரங்களை விரைவாக ஆய்வு செய்து, தொழில்நுட்ப அனுமதி வழங்க வசதிகள் செய்யப்பட உள்ளதாம். இந்த புதிய வெப்சைட் சில நாட்களில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications