பட்டா Vs பத்திரம் – நிலம் வாங்குபவருக்கு எது முக்கியம்? ஒரு சென்ட் வாங்குனாலும் ‘இதை’ மறக்காதீங்க.!
சென்னை: தற்போது அதிக அளவில் வீட்டுமனை பிரிவுகள் உருவாகி இருக்கும் நிலையில் ரியல் எஸ்டேட் தொழில் சூடு பிடித்திருக்கிறது. அதே நேரத்தில் நிலம் வாங்குபவர்களுக்கு பட்டா முக்கியமா? பத்திரம் முக்கியமா? என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அது குறித்த தெளிவான விளக்கத்தை தற்போது பார்க்கலாம்..
மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதிக அளவில் நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகிறது. வீடுகளை சுற்றி இருந்த விவசாய நிலங்கள் தற்போது வீடுகளாக மாறி வருகிறது. மேலும் தரிசு நிலங்கள், விவசாய பயன்பாட்டுக்கு ஒத்து வராத நிலங்கள் வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் அங்கீகாரத்தோடு வீட்டுமனைகள் விற்பனை செய்யப்படுகின்றன. பத்திரம் இருந்தால் போதும் என கூறப்பட்டாலும், ஒரு நிலத்திற்கு தேவையான அடிப்படையாக சில விஷயங்கள் உள்ளது. மேலும் ஒரு நிலத்தை வாங்கும் போது பட்டா முக்கியமா. பத்திரம் முக்கியமா என்பதும் பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது.

ஒருவரிடன் நிலம் அவரது உரிமையின் கீழ் தான் இருக்கிறது என்பதை பட்டா மற்றும் பத்திரத்தின் கீழ் உறுதி செய்யலாம். அதுமட்டுமல்லாமல் சிட்டா, அடங்கல், வரைபடம் எனவும் பல விவகாரங்கள் இருப்பது தனிக்கதை. முதலில் பட்டாவுக்கும் பத்திரத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது பத்திரப்பதிவு துறையில் வழங்கப்படும் ஆவணங்களில் மோசடி செய்து முறைகேடாக நிலங்கள் மற்றும் நபர்களுக்கு விற்கப்படுகிறது. இதனை தடுக்க ஆவணங்கள் மின்னணு மயமாக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு திருமணம் சொத்து உள்ளிட்ட பதிவு சான்றிதழ்களை திருத்த முடியாத அளவுக்கு நிரந்தர ஆவணங்களாக மாற்ற தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையும் வருவாய் துறையும் இணைந்து நம்பிக்கை இணையம் என்ற தொழில்நுட்பத்தை கொண்டு வந்திருக்கின்றன. சரி பட்டா என்றால் என்ன? பத்திரம் என்றால் என்ன என்று பார்த்து விடலாம்..
பட்டா என்பது வருவாய் துறை சார்ந்த ஆவணம். ஒரு நிலம் ஒருவரின் பெயரில் பட்டா போடப்பட்டு இருக்கிறது என்றால் வேறு ஒரு நபரின் பெயர்களும் இருக்கலாம். அதாவது வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவற்றை முறைகேடாக பெற்று பட்டா மாறுதல் செய்வதாக புகார் எழுந்து வருவதையும் நீங்கள் பார்த்திருக்கலாம். பட்டா என்பது நில உரிமை ஆவணம் என்பது தான் அடிப்படை. பட்டாவில் யார் பெயர் இருக்கிறதோ அவர்தான் அந்த நிலத்தில் தற்போதைய உரிமையாளராக கருதப்படுவார். பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், நிலத்தின் சர்வே நம்பர், அது என்ன வகையான நிலம், நிலத்தின் அளவு, உரிமையாளர் பெயர், அவர் தந்தையின் பெயர் ஆகியவை இருக்கும்.
அதே நேரத்தில் பத்திரம் என்பது ஒரு சட்டபூர்வமான ஆவணம் ஆகும். இது நிலத்தை வைத்திருக்கும் நபர் குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் அந்த சொத்துகளுக்கான உரிமைகளை அவர்களுக்கு வழங்குகிறது. நிலம் உள்ளிட்ட சொத்து உரிமையை மற்றொரு நபருக்கு மாற்றுவதற்கு பத்திரங்கள் பயன்படுகிறது. பட்டா முக்கியமா? பத்திரம் முக்கியமா? என்ற கேள்வி மக்களிடம் இருக்கும் நிலையில் பத்திரமே அடிப்படையில் முக்கியம் என உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
உதாரணத்திற்கு என்னிடம் பட்டா இருக்கிறது, ஆனால் பத்திரம் இல்லை என சிலர் கூறுவதை பார்த்திருக்கலாம். பத்திரம் தான் வருவாய் ஆவணங்களுக்கான ஆவண ஆதாரமாக உள்ளது. ஒரு பத்திரத்தின் அடிப்படையிலேயே பட்டா வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பத்திரம் மட்டும் இருக்கும் நிலம் புறம்போக்கு நிலம் என்றும் சொல்லலாம். அந்த நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தினால் ஒன்றுமே செய்ய முடியாது என்பதை கவனிக்க வேண்டும்.
ஆனால் பட்டா இருக்கிற நிலம் சட்டப்பூர்வ நிலம் அதை அரசாங்கம் கையகப்படுத்தினாலும், அதற்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ஒரு நிலத்திற்கு பட்டாவும் முக்கியம் பத்திரப்பதிவும் முக்கியம் என்பதையும் கவனிக்க வேண்டும். அரசாங்கத்திடம் நீங்கள் இலவச வீட்டு மனை பட்டா பெற்று இருந்தாலும், பிற்காலத்தில் அதனை மாற்றும்போது அதற்கு பத்திரம் தேவைப்படும். எனவே பட்டா பத்திரம் ஆகிய இரண்டையுமே உரிய ஆவணப்படுத்தி வைத்துக்கொள்வது அவசியம்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications