அமெரிக்காவில் சாதி கேட்டாரா பட்டிமன்றம் ராஜா.. உண்மை என்ன.. சாலமன் பாப்பையா வெளியிட்ட விளக்கம்
சென்னை: தம்பி ராஜாவைப் பற்றி ஒரு தவறான செய்தி நம்முடைய ஊடகங்களில் போய்க்கொண்டிருப்பதை நான் காண்கிறேன், கேட்கிறேன். யாரோ ஒரு தாய் அறிந்தோ அறியாமலோ அவரை பற்றி ஒரு தவறான கணிப்பிலே இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். ராஜா என்னுடைய பண்ணையிலே 45 ஆண்டுகளுக்கு மேலே இருக்கிறார், அவர் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். என்னுடைய பிள்ளை அது. சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாரதியின் சந்தத்தை அவருடைய சிந்தையில் ஏற்றுக்கொண்டவர் என பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா வீடியோவில் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் கடந்த பிப்ரவரி 3ம் தேதி நடைபெற்ற தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியில், பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா கலந்து கொண்டிருந்தார். அங்கு அவருக்கு உணவு பரிமாறப்பட்டிருக்கிறது. அப்போது தனக்கு உணவு வழங்கிய பெண் ஒருவரின் சாதி குறித்து ராஜா கேள்வியெழுப்பியதாக, சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்ணின் சகோதரர், சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த பதிவு வைரலான நிலையில், பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவுக்கு எதிர்ப்புகள் எழுந்தது சாதி கேட்பது என்ன மாதிரியான பழக்கம். உணவு பரிமாறுபவரிடம் உணவு குறித்துதான் கேட்க வேண்டுமே தவிர, அந்த இடத்தில் சாதி குறித்து கேட்க வேண்டிய அவசியம் என்ன?' என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து பட்டிமன்றம் பேச்சாளர் ராஜா இதற்கு விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உணவு மிகவும் ருசியாக இருந்த காரணத்தால், அது செட்டிநாட்டு முறைப்படி சமைக்கப்பட்டதா என்பதை அறியவே "செட்டிநாடா?" என்று கேட்டேன். மற்றபடி "செட்டியாரா?" என்று சாதி ரீதியாகத் தான் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.
அந்த வீடியோவில் பட்டிமன்றம் ராஜா கூறுகையில், ஒரு செய்தியை விளக்கமாக தர விரும்புகிறேன். அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் நாங்கள் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு வரும் போது, பல தமிழ் குடும்பங்கள் வந்தார்கள். அப்படி நிகழ்ச்சிக்கு வருபவர்கள், எங்களுக்கு சமைத்து சாப்பாடு போடுவார்கள்.. சில நேரங்களில் சாப்பாடு, நம்ம ஊர் உணவைவிட சுவையாக இருக்கும்.. அப்ப அவங்க ஊர் பெயரையும் சொல்லுவார்கள்...சிலர் என்னிடம் நான் உங்கள் ஊர் சார் மதுரை. நான் திருச்சி, நான் வாடிப்பட்டி, நான் தேனி.. இப்படி எல்லாம் சொல்வார்கள்.. அப்ப ஒருத்தவங்க காரைக்குடி என்று சொன்னார்கள்..
சின்ன புத்தி இல்லை
அவரிடம் நான் செட்டிநாடா என்று கேட்டதாக நியாபகம் உள்ளது. செட்டியாரா என்று நான் கேட்கவில்லை.. அவ்வளவு சுவையாக செட்டிநாட்டு உணவு இருக்கிறதே என்று தான் கேட்டதாக நியாபகம் இருக்கிறது. அவர்கள் யார்.. என்ன ஜாதி என்று யோசிக்கும் அளவிற்கு எனக்கு சின்ன புத்தி இல்லை.. தமிழ் சொந்தங்களே.. தயவு செய்து இந்த கருத்துக்களை புறந்தள்ளுங்கள்..
தவறான புரிதல்
கடவுள் அறிய அந்த மாதிரி நான் நடந்ததாக எனக்கு தெரியவில்லை.. இந்த பயணங்களே ரொம்ப கஷ்டமானதுங்க.. அங்க தான் சாப்பாடு கொடுத்து எங்களை கொஞ்சமாவது காப்பாத்துறாங்க.. அவங்களை போய் நான் ஜாதி எல்லாம் கேட்க முடியுமா.. கேட்பேனா.. எதற்கு கேட்கணும்.. என் பிள்ளைகள் மாதிரி வந்து நிற்கிறார்கள்.. அவங்க கிட்ட போய் நான் எப்படி கேட்க முடியும்.. தவறான புரிதல் இருந்தால் கருத்துக்களை மாற்றிக்கொள்ளுங்கள்.." என்று பட்டிமன்றம் கூறியிருந்தார்
சாலமன் பாப்பையா ஆதரவு
பட்டிமன்றம் ராஜாவின் வீடியோவை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையாவும் ராஜாவிற்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், தமிழ் மக்களுக்கு என் அன்பான வணக்கம். தம்பி ராஜாவைப் பற்றி ஒரு தவறான செய்தி நம்முடைய ஊடகங்களில் போய்க்கொண்டிருப்பதை நான் காண்கிறேன், கேட்கிறேன். யாரோ ஒரு தாய், அறிந்தோ அறியாமலோ அவரை பற்றி ஒரு தவறான கணிப்பிலே இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.
சத்தியம் செய்து சொல்லுவேன்
ராஜா என்னுடைய பண்ணையிலே 45 ஆண்டுகளுக்கு மேலே இருக்கிறார், அவர் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். என்னுடைய பிள்ளை அது. சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாரதியின் சந்தத்தை அவருடைய சிந்தையில் ஏற்றுக்கொண்டவர். அவருக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் கிஞ்சித்தும் இருக்காது என்பதை நான் சத்தியம் செய்து சொல்லுவேன்.
தவறான கணிப்பு
ஆனால் அப்படிப்பட்ட மனிதரை ஏதோ ஒரு தவறான கணிப்பினால் இப்படிச் சொல்லியிருப்பது எனக்குத் தெரியவில்லை. நான் அங்கு இல்லாதபோது எதையும் உறுதிப்படுத்த முடியாது. ஆனால் அவருடைய மனசுக்குள்ளே சாதிய உணர்வோ அதைப் பற்றிய சிந்தனையோ கிஞ்சித்தும் இல்லை என்பதை நான் ஆயிரம் முறை சத்தியம் பண்ணி சொல்லுவேன். அவரைப் பற்றி இப்படிச் சொன்னது உள்ளபடியே எனக்கெல்லாம் மிகப்பெரிய வருத்தம்.
தமிழர்களுக்கு நல்லது அல்ல
எங்களுடைய பண்ணையில யாருமே அப்படி இல்லை, அப்படி வளர்ந்தவர்கள் நாங்கள் யாருமே அப்படி இல்லை. ஏன் இந்த தவறான கருத்து வந்தது, அதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் வேறு இருக்கிறது என்பதைப் பார்க்கிறபோது, நட்பை விட பகைமை மேலோங்கி இருப்பதைக் காண்கிறேன். இது தமிழர்களுக்கு நல்லது அல்ல, தமிழ் வளர்ச்சிக்கு இது நல்லதும் அல்ல. அதனால் மிகப் பணிவாக உங்களிடம் கேட்கிறேன், எதுவாக இருந்தாலும் அவரிடம் நேரே கேட்டிருக்கலாம், அவரை திருத்தி இருக்கலாம். அந்தத் தாய் திருத்துவதற்கு பதிலாக இந்தப் பதிவை செய்து பகைமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களிடத்தில் என்னுடைய வருத்தத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜா அப்படிப்பட்டவர் அல்ல என்பதை மீண்டும் நான் உறுதிப்படுத்துகிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications