சென்னை மெரினா லூப் சாலை டூ பெசன்ட் நகர்.. அடையாறில் 1.5 கி.மீ நீள கேபிள் பாலம் எப்படி இருக்கும்?
சென்னை: சென்னை மெரினா லூப் சாலையில் உள்ள பட்டினம்பாக்கம் ஸ்ரீனிவாசபுரத்திலிருந்து பெசன்ட் நகர் பீச்சிற்கு அருகிலுள்ள ஊரூர் ஓல்காட் குப்பத்தை இணைக்கும் வகையில், அடையாறு ஆற்றின் குறுக்கே கேபிள் பாலம் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி டெண்டர்களை வெளியிட்டுள்ளது. ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்பட்ட டெண்டரில், 1.5 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலம் குறித்து முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது.
சென்னையில் அண்ணா சதுக்கம் தொடங்கி பட்டினம்பாக்கம் வரை ஐந்து கிலோ மீட்டர் நீளத்திற்கு மெரினா கடற்கரை நீண்டு உள்ளது. ஆனால் அதன் பிறகு அடையாறு ஆறு சந்திக்கிறது. அதேபோல் அதற்கு அடுத்து எம்ஆர்சி நகரை கடந்து அடையாறு கடலில் கலக்கும் முகத்துவாரம் இருக்கிறது. தற்போதைய நிலையில் மெரினா லூப் சாலையில் வாகனங்கள் பயணித்து அதன்பிறகு எம் ஆர் சி நகர் பிரதான சாலை வழியாகவே அடையாறுக்கு போக முடியும் என்கிற நிலை உள்ளது. எம்ஆர்சி நகர் கடலை ஒட்டியுள்ள அடையாறு முகத்துவாரத்தில் இருக்கிறது.

மிகப் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள், விஐபிக்கள் வீடுகள், சென்னையின் மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டல், பூங்கா, தமிழ்நாட்டின் பிரபல தொலைக்காட்சி, சென்னையின் மிகப் பிரபலமான மண்டபம் , விஐபிக்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடம் என எம் ஆர் சி நகர் மிக காஸ்ட்லியான பகுதியாக உள்ளது. இந்த பகுதியை அடுத்து அடையாறு முகத்துவாரம் இருக்கிறது.. இந்த பகுதியில் இருந்து நேரடியாக பட்டினம்பாக்கம் ஸ்ரீநிவசாபுரத்திற்கு செல்ல முடியாது. அதேபோல் பெசன்ட் நகரில் இருந்தும் எம்ஆர்சி நகருக்கு போக முடியாது. இங்கு செல்ல வேண்டும் என்றால் அடையாறு பாலத்தை சுற்றித்தான் செல்ல வேண்டும்.
தற்போது பட்டினம்பாக்கம் முதல் அடையாறு வரை ஏற்படும் போக்குவரத்து நெரிலை குறைக்க பட்டினம்பாக்கம் சீனிவாசபுரத்தில் இருந்து எலியட்ஸ் பீச்சிற்கு மேம்பாலம் அமைக்க அரசு திட்டமிட்டு வந்தது. அது தற்போது உறுதியாகி உள்ளது. மெரினா லூப் சாலையில் உள்ள பட்டினம்பாக்கம் ஸ்ரீனிவாசபுரத்திலிருந்து எலியட்ஸ் பீச்சிற்கு அருகிலுள்ள ஊரூர் ஓல்காட் குப்பத்தை இணைக்கும் வகையில், அடையார் ஆற்றின் குறுக்கே கேபிள் பாலம் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி டெண்டர்களை வெளியிட்டுள்ளது
ரூ.20 லட்சம் மதிப்புள்ள இந்த டெண்டர் அறிக்கையில், மேம்பாலத்திற்கான தூண்களின் எண்ணிக்கை, பாலம் அமையும் இடத்தை நிர்ணயிப்பது, மேம்பாலங்கள் மற்றும் இறங்குபாலங்களின் இடங்களை வடிவமைப்பது, கட்டுமானத்தின் போது போக்குவரத்து மாற்றுப்பாதைகளைத் திட்டமிடுவது மற்றும் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளின் எண்ணிக்கையை அடையாளம் காண்பது போன்ற முக்கியமான விஷயங்கள் இடம் பெற்றுள்ளது.
1.5 கி.மீ நீளத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த கேபிள் பாலம், தற்போதுள்ள 'உடைந்த பாலத்தை' மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் மெரினாவில் இருந்து நேரடியாக அடையாறு வரும் வகையில், கடலோரப் பகுதிகளுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்ததையும் இந்த கேபிள் பாலம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஐஏஎஸ் கூறும் போது, இந்த கேபிள் பாலத்திற்கு விரிவான திட்ட அறிக்கை விரைவில் இறுதி செய்யப்படும். இதைத் தொடர்ந்து, ஒரு தெளிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படும். பின்னர் அந்த திட்ட மதிப்பீடு தமிழக அரசுக்கு அனுப்பப்படும். இது ஒரு கடலோர பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதி தேவைப்படும் " என்றார். இந்த கேபிள் பாலம் தொடர்பான நிதியுதவி வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக அடையாறு முகத்துவாரத்தில் மீனவ சமூகங்களுக்கிடையிலான போக்குவரத்தை எளிதாக்குவதற்காக 1967 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் தான் 'உடைந்த பாலம்'.. இந்த பாலம் 1977 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளம் காரணம் இடிந்து விழுந்தது. அதன்பிறகு அந்த பாலம் செயல்பாட்டில் இல்லை. மும்பையின் பாந்த்ரா-வொர்லி இடையே உள்ள கேபிள் பாலம் போல் அமைக்கப்பட முன்மொழியப்பட்டுள்ள கேபிள்-தங்கிய பாலம். மிக அழகான வடிவமைப்புடன் இருக்கும் என்கிறார்கள். இந்த பாலம் நான்கு வழிச்சாலையாக இருக்கும் என்றும் கூடுதல் சைக்கிள் ஓட்டுதல் பாதை மற்றும் நடைபாதையுடன் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.
இதனிடையே இந்த கேபிள் பாலம் அமைக்கப்பட்டால் எலியட்ஸ் கடற்கரையில் (பெசன்ட் நகர் பீச்சில்) வார இறுதி நாட்களில், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். கூடுதல் பாலம் காரணமாக ஏராளமான வாகங்கள் மெரினாவில் இருந்து அப்படியே வரும் என்ற அச்சமும் உள்ளூர் மக்களுக்கு இருக்கிறது. அதேபோல் சுற்றுச்சூழல் ஆர்வலர்களோ அடையாறு முகத்துவாரம் என்பது பல்வேறு பறவை இனங்களுக்கு புகலிடமாகவும், மணல் பரப்பு ஆமைகள் கூடு கட்டும் இடமாக இருக்கிறது. இந்த சூழலில் புதிய பாலம் கட்டினால், உயிரினங்களின் வாழ்விடம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று கவலை தெரிவிக்கிறார்கள்
-
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications