நல்லா வருவீங்க! அரை லிட்டர் பெட்ரோலுக்காக நகையை அடகு வைக்கணுமா? தீயாய் பரவும் விளம்பர போஸ்டர்
சென்னை: வியாபாரத்தில்தான் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்ன்னா வட்டிக்கடை நடத்துவோரும் இந்த யுத்தியை கையாள்கிறார்கள்.
மளிகைக்கடை, துணிக்கடை, ஸ்வீட் கடை உள்ளிட்டவைகளில் வியாபாரத்தை பெருக்க ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், இத்தனை சதவீதம் டிஸ்கவுண்ட், இத்தனை ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் இந்த பொருள்கள் எல்லாம் இலவசம். தங்கம் வாங்கினால் வெள்ளி இலவசம்.

இப்படி வாடிக்கையாளர்களை கவர விதவிதமான அறிவிப்புகளை பார்த்திருப்போம். இப்போது வட்டிக் கடைக்காரர்கள் கூட வாடிக்கையாளர்களை கவர இலவசங்களை அறிவித்துள்ளார்கள். இது குறித்து விளம்பரம் வைரலாகி வருகிறது.
கும்மிடிப்பூண்டியில் தனியார் அடகு கடை ஒன்றுதான் இது போன்ற வியாபாரத்தை அதிகரிக்கும் உத்தியை கையாண்டுள்ளது. ரூ 5 ஆயிரம் முதல் ரூ 10 ஆயிரம் வரை நகை அடகு வைத்தால் அரை லிட்டர் சமையல் எண்ணெ் இலவசம். ரூ 30 ஆயிரம் வரை அடகு வைத்தால் அரை லிட்டர் சமையல் எண்ணெய்யுடன் அரை லிட்டர் பெட்ரோலும் இலவசம்.
ரூ 40 ஆயிரம் வரை அடகு வைத்தால் கூடுதலாக 5 கிராம் வெள்ளி இலவசம். ரூ 40 ஆயிரத்திற்கு மேல் அடகு வைத்தால் தலா ஒரு லிட்டர் பெட்ரோல், சமையல் எண்ணெயுடன் 10 கிராம் வெள்ளி நகை கிடைக்கும். கும்மிடிப்பூண்டியில் இது போன்றதொரு அறிவிப்பை பார்க்கும் மக்கள் நகையை வாங்கத்தான் இப்படி விளம்பரம் கொடுக்கிறார்கள். இவர்கள் என்ன நகையை விற்க கொடுத்துள்ளார்களே என்கிறார்களாம்.
ஒரு சில நகை அடகு கடைகளில் நகையை அடகு வைத்தால் தீபாவளி கிப்ட்டாக பாத்திரங்களை கொடுக்கும் வழக்கமும் இருக்கிறது. இதெல்லாம் விளம்பர யுத்தி என்றாலும் கடன் வாங்காமல் இருப்பதை வைத்து குடும்பம் நடத்தத்தான் பெரியவர்கள் புத்தி சொல்வார்கள். ஆனால் இவர்களோ இவர்களுக்கு வட்டி கிடைக்கும் என்பதற்காக இவ்வாறு செய்வது கொள்ளையடிப்பதற்கு சமம் என பலர் விமர்சிக்கிறார்கள்.
இந்த இலவசங்களை விட இரட்டிப்பு மடங்கு அவர்கள் வட்டி மூலம் சம்பாதித்துவிடுவார்கள் என்பதை கூட அறியாமல் இவர்களிடம் எத்தனை பேர் நகைகளை வைத்து கடனாளியாக போகிறார்களோ என்பதே சமூக ஆர்வலர்களின் கவலையாக இருக்கிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications